பிப்ரவரி 15, 2012

நோயின்றி வாழ இயற்கைக் குளியல் வரிசை ......


                                                 தொட்டிக்குளியல்  (Tub Bath )

   தொட்டிக் குளியல் மூலம் முதுகுத் தண்டு , இடுப்பு, மற்றும் பிறப்புறுப்புகளை  தூய்மைப்படுத்துதல்  அவற்றில் உள்ள நோய்களை நீக்குக் கொள்ளல்  போன்றவற்றிக்கு  பயன்படுத்தி நலம் பெறலாம்.  ஒரு செவ்வக  வடிவ  தொட்டியில் கால்பகுதி  நீரை நிறப்பி முதுகெளும்ம்பு மட்டும் நினையும் படி  படுத்து இருந்து  அரைமணிநேரம் இருந்து குளித்துவிடலாம், அதேபோல  இடுப்பு மட்டும் நனையும்படி தொட்டியில் நீரை  ஊற்றி அதில் இடுப்பை மட்டும் நனையும்படி  செய்து  பின்னர் எழலாம்.

     ஆளுக்கு தகுந்த மாதிரி  தொட்டியின் அளவை  கூட்டியும் குறைத்தும் பயன்படுத்தி  நீர்வூற்றி தலையும் காலும் வெளியில்      இருக்கும்படி   செய்து இந்த  குளியலை எடுக்கலாம்.. இதனால் முதுகுத் தண்டு குளிர்ந்து இரத்த ஓட்டம் மிகுந்து    உடல்  சுறுசுறுப்பு  அடைகிறது  உடலின்  வெப்பம்  தணிந்து  உடலின் பகுதிகள்  துரிதமாக  பணிசெய்கிறது   இந்த குளியல் முதுகு வலி  உள்ளபோதும்  இடுப்பு வலியுள்ளபோதும்  தேவைக்கு தகுந்தபடி  எடுக்கலாம்.  

 நீராவிக்  குளியல்   (Steam   Bath ) 
       

      மாதந்தோறும்  இந்த குளியல் எடுக்கலாம். தண்ணீரில் நீலமலைத்தழை(நீலகிரி  தழை ) போட்டு  ஆவிக்குளியல் செய்யலாம் . உடலில் திசுக்களில் தேங்கி இருக்கும்   அழுக்குகுகளை  நீக்கி  வியர்வையாக  மாற்றி  வெளியேற்றிவிடும்   உடலில் தேங்கியுள்ள  கெட்ட  நீர் வெளியேறி உடல் தூய்மையடைகிறது  .
       இந்த குளியல் செய்வதால்  உடல்வலி , தலைபாரம் , மண்டையிடி   மூக்கடைப்பு , தலைவலி , தடுமன் ,( ஜலதோஷம் ) கபகட்டுமுதலிய  நோய்கள்  நீங்கும் . 

குறிக்குளியல்  (Chits   Bath  ) 

       உடல்  சூட்டினால்  தக்குதலடையும்போது  நீர் சுருக்கு உண்டாகும்  இந்த சமயத்தில்  குறிக்  குளியல் செயாலாம் . குறி  (பிறப்பு  உறுப்பு  ) ஒரு முக்காலியின்  மேல்  உட்கார்ந்து  கொண்டு   கால்களை  அகட்டி வைத்தது   பிறப்பு உறுப்பை  சில்  என்ற தண்ணீரில் கழுவ  வேண்டும்  பின்னர் வேண்டிய  அளவு நீர் அருந்த  வேண்டும்  பின்னர் உள்ளாடையை   குளிர்ந்த நீரில்  நினைத்து  கட்டிக்  கொண்டு ஐந்து  நிமிடம்  இருந்து பின்னர் அவிழ்த்து விடலாம் . நோய்  நீங்கும் .

 சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...