ஏப்ரல் 25, 2011

பனை / பதநீரின் மருத்துவ குணங்கள்
இன்று நாம் பழமை பற்றி பேசுவது வெறுமனே வரட்டுவாதம் அல்ல . உண்மையில் நாம் மண்ணில் மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். முந்தய இடுகையில் அம்மைக்கு யாழ்ப்பாணத்தில் பதநீர் வழங்குவார்கள் என ஹேமா குறிப்பிட்டு இருந்தார் . இந்த காலத்தில்தான் பதநீர் இறக்குவார்கள் எனவே அதைப்பற்றி எழுதலாமே என எண்ணி இந்த இடுகை .

இந்த பதநீர் ஒரு சைவ பானம்அதுமட்டும் அல்ல நமது தமிழதேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம் . நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும் ,பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள் .

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி
பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

பதநீர்

இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

௧ .சக்கரை 28 .8 கிராம்
௨. காரம் 7 .௨ கிராம்
௩. சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
௪. இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
௫ பாசுபரசு 32 .4 மி.கிராம்
௬. தயமின் 82 .3 மி.கிராம்
௭ ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
௮ அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
௯ . நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10 புரதம் 49 .7 மி.கிராம்
௧௧. கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் கருக்கலத்தில் / பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. எல்லோரின் இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

பாலுணர்வை கூட்டிட

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்
.
அழகான பனை மரம் ...அடிக்கடி நினைவில் வரும் ...அடிக்கடி நினைவில் வரும் ...


சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

ஏப்ரல் 18, 2011

அழகான ஆபத்துகள் ...
இன்று பெரும்பாலான மக்கள் வரட்டுத்தனமான கவர்ச்சியை மட்டுமே நம்புகின்றனர். இது அறியாமையினால் என என்னிவிடவும் கூடுவதில்லை .தெரிந்தே செய்கின்றார்களோ என நினைக்க தோன்றுகிறது .உணவுக்கு நல்ல நிறத்தையும் அழகையும் தர செய்யப்படும் உணவுப்பொருட்கள் முதற்கொண்டு அழகு ஆக்கி கொள்ள செய்யப்படும் அழகு சாதனங்கள் வரை மனித உயிர்களுக்கே பெரும் தீங்கை விளைவிக்க கூடியது என பல ஆய்வு முடிவுகள் வெளிவருகிறது .

துரித இன்றைய உணவுகள் இதேவகையை சேர்ந்தவை காரணம் இவைகள் எந்த விதத்திலும் மனித உடலுக்கு ஏற்புடையதல்ல என கூறலாம். பிட்சா, பர்கர் , பரோட்டா போன்ற உணவுகளுக்கும் துரித உணவுகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பட்ட உணவுகளுக்கும் உடல் நலத்திற்கும் எந்த பிணைப்பும் இல்லை எனலாம் . இவைகள் எல்லாமே கடுமையான நோய்களை உண்டாக்குவான என்கிறனர் . உணவுகள் முதற்கொண்டு இன்றைய வாழ்க்கை முறை எல்லாமே மேலை நாட்டு முறையை படி (நகல் ) எடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் நாம் மக்கள் . எந்த ஒரு புதுமையிலும் நன்மையையும் தீமையும் உண்டு தான் என சிலர் வரட்டுவாதம் புரியலாம். இது முட்டுக்கட்டை போடுவதன்றி வேறல்ல. பாவம் இவர்கள் என விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் நோய் இல்லாமல் வாழவேண்டும் என நினைப்பவர்களின் பலரின் பார்வையில் படவேண்டும் என்பதே எமது எண்ணம்.

தமிழகத்தில் ஒரு நடிகரின் மகன் இந்த துரித உணவை மட்டுமே எல்லாநேரமும் எடுத்துக் கொண்டதால் இளைய அகவையில் புற்று நோய் கண்டு மரித்து போனார் என்பது பலர் அறியாத செய்தி.அந்த துரித உணவுகளின் மாறுபட்ட தோற்றமும் சுவையும் கண்மூடித்தனமாக பலரை வீழ்த்தி விடுகிறது.

