மே 07, 2012

அயோடின் (ayodin salt) உப்பே தப்பு ... தமிழா என்ன செய்யப் போகிறாய்?


    அண்மையில் கலப்பட  உப்பு  தடைச்  சட்டத்தை  நடுவணரசு  முன்வைதத்தாம்( நீண்ட  நாளாகவே  வந்து விட்டது)  இது யாரை  பாதுகாக்க  அல்லது  யாரை  அழிக்க  என நீங்கள்தான்  முடிவு  செய்து கொள்ள வேண்டும் .

     முன்பு எல்லாம்  எதாவது ஒரு  பொருளில்  கலப்படம்  செய்தால்தான்  தவறு என  அரசு குறைகூறும்  . இன்று  கலப்படம் செய்யவிட்டாலே  கம்பி  என்ன வேண்டி  இருக்கும்  இது  எங்கோ  வெளிநாட்டில்  இல்லை  இந்தியாவில்தான் . அதும்  தமிழன் என்றால்  அவன் ஒரு மனிதனே  இல்லை  ஒரு மலையாளியோ  அல்லது  சீக்கியனோ  சின்ன  எறும்பு  கடிபட்டு விட்டால் கூட  திருவாளர்  பரிசுத்தம்  ஓடோடி  வருவர்  அனால்  தமிழன் .... அவன் கிடக்கிறான் விடுங்கள் ... என .... தூங்க  தொடக்கி விடுவார் .

      உப்பு  இயற்க்கை  அன்னையின் செல்லப்  பிள்ளையான  ஆதவனின்  பார்வைப்  பட்டு கடல் நீரே  உப்பகிவிடுகிறது . இந்த உப்பை அப்படியே  விற்றால்    கலப்படமாம் . கூடவே  கொஞ்சம்  அயோடினை  கலந்து விட்டால்  அது  நல்ல உப்பு ? இது சரியா என யாரவது கேட்டீர்காளா இல்லைதானே   கொஞ்சம்  உங்களின்  இரத்தத்தை  சோதித்துப்  பார்த்துக்  கொள்ளுங்கள்  கப்படமான  இரத்தம்  எதையும் சிந்திக்காது  ...

        அயோடின் சத்து குறைபாட்டுடன்  பிறக்கும்  குழந்தை மந்தத்தன்மை  கொண்டு இருக்கும்  என இன்றைய  மருத்துவம்  கூறுகிறது . இது  பத்தாயிரத்தில் ஒன்று  என்ற  விகிதத்தில்தான்  அதுமட்டும் அல்ல  இந்த அயோடின்  குறைபாடு  மலைப் பிரதேசங்களில்  தான்  இந்த    மிகையாக  இருக்கும். இதை  தடுக்க கருவுற்று இருக்கும்  பெண்களுக்குஅயோடின் கொடுக்க வேண்டும் .

         இதை விட்டுவிட்டு  குறைபாடு இல்லாத  வர்கள்  எல்லோரும்  அயோடின் கலந்த   உப்பை  தின்று  நோயை  பெற்றுக் கொளுங்கள்  என கூறுவது  அறிவுடைமையா ? என  கொஞ்சம்  சிந்திக்க  வேண்டாமா? அது சரி  இந்த அயோடின்  உப்பை தின்று தான் தொலைப்போமே   இதை ஏன்  வேண்டாம்  என  கூறுகின்றார்கள்  என  நீங்கள்  கேட்பது புரிகிறது இந்த  அயோடின் கலந்த உப்பை தின்று  தீர்ப்பதால் பல்வேறு நோய்கள் நம்மை தாககுகிறதாம். அதை தெரிந்துகொள்ள  நீங்கள்  இந்த கட்டுரையை  முழுமையாக படிக்க வேண்டும் . நமது  இடுகையை  எப்போதுமே  முழுமையாக  படித்தால்தான்  என்ன நோக்கத்திற்காக  எழுதப் படுகிறதோ  அது முழுமையாக  புரியும்.. படிக்கின்றீர்களா...?

