டிசம்பர் 12, 2010

ஆண்மை நிலைக்க ...!இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் பல்வேறு சிக்கல் களுக்கு பாலியல் தொடர்பான காரணங்களே இருப்பதால் இந்த பதிவு . இன்றைய சூழ் நிலையில் உடலைபாதுகக்கும் பழக்கம் இன்மையால் உடலில் பல்வேறு பிணிகள் தொடங்குகிறது . இவற்றை நீக்கி கொண்டால் முறையான இல்வாழ்வு நீடிக்கும் . அவற்றை கதைப்போம் .

ஆண்மைச் சிக்கல்கள்

இளம் அகவையில் எந்த கட்டுபாடுகளும் கடைபிடிக்காத காரணத்தால் இன்று பாலியல்தொடர்பான
குறைபாடுகள் தோன்றுகிறது . முறையில்லாத உணவு , கட்டுப்பாடில்லாத வாழ்க்கைமுறை ஊடகங்களின் பெருமளவு தாக்கம் போன்றவை மனித வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது . இவற்றை முறைப்படுத்த நம்மிடம் எண்ணற்ற முறைகளை விட்டு சென்றுள்ளனர் நம் முன்னவர்கள் .

குறைகள்

மாங்காய், எலுமிச்சை குடும்ப பழங்கள் , அளவிற்கதிகமான புளிப்பு , காரம், அதிக நேரம் கண்விழித்தல் , முறையில்லாத உணவு பழக்கங்கள் இறுக்கமான ஆடைகள் , வெந்நீர் குளியல்கள் போன்றவைகள் . ஆண்மை குறைபாடுகளுக்கு காரணங்களாக அமையலாம் . இவற்றை நீக்க முயல வேண்டும் .

தீர்வுகள் மற்றும் ஆசன பயிற்சிகள்

உலகில் உள்ள சிக்கல் எல்லாவற்றிக்கும் theervu நம் மண்ணில் விரிந்து கிடக்கின்றன . தரமான தானியங்கள் , மாதுளை , ஆப்பிள் விதை , முருங்கைபூ, போன்றவைகளும் .
வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல் முறையான உணவு பழக்கம் . போன்றவைகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும் .
அவற்றோடு முறையான ஆசன பயிற்சி களும் குறைபாடுகளை நீக்கும் . அந்த பயிற்சிகள் :
சாக்கொராசனம் , அர்த்த உத்தி பாதங்குஸ்தாசனம் , பிரணாசனம் , ஜானு காசியாசனம், சக்கராசனம், போன்ற ஆசன பயிற்சிகள் விந்து பையை பலப்படுத்தி ஆண்மையை வளர்க்கும் .
குறிப்பாக . சர்வாங்க அசுவனி முத்ராசனம் செய்துவர ஆண்மைபலம் பெருகும் ஆண்மை நீட்டிக்கும் .

தமிழர்கலைகளை காப்போம் . மீட்போம் ! நோய் வென்று நீடு வாழ்வோம். .!More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...