துரித உணவுகள் புற்றுநோய் முதற்கொண்டு சிறுநீரக செயலிழப்பு ,இரண்டாம்தர சர்க்கரைநோய் என பலநோய்களை உண்டாக்கும் என்கிறார்கள் . உடல் பருமன் எலும்புருக்கி , இரத்த சோகை, போன்ற நோய்களை உண்டாக்கும் என்பது பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. துரித உணவுகள் எல்லாவகையிலும் மனித குலத்திற்கே கேடு என்பது உண்மை .இப்போது மாம்பழ காலம் இந்த மாம்பழத்தை பழுக்க வைக்க இரசாயணம் கலந்த அதாவது ஒருவித கற்களை பழத்தை பரப்பிவிட்டு
அதன் நடுவில் இந்த கற்களை வைத்து பழுக்க வைக்கிறனர் . இது பல்வேறு பிணிகளை உண்டாக்குகிறது சடங்கு போல பல இடங்களில் மாம்பழத்தை அரசு அலுவலர்கள் கைபற்றி அழித்து விட்டதாக கூறுவார்கள் . இது சடங்கு அன்றி வேறல்ல. காரணம் பழங்களை குறிப்பாக மாம்பழத்தை பொறுத்தவரை கல் வைக்காமல் பழுக்க வைக்க இயலாது என்று மாம்பழ விற்பனையாளர்களும் பழ மண்டிக் காரர்களும் கூறுகின்றனர் . அதாவது இயற்கையாக பழத்தை பழுக்க வைத்தால் வெறும் பத்து விழுக்காடு பழமே பழுக்கும் எனவும் மீதம் உள்ளவை கெட்டுபோகும் எனவும் கூறுகின்றனர் . இந்த இரசாயண கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் நல்ல நிறத்துடனும் , எல்லா பழங்களும் ஒரே நாளில் பழுத்துவிடும் என்று கூறுகின்றனர்.இதற்க்கு தீர்வை உங்களிடமே விட்டுவிடுகிறேன் .

அதேபோல இனிப்பகங்களில் (மிட்டாய்) கடைகளில் பார்த்தல் எல்லாமே வண்ண வண்ண நிறம் கொண்டதாக இருக்கும் இவைகள் எல்லாமே செயற்கை இரசாயனங்கள் கலந்த இனிப்புகள் இவைகளினால்சிறுநீரக செயலிழப்பு முதற்கொண்டு பல்வேறு நோய்கள் வருகிறது . வண்ணம் இல்லாத இனிப்புகளை யாரும் வாங்குவதில்லை என விர்ப்பனையளர்கள் கூறுகின்றனர் .இதற்க்கு யார் பொறுப்பு ?விழிப்போடு இருக்க வேண்டும் அல்லது உண்மைகளை உலகம் முழுமையும் தெரிந்தவர்கள் பரப்புரை செய்ய வேண்டும் தேவையில்லாத செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட உண்மைகளுக்கு தருவத்தில்லை என்பது தானே உண்மை ?

இப்போது சந்தையில் கிடைக்கும் மென்பானங்களும் இதேரகத்தை சேர்ந்ததே , அதேபோல சக்கலேட்டுகளும் இதேவகையை சேர்ந்ததே அதுமட்டுமின்றி பெண்கள் எனின் கருப்பை சேர்ந்த நோய்களை உண்டாக்கும் மிகையான குருதி போக்கு வீட்டுவிலக்கு (பூப்பு காலத்தில் )உண்டாக்கும் .

அது மட்டும் இல்லாமல் இன்று அழகு படுத்தி கொள்ள பயன் படுத்தும் முகச்சாயம் , உதட்டு சாயம் போன்றவை எல்லாமே புற்று நோய் முதற்கொண்டு பல்வேறு நோய்களை வரவழைக்கிறது என்கிறனர் . ஆய்வாளர்கள் உங்களைதனே ? அருள் கூர்ந்து இதை படித்ததற்கு முன் எப்படியோ எனக்கு தெரியாது இனிமேல் இதுபற்றி சிந்திப்பீர்கள் தானே ?
வாழ்க தமிழர்கள் தமிழ் கலைகள் வெல்க .

.More than a Blog Aggregator

ஏப்ரல் 10, 2011

அம்மை நோய் (chicken pox)
அம்மை நோயை பொறுத்தவரை "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் " என்ற சித்தர்களின் வாக்கிற்கு
ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு மாந்த உடல் தட்ப வெப்ப மாறுதலடையும். கோடைகாலத்தில் வெய்யலின் கொடுமையால் மனித உடல் சூடாகி அழல் குற்றம் (பித்தம் ) மிகுந்து அந்த சூழலில் மழை பெய்தால் ஐ (கப ) குற்றம் சேர்ந்து அழலையமாகி இந்த நோயை உண்டாக்குகிறது.

