ஆகஸ்ட் 27, 2012

தமிழ வலைப்பதிவர் குழுமம்இது ...
பன்முகத்தன்மை கொண்டவர்கள்
பறைசாற்றுகிற களம்.

இங்கு ...

விடிந்தால்  புதிய புதிய செய்திகள் .
மாறுபட்ட  சிந்தனைகள்
மகத்தான  கண்ணோட்டங்கள் .

மனிதனை

" மா " மனிதனாக ஆக்குகிற
கோட்பாடுகளை  விதைக்கும் அறச்சாலைகள்
புதியன படைக்கத்தூண்டும்
வேள்விச்சாலைகளும் உண்டு .

இங்கு ...

மூழ்கி  முத்தெடுத்து
சமூகத்திற்கே  அர்ப்பணிக்கிறவர்களும்உண்டு.
காட்டாற்று  வெள்ளமாய்  பாயும்
கருத்துப்  பட்டறைகளும்  உண்டு .

இங்கு ...

தன்னுணர்வில்  வீழ்ந்து 
கிடப்பவர்களும் உண்டு
மக்கள்  நலன்பேசும்
சமத்துவ
வாதிகளும்  உண்டு.

சிந்தையுள்  பட்டதை

சந்தைப்  பொருளாக்குகிறவர்களும்
கண்ணில்  பட்டதை
ஓவியமாக்கி  வண்ணச் சிறகு
விரித்து விண்ணில்
பறக்கிரவர்களும்  உண்டு .

சின்னத்திரையையும்

வண்ணத்திரையையும்
பக்கம் பக்கம்மாய்
ஆய்வு  செய்கிறவர்களும்  உண்டு .

செப்படி  வித்தைபோலே

கண்கட்டி  வித்தை  காட்டி
கவர்ந்திழுக்கும்  நல்லவர்களும்  உண்டு.
உள்ளங்  கவர்  கள்வர்போலே
கருத்துகளை  களவுசெய்து
பட்டைதீட்டி  பதிப்பிக்கும்
பண்பாளர்களும்  உண்டு .

ஆனாலும்  நாமனைவரும்

ஓர் சாதி ஆம்
தமிழ்  வலைப்பதிவர்சாதி .

பதிவுலகச்  சான்றோரே !

நமக்கென  ஒரு பெருங்
கூட்டம்  கூட்டினீர்  நன்றி .

இனி ...

ஊர்தோறும்  வேடந்தங்கலாய்
கிளை  பதிப்போம் அதில்
நாமனைவரும்  ஒன்றுகூடி
புதியன  படைப்போம் .

கருத்துக்  களின் கருவூலமாய்

தமிழர்தம் உயரிய  கலைகள்
பண்பாடு நாகரீகம்
தமிழர்  தத்துவம்
தமிழ  மருத்துவம் -ஆம்
சித்தர்களின்   சீரிய
சித்தமருத்துவம்
விளையாட்டு ...
கட்டிடக்கலைகள்
ஒக  இருக்கை...
இசை  நடனம்
போன்ற  வற்றோடு  நம்
புறநானூற்றையும்  புரட்டி
அகநானூற்றையும்  அகழ்ந்தெடுத்து
இந்த  சமூகத்தை
வழி  நடத்துவோம் .

பொழுது  போக்கு

அம்சங்கள்    தேவைதான்   அது
ஊருகாய்போல  இருந்தால்    நன்று
ஊறுகாய்  உணவும்   ஆகிவிடாது
ஆகிவிடக்கூடாது .
 .

அறிவு 
சான்றீர் 
அறத்தை  விதைப்போம்  
நல்லன  அறுவடை  செய்வோம்
களத்தில்  இருக்கும்  நாம்
கருத்தினில்  ஒன்றிணைந்து
புதியன புகுத்துவோம் 


அன்பும்
  அமைதியும் 
பெருக்கெடுக்க  
நன்மையையும்   நேர்மையும்
செழித்தோங்க 

அறிவெனும்  கருவி  ஏந்தி
வென்றெடுப்போம்  புத்துலகை .

நேற்று  நடந்த  பதிவர்களின்  சந்திப்பில் நடந்த  பாவரங்கில்  கலந்து கொண்டு  வாசித்த  பா .
விழா மிகவும் சிறப்பாக  நடந்தேறியது . விழாக்குழுவினருக்கு நமது  பாராட்டுகள் .

                     தமிழன்புடன் ...... போளூர்  தயாநிதி 

 . 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...