      இந்த  அயோடின்  கலந்த  உப்பைத்  தின்பதால்  கழுத்து வீங்கித்  தொங்குதல், சிறிது நடந்தாலும்  மூச்சு  வாங்குதல்  எடைக்குறைவு , பசி இன்மை , கை , கால் , நடுக்கம்  என பல  நோய்கள் தாக்கி இருக்கிறதுஎன தமிழ நாடு   அரசு பொது மருத்துவ மனை நாளமில்லா சுரப்பிகளின் பிரிவின் தலைவர்  கூறுகிறார் .மேலும் எவ்வளவு   . எவ்வளவு  சாப்பிட்டாலும்  பசி அடங்காது ...  80   கிலோ  இருந்தவர்கள் கூட  நாற்பது  நாற்பத்தைந்து  கிலோவிற்கு வந்து  விடுவார்கள்  என  இதே  போல  பெண்களும்  இளம்  அகவையில்  இருந்து அறுபது அகவை  வரை  கழுத்தில் அறுவை  சிகிச்சை  செய்யப் பட்டு கைகள் நடுங்கி , உடல் மெலிந்து கண்கள்  வெளியே  தள்ளி   பெரிய நோவில் வீழ்ந்து கிடப்பதை  சான்று களுடன்  கூறுகிறார் .

      தைராய்டு  என்பது நம்  கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு நாமில்லா  சுரப்பி  இது  தைராக்சின்  டி3 ,டி 4  என்ற ஹார்மோனை  சுரக்க செய்கிறது .இது  அளவோடு சுரக்க வேண்டும் . எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்  என மூளையின்  பிட்யூட்டரி சுரப்பியில்  சுரக்கும்  தைராய்டு  ஸ்டி முலேட்டிங்  ஹர்மன் கட்டுப் படுத்து  கிறது  தைரசின்  குறைபாடு இருந்தால்      அதாவது குறைவாக  சுரந்தால் அது ஹைபோ  தைரடிசம்  இதன் பதிப்பால் குழந்தை  மூளை வளர்ச்சி  குறைந்து காணப்படும். இந்த குறைபாடு தமிழகத்தை ப்ருத்தவரை மிகவும்  குறைந்த அளவிலேயே  காணப்படுகிறது . எங்கு குறைந்து காணப்படுகிறதோ  அங்கு கண்டு  இந்த  அயோடினை  கொடுக்கலாம்.

         ஒரு மனிதனுக்கு   அயோடினின்  தேவை மிகவும் குறைவு  அதாவது எழுபது  அகவை  நிரம்பிய  ஒருவர் அவர் வாழ்நாளில்  ஒரு  தேக்கரண்டி  அளவு தான் .  ஆனால் இதை நாளும்  எடுத்துக் கொள்வாதல்  எதிர்கால  குழந்தைகள் முதல் எல்லோருக்கும்  ஜீவனில்  ஆட்டோ  இம்யூன்  தைராய்டைஸ்  என்ற  நோய் தாக்க வாய்ப்பு  இருக்கிறது என்கிறார்  அரசு  பொது மருத்துவர் . அளவுக்கு  மிகையான  அயோடின் மனிதனின் தைராய்டு  சுரப்பியை  சிதைக்கும்    சிதைவுற்ற  அந்த செல்கள் இரத்தத்தில் கலந்து விடுகிறது.  உடனே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது தைராய்டு செல்லுக்கு எதிர்ப்பான நோய் எதிர்ப்பு பொருளை (அன்டிபாடிஸ் ) உற்பத்தி  செய்து விடுகிறது அந்த நோய்  எதிர்ப்பு பொருளானது கொஞ்சம் கொஞ்சமாக தைரய்டை அழித்துவிடும் . முழுவதும் அழிந்து விட்டால்  வாழ்நாள் முழுவதும்  தைரக்சின் ஹார்மொனுக்காக மருந்து எடுக்க  வேண்டும்    . நோய் முற்றிய நிலையில் அறுவை  சிகிச்சைதான்  தீர்வாம் ... தேவையா  முறைய இயற்கையாக கிடைக்கும்  உப்பை தின்பதை விட்டுவிட்டு டாட்டா வையும்  அம்பானிகளையும்  வாழ வைத்து  தமிழன்  நோயாளியாக வேண்டுமா ? சிந்திப்பாயா தமிழனே ?.......
சூடு  சுரணை உள்ளவன்  போராடி  பெறுகிறான்  இல்லாதவன்  நோயில் வேழ வேண்டியதுதானே ?

சித்த மருத்துவங் காப்போம்  நோய் வெல்வோம்

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...