இதே மாரிக்காலத்தில் உயிரில் ஐ குற்றம் மிகுந்து அந்த வேலை வெய்யலினால் அழல் (பித்தம் )சேர்ந்து ஐயழல் குற்றம் உண்டாகி இந்த அம்மை நோய் தோற்றம் கொள்ளும் என்கிறனர் சித்தர்கள்.

இந்த நோய் வகைகள்

பனை முகரி, பாலம்மை, வரகு திரி , கொள்ளம்மை , கல்லுதிரி , கடுகம்மை , மிளகம்மை , உப்புத்திரி , கரும்பனிசை , வெந்தய அம்மை , பாசிபயரம்மை , விச்சிரிப்பு , குளுவன், தவளையம்மை , என பதினான்கு வகைப்படும் .

இவைமட்டும் அல்லது

பெரியம்மை .
சிறிய அம்மை (.விளையாட்டம்மை)
தட்டம்மை .
புட்டாலம்மை . எனவும் வழங்க படுகிறது.

அம்மை நோயின் பொதுவான குறி குணங்கள் .

சுரம் காய்தல் , உடல் வலி,தலைவலி , இடுப்பில் உளைசல் , தலைபாரம், உடம்பு எரிதல், கண் சிவத்தல் , தும்மல் , கக்கல் (வாந்தி )மூக்கில் நீர்பாய்தல் , வாயில்/ உடம்பில் ஒருவித நெய் மணம் . போன்றவை இருக்கும். இவற்றுடன் மூன்று ,நான்கு நாளில் காய்சல் குறைந்து தலையில் குருக்கள் தோன்றி உடம்பெல்லாம் பரவும் . கொப்புளங்கள் நீர்கோர்த்து பெரிது ஆகும் . சிறுநீர் தடைபடும் . மலமும் கட்டும்.

தொண்டைவலி மயக்கம் பிதற்றல் உடல் வீங்குதல் கொப்புளங்கள் , தாமே உலர்ந்து தோலுரித்தல் நடந்து நோய் குணமாகும்.

இந்த நோயின் காரணமாக நரம்புகள் ,கீல்கள் ஆகியவற்றை தாக்கி முடங்க செய்யும். முறையாக பராமரிப்பு இல்லை எண்டால் உயிருக்கே பாதிப்பை உண்டாக்கலாம். ஆண் மலடு, பெண் மலடு ,போன்றவையும் உண்டாக்கும் .

அம்மை நோயில் உணவுகள் .

சுரம் உள்ள போது கருங் குருவை அரிசி மாவுக் கஞ்சி,பார்லி மாவுக் கஞ்சி , கூவை மாவுக் கஞ்சி ,
ஆகியவற்றை கொடுக்கலாம். சுரம் தணிந்த பின் குளிர்ச்சியான உணவுகளை கொடுக்க வேண்டும் . கேழ்வரகு மாவும் அரிசி நொய்யும் கலந்து தண்ணீர் விட்டு புளிக்க வைத்து கூழ் காய்ச்சி வெங்காயம் அறிந்து போட்டு கொடுக்கலாம் இவை வெப்பத்தை தணிக்கும் . நோய் உள்ள போது ஆறின அரிசி சோறு மிளகு நீர் கூட்டி அருந்தலாம். அம்மை நோய் நீங்கி விட்டால் நீர் மோரும் சோறும் உண்ணலாம் .
காரம் கூடாது. எலுமிச்சை ,பழம்புளி , நெல்லிக்காய் பனைகற்க்கண்டு கறிவேப்பிலை , பச்சைபயறு ,காராமணி , அத்தி பிஞ்சு ,சீனி , கற்கண்டு , முறையாக கொடுக்கலாம்.

படுக்கை

மென்மையானதாக இருக்க வேண்டும் . வேப்பிலையில் படுக்கை தயாரித்ததை பயன் படுத்தலாம் .இது நாம் முன்னோர் கண்டது. இதுவே சிறந்தது. .

