ஏப்ரல் 18, 2011

அழகான ஆபத்துகள் ...




இன்று பெரும்பாலான மக்கள் வரட்டுத்தனமான கவர்ச்சியை மட்டுமே நம்புகின்றனர். இது அறியாமையினால் என என்னிவிடவும் கூடுவதில்லை .தெரிந்தே செய்கின்றார்களோ என நினைக்க தோன்றுகிறது .உணவுக்கு நல்ல நிறத்தையும் அழகையும் தர செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதற்கொண்டு அழகு ஆக்கி கொள்ள செய்யப்படும் அழகு சாதனங்கள் வரை மனித உயிர்களுக்கே பெரும் தீங்கை விளைவிக்க கூடியது என பல ஆய்வு முடிவுகள் வெளிவருகிறது .

துரித இன்றைய உணவுகள் இதேவகையை சேர்ந்தவை காரணம் இவைகள் எந்த விதத்திலும் மனித உடலுக்கு ஏற்புடையதல்ல என கூறலாம். பிட்சா, பர்கர் , பரோட்டா போன்ற உணவுகளுக்கும் துரித உணவுகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பட்ட உணவுகளுக்கும் உடல் நலத்திற்கும் எந்த பிணைப்பும் இல்லை எனலாம் . இவைகள் எல்லாமே கடுமையான நோய்களை உண்டாக்குவான என்கிறனர் . உணவுகள் முதற்கொண்டு இன்றைய வாழ்க்கை முறை எல்லாமே மேலை நாட்டு முறையை படி (நகல் ) எடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் நாம் மக்கள் . எந்த ஒரு புதுமையிலும் நன்மையையும் தீமையும் உண்டு தான் என சிலர் வரட்டுவாதம் புரியலாம். இது முட்டுக்கட்டை போடுவதன்றி வேறல்ல. பாவம் இவர்கள் என விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் நோய் இல்லாமல் வாழவேண்டும் என நினைப்பவர்களின் பலரின் பார்வையில் படவேண்டும் என்பதே எமது எண்ணம்.

தமிழகத்தில் ஒரு நடிகரின் மகன் இந்த துரித உணவை மட்டுமே எல்லாநேரமும் எடுத்துக் கொண்டதால் இளைய அகவையில் புற்று நோய் கண்டு மரித்து போனார் என்பது பலர் அறியாத செய்தி.அந்த துரித உணவுகளின் மாறுபட்ட தோற்றமும் சுவையும் கண்மூடித்தனமாக பலரை வீழ்த்தி விடுகிறது.

துரித உணவுகள் புற்றுநோய் முதற்கொண்டு சிறுநீரக செயலிழப்பு ,இரண்டாம்தர சர்க்கரைநோய் என பலநோய்களை உண்டாக்கும் என்கிறார்கள் . உடல் பருமன் எலும்புருக்கி , இரத்த சோகை, போன்ற நோய்களை உண்டாக்கும் என்பது பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. துரித உணவுகள் எல்லாவகையிலும் மனித குலத்திற்கே கேடு என்பது உண்மை .



இப்போது மாம்பழ காலம் இந்த மாம்பழத்தை பழுக்க வைக்க இரசாயணம் கலந்த அதாவது ஒருவித கற்களை பழத்தை பரப்பிவிட்டு
அதன் நடுவில் இந்த கற்களை வைத்து பழுக்க வைக்கிறனர் . இது பல்வேறு பிணிகளை உண்டாக்குகிறது சடங்கு போல பல இடங்களில் மாம்பழத்தை அரசு அலுவலர்கள் கைபற்றி அழித்து விட்டதாக கூறுவார்கள் . இது சடங்கு அன்றி வேறல்ல. காரணம் பழங்களை குறிப்பாக மாம்பழத்தை பொறுத்தவரை கல் வைக்காமல் பழுக்க வைக்க இயலாது என்று மாம்பழ விற்பனையாளர்களும் பழ மண்டிக் காரர்களும் கூறுகின்றனர் . அதாவது இயற்கையாக பழத்தை பழுக்க வைத்தால் வெறும் பத்து விழுக்காடு பழமே பழுக்கும் எனவும் மீதம் உள்ளவை கெட்டுபோகும் எனவும் கூறுகின்றனர் . இந்த இரசாயண கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் நல்ல நிறத்துடனும் , எல்லா பழங்களும் ஒரே நாளில் பழுத்துவிடும் என்று கூறுகின்றனர்.இதற்க்கு தீர்வை உங்களிடமே விட்டுவிடுகிறேன் .

அதேபோல இனிப்பகங்களில் (மிட்டாய்) கடைகளில் பார்த்தல் எல்லாமே வண்ண வண்ண நிறம் கொண்டதாக இருக்கும் இவைகள் எல்லாமே செயற்கை இரசாயனங்கள் கலந்த இனிப்புகள் இவைகளினால்சிறுநீரக செயலிழப்பு முதற்கொண்டு பல்வேறு நோய்கள் வருகிறது . வண்ணம் இல்லாத இனிப்புகளை யாரும் வாங்குவதில்லை என விர்ப்பனையளர்கள் கூறுகின்றனர் .இதற்க்கு யார் பொறுப்பு ?விழிப்போடு இருக்க வேண்டும் அல்லது உண்மைகளை உலகம் முழுமையும் தெரிந்தவர்கள் பரப்புரை செய்ய வேண்டும் தேவையில்லாத செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட உண்மைகளுக்கு தருவத்தில்லை என்பது தானே உண்மை ?

இப்போது சந்தையில் கிடைக்கும் மென்பானங்களும் இதேரகத்தை சேர்ந்ததே , அதேபோல சக்கலேட்டுகளும் இதேவகையை சேர்ந்ததே அதுமட்டுமின்றி பெண்கள் எனின் கருப்பை சேர்ந்த நோய்களை உண்டாக்கும் மிகையான குருதி போக்கு வீட்டுவிலக்கு (பூப்பு காலத்தில் )உண்டாக்கும் .

அது மட்டும் இல்லாமல் இன்று அழகு படுத்தி கொள்ள பயன் படுத்தும் முகச்சாயம் , உதட்டு சாயம் போன்றவை எல்லாமே புற்று நோய் முதற்கொண்டு பல்வேறு நோய்களை வரவழைக்கிறது என்கிறனர் . ஆய்வாளர்கள் உங்களைதனே ? அருள் கூர்ந்து இதை படித்ததற்கு முன் எப்படியோ எனக்கு தெரியாது இனிமேல் இதுபற்றி சிந்திப்பீர்கள் தானே ?
வாழ்க தமிழர்கள் தமிழ் கலைகள் வெல்க .

.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...