நவம்பர் 19, 2012
திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் -2
ஒரு பொறியாளர் பெங்களூருவில் வசிக்கிறார் நாங்கள் பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள் இதில் இருந்து விடுபட
நீங்கள்தான் வழிசொல்ல வேண்டும் . அதை விடுத்து எங்களை சாடுவது சரியில்லை என்கிறார் . உண்மைதான் இந்த சமூகம் மாற்றம் பெற வேண்டும் என என்னும் போது நாம் உடனே பலனை எதிர் பார்க்கிறேன் பலன் இல்லை என்றால் நமது விமர்சனம் தொடருகிறது. முறையில்லாத உணவுப் பழக்கம் முறையில்லாத வாழ்க்கைமுறை இவைகள் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறது . என சான்றுகளுடன் கோரினால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கு எமது விமர்சனம் தொடருகிறது.....
இன்றைய முறையில்லாத உணவுமுறை முறையில்லாத வாழ்க்கைமுறை எல்லாமே கேட்டை செய்யக் கூடியது மயக்கப் பொருட்கள் (குடி,புகை ) இரண்டுமே உடலை அழிக்கக் கூடிய நச்சுகள் தீபாவளிக்கு நாட்டில் மிகவும் பின் தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் எட்டு கோடிக்கு மது விற்பனை எனக்கு இவர்களைப் பார்த்து மகிழவா தோணும் ? அதனால் தான் திட்டித் தீர்க்கிறேன் போதுமா நண்பரே .
இந்த மயக்கப் பொருட்களினால் விந்தணுக்கள் பாதிக்கப் படுகிறது அடுத்த கட்ட தலைமுறை நோயாளியகித் தானே போகும் . நேரந்தவறிய முறையில்லாத உணவுகள் நோயைத்தனே உண்டாக்கும் ? நீங்கள் நோயாளியாக இருந்தால் மரபு வழியான உங்களின் விந்தணுக்களில் இருந்து உயிர் பெரும் குழந்தைகள் நோயாளியாகிப் போவார்கள் தானே ? நீங்கள் முறையில்லாது விழுங்கப் படும் மேலை நாட்டு மட்டரக உணவு உங்களை நோயாளியகத்தானே செய்யும்
எனவே முறையில்லாத தவறான பழக்கங்களை விட்டொழிக்க வேண்டுகிறேன் உணவு முறையில் இயற்கை சார்ந்த உணவு தேவை ஒருவேளை சமைக்கப் படாத உணவாக இருத்தல் மிகவும் நல்லது கரணம் இந்த சமைக்கப் படாத உணவு குருதியை முழு தூய்மையாக்கும் . எனக்கு தேவை எதிர்கால தலைமுறையினர் நோயில்லாத இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என்பதே எனவே முதலில் உங்களில் இருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன் இன்று இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் புத்துயிர் பெற்று வருகிறது இதே சிறப்புடன் முன்னெடுக்கும் பொது உண்மையில் அடுத்த சில தலை முறைகளில் பழந்தமிழரின் வாழ்க்கை முறையை கட்டமைத்து விடலாம் இயற்கையை மீட்டெடுத்து விடலாம் .
பெண்ணோ அல்லது ஆணோ அழகாக இருக்கிறார்களா என பார்க்க வேண்டாம் உங்களுக்கு ஏற்ற வர்காளாக உங்களின் பழக்க வழக்கங்களுக்கு வாழ்க்கை முறைக்கு ஏற்ற வர்களாக இருக்றார்களா என்பதை கவனியுங்கள் .
உங்களின் வாழ்க்கைத்துணை நோயில்லாமல் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
உங்களின் வாழ்க்கைத்துணை எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலை வைத்து இருக்கிறார் என அறிந்து கொள்க .
குழந்தைப் பேறு தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் கொஞ்சம் நாள் கழித்து அல்லது உடனே என்பதை முடிவு செய்க .
உங்களின் அகவை குறைந்தது இருபத்தைந்திற்கு மேற்பட்டதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் .
உங்களின் பேறு கல மருத்துவ முறை ஆங்கில அல்லது மாற்று மருத்துவமுறை பற்றிய தெளிவான முடிவு செய்க .
உங்களின் மருத்துவரை முதலில் முடிவு செய்க .
எல்லாவற்றிற்கும் இருவரும் முதலில் ஆற்றுப் படுத்துனர் (கவுன்சிலிங் ) பார்த்து முடிவுகள் செய்க .
எதிர்காலம் குறித்து முழுமையான திட்டமிடல்கள் செய்க .
அடுத்த இடுகையில் விரிவாக பேசுவோம் ....
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)