ஆகாதவை

தேங்காய் , மாங்காய், நல்லெண்ணெய் , இலுப்ப எண்ணெய், சோற்று ஆவி , நெல் ஆவி , கறிகள் அவித்த வாடை ,பாலுறவு கூடவே கூடாது
.
நோய் எதிர்ப்பாற்றல் பெற

இந்த அம்மை நோயை பொறுத்தவரை அழல் குற்றம் மிகை யாவதால் தோன்றுகிறது எனவே அழல் (பித்தம் ) குறைக்கும் படியான உணவுகள் தேவை .பித்தத்தை வாழை குறைக்கும் என்பதால் இதை நாளும் எடுக்கலாம் .

ஆள்காட்டி குருவிஅமிழ்தம் சித்தமருத்துவர்கள் இதனை பரிந்துரைக்கின்றனர் . இதனை தடைமருத்துவமாக கருதுகின்றனர் . இந்த ஆள்காட்டி குருவியின் முட்டையை உடைத்து சட்டியில் விட்டு சம்பா புழுங்கல் அரிசியை மேற்படி கருவில் அடுப்பேற்றி கருகாமல் பொரியரிசியாக வறுத்து தரம் கண்டவுடன் இடது கை நிறைய கொட்டி வலது கையில் மாற்றி ஒருபிடி அரிசி சாப்பிட வேண்டும் . நோய்க்கு அச்சப்பட தேவையில்லை என்கிறனர் சித்த மருத்துவர்கள்.

மென்பானங்களை நீக்கி இளநீர் ,நுங்கு , தர்பூச்சுனை பழம் எடுக்கலாம் .
வாரம் இரண்டு நாள் எள் நெய் குளியல் செய்யலாம்.
நோய் கடுமையாக முற்றிய நிலையிலும் தேர்ந்த சித்த மருத்துவர்களிடம் சென்றால் நல்ல விரைந்த குணத்தைஅவர் களினால் தரமுடியும் முறையான சித்த மருத்துவத்தை அணுகி நோய் வெல்வோம் .

நோய் வெல்வோம் சித்தமேருத்துவம் காப்போம்More than a Blog Aggregator

ஏப்ரல் 04, 2011

வெள்ளை விசம்

வெள்ளை  விசம்

     இப்போதைய  பெரும்பான்மை  மக்களின் உணவு பழக்கம்  என்பது  விடம்  கலந்த உணவுகளே  இடம்பிடிக்கிறது  . காரணம்  எது  விடம் . எது  நல்லது என்ற  கண்ணோட்டம்  பெறாமைதான்   எனலாம் . இதற்க்கு என்ன செய்வது ? துறை  சார்ந்த  அறிஞ்சர்  களிடம்  விடை தேடவேண்டியதுதான் .  வெள்ளை விடம் என்பது என்ன ? கதைப்போமா ?

     இன்று கரும்பில் இருந்து பெறப்படும்  சர்க்கரையை  உணவாக  கொள்ளுகின்றனர்  இது இருநூறு ஆண்டுகளாக தான் . இந்த கரும்பில் இருந்து பெறப்படும்  சர்க்கரை  உடலில்  என்ன மாற்றத்தை செய்கிறது? உடலில் பல்வறு நோய்கள்  உள்வாங்கி  கொள்ளுகிறோம்.  அதாவது  உடலில் உள்ள இரும்பு  சத்து , சுன்ன(சுண்ணாம்பு  சத்து )வைட்டமின்கள் போன்றவற்றை உடலில்  இருந்து நீக்குகிறது . இந்த காரணங்களினால் இரத்த சோகை , உடலில்  வலுவின்மை ,தசைகளில் வலி  வலுவற்ற  எலும்புகள்  பற்களில்  சிதைவு  போன்றவை  உண்டாகிறது .

     நாம்  உண்ணும் சர்க்கரை உடலில் உள்ள சுன்ன சத்தை  நீக்குகிறது . இதன் இரசாயன அமைப்பே  மனிதனுக்கு ஏற்றதல்ல என்கிறனர்  ஆய்வாளர்கள் . இதன் தாக்கத்தினால் வயிற்றில்  எரிச்சல் , மற்றும் இரைப்பையில்  புண்ணை  உண்டாக்கும்  என்கிறார்கள் .  அமிலத்தன்மை  வளி(வாயு  தொந்தரவு )உண்டாகும்  என்பது  ஆய்வாளர்கள்  கூறும் விளக்கம் .

    சர்க்கரை  நம் உடலில்  சேர்ந்த போதே  சிறிதளவு வளியுடன்(ஆக்சிஜன் )சேந்து தீவிரமாக மாற்றம்  அடைந்து உணவு மண்டல உறுப்புகளை  திடீரென  தூண்டி  வேலையை  மிகையாக்குகிறது . குபீர் என  தீப்பற்றி  எரிந்து எராளமான  வெப்பத்தையும் சக்தியையும் தந்து விரையில் மறைந்து  விடும் பொருள் போல  வினைநிகழ்த்தி  உடலில் மாற்றத்தை  நிகழ்த்தி  நரம்பு மண்டலத்தை  தளர்ச்சி அடையசெய்கிறது .
இதன் தொடர்ச்சியினால்  ஊட்ட குறைவு  உண்டாகிறது . இதனை செரிக்க  கணையம்  மிகையாக  பணிசெய்ய  வேண்டி   இருக்கிறது . இப்படி தொடர்ந்து  பணியாற்றும்  கணையம்  ஒருநாள்  ஓய்வெடுக்கிறது  அதுதான்  சர்க்கரை  நோய் .  குழந்தைகளுக்கு  சர்க்கரையை  தரவேகூடாது  என்கிறனர் . குழந்தையால் இந்த  கரும்பு  சர்க்கரையை  செரிக்க இயலாது  ஏன் எனின்  இதனை  செரிக்க  குழந்தை  களின் உடலில்  போதிய என்சைம்கள்  இல்லை என்பதுதான்  .
     சர்க்கரையை  உண்ணும்  குழந்தைகள் ஊட்டம் குறைந்து  அமைதியற்று   எளிதில்  உணர்சி யற்று பொலிவு  குன்றுகிறது . மலசிக்கல் , பற்கள் சிதைவு ,போன்ற பல நோய்கள்  தொடருகிறது.  வாயிற்று போக்கு , தொடர்ச்சியினால்  முடக்குவாதம் , மூட்டு  அழற்சி , மூட்டுவலி , இடுப்புவலி , தொண்டை  அழற்சி ,  போன்றவை  உண்டாகிறது .  தொடர்ந்த  மலசிக்கல்  காரணத்தினால்  தோல் நோய்கள் , சொறி  சிரங்கு , போன்ற நோய்களும்  மனிதனுக்கு வருகிறது .
     எவ்வளவு  உண்டலும்  தீராத  பசி  ஏப்பம் , நெஞ்சு  வளி  நெஞ்சு  எரிசிச்சல்  போன்ற நோய் கள்   வருகிறது . இதனால் செரித்தல்  தொல்லை , நாம்பு கோளாறுகள்  என பல நோய் கள் வருகிறது . 

       சர்க்கரை  தின்னாமல் வேறு என்னத்தை தின்னட்டும் என்பது தானே  உங்கள் வினா ? வெல்லம்  இருக்கிறது ,தேன்  இருக்கிறது  பனைவெல்லம்  இருக்கிறது  இவை எல்லாம்  நோயை  உண்டாக்காதா ? என வினவலாம்  இவைகளினால்  மிகையாக எடுத்து கொண்டால்தான்  நோய்  ஆனால் கரும்பு  சர்க்கரை  எடுத்து கொண்டாலே  நோய் . மேலும்  இன்று உள்ள நிலையில் வெல்லமும், தேனும் , பனைவெல்லமும் வேளான்  பெருமக்களை  வாழவைக்கும்  அல்லவா ? அதனால்  நாமும்  நோய் இல்லாமல்  வாழமுடியும்  எல்லோருக்கும்  வேலை  வாய்ப்பும்  கிடைக்கும் சோழியன்  குடுமி  சொம்மா  ஆடாது தயாநிதி சொன்னா அது  எல்லோருடைய  நலனை  உள்ளடக்கியதாக  இருக்கும்தானே ?              இவற்றோடு  மட்டை  தீட்டிய  அரிசியும் , உப்பும்  விடமே  இவற்றை  குறித்தும் நாம்  அறிந்து கொள்ள வேண்டும்    மட்டை தீட்டாத   அரிசியை பயன் படுத்தவும்  வேண்டும் .
வாழ்க  வேளான் பெருமக்கள்  நோய் நீங்கி  நீடுவழ்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...