ஜனவரி 24, 2011

சிறுநீரக கற்கள்


சிறுநீரக கற்கள்

சித்தமருத்துவர்கள் அரச உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகத்தை குறிப்பிடுவார்கள் . இதன்பணி அவ்வளவு மகத்தானது. இது அவ்வளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டால் அவ்வளவு எளிதில் சீராவதில்லை .தலையில் தடவிக்கொள்ளும் மயிர் சாயம் முதல், கடின வீரியம் கொண்ட இரசாயன மருந்துகள், சாராயம் இவைகள் எல்லாமே சிறுநீரகத்தை கேடுஅடைய செய்யக் கூடியன .

சிறுநீரகம் மிகவும் மேன்மையானது . இது அவரை விதை வடிவில் மனிதனின் இடுப்புக்கு கீழ்பகுதியில் பத்து செமி நீளம் , ஆறு செமிஅகலம் , இரண்டரை செமி கனத்தில் இருக்கும். இதனுள் பத்து இலட்சம் சிறுநீர்வடிப்பிகள் உண்டு. இவற்றின் வேலைஉடலில் உள்ள இரத்தத்தை
துய்மை யாக்குவதுதான் . அதாவது வடிகட்டும் பணி , அரத்தத்தில் உள்ள தேவை இல்லாத நீரையும் தேவையில்லாத உப்புகளையும் பிரித்தெடுப்பதுதான். ஒருவரின் சிறுநீரின் அளவு அவரின் உணவு மற்றும் அருந்தும் நீர் ஆகியவற்றின் அளவின்படி மாறுபடும் .

சிறுநீரக கற்களின் வகைகள்

நாம் உண்ணும் உணவு பருகும் நீர் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுநீரக கற்கள் உண்டாகியது .சுன்னசத்து (கல்சியம் )ஆக்சலேட்டுகள் , பாசுபேட் , யூரிக் அமிலம் ,சிசுடைன் ,
போன்ற வகை சிறுநீரக கற்கள் தோன்றுகிறது . இவைகள் சிறுநீரகத்தில் , சிறுநீர் குழாயில்,சிறுநீர் பையில் , சிறுநீர்த்தாரையில் என நோய்க்கு தக்கபடி உண்டாக்கலாம் .

இந்நோய்க்கான அறிகுறிகள்

@ விலாப்பக்கத்தில் விட்டுவிட்டு வலி
@ சிறுநீர் கழிப்பதில் சிரமம்
@ சிறுநீர் குறைந்து வெளியேறல்
@ கக்கல் (வாந்தி ) உண்டதால்
@ தொடை இணைப்பு , தொடை யில் , அடிவயிறு , ஆண்குறி , பெண்குறி போன்ற இடங்களில் வலி உண்டாகலாம் . சிறுநீர் குழாயில் கள் இருந்தால் இங்கு வலி தோன்றலாம் .

நோய் காரணங்கள்
@ நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் ,
@ மயக்கப் பொருட்கள் (மது ) அருந்துதல் பழக்கங்களினால் .
@ முறையில்லாத சம சீரில்லாத உணவு .,
@ போதிய நீர் அருந்தாமை பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்கள் அருந்துதல் .

தீர்வுகள்

நோய்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும் . முறையில்லாத உணவுகளை நீக்குக .
சிறுநீரகத்திற்கு எரிச்சல் ஊட்டும் உணவுகள் நீக்குக . புளிப்புத்தன்மை , அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக. மது , ஊறுகாய் , வெள்ளரி , தக்காளி , பசலை , கோசு, காலிபிளவர் ,போன்றவை நீக்குக . இறைச்சி, பன்னாட்டு நிறுவன மென்பானங்கள் நீக்குக.

கல்சியம் , மக்னீசியம், பசுபெட் ,கார்பநேட்டுகள், சத்துகள் கொண்ட உணவுகள் மிகையாக எடுப்பது போன்ற காரணங்களினால் உண்டான கற்கள் எனின் அந்த உணவுகளை நீக்குக .
யூரிக் அமிலத்தால் உண்டான கற்கள் என்றால் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக .
தண்ணீர் மூன்று முதல் நான்கு லிட்டர் அளவிற்கு நாளும் அருந்துக . தண்ணீரின் தன்மையை சோதித்து அறிந்து கொண்டு செயல்படுக சிலவகை கற்கள் தண்ணீரில் கலந்துள்ள மினரல் களினாலும் கற்கள் தோன்றலாம் என கண்டறியப்பட்டு உள்ளது .
துளசி யுடன் தேன் கலந்து உண்க இது சிறுநீரகத்திற்கு சக்தியளிக்கும் .
இளநீர் , பதநீர், மோர் , பார்லி நீர் , வெந்தயம் நினைய வைத்த நீர் அருந்துக.
பூண்டு , கருணை தேவை எனின் முள்ளங்கி நீக்குக .
சைனசு உணவுகள் நீக்குக
காபி , தேயிலை , நீக்குக .
சாக்லேட் , ஐசுகிரீம் நீக்குக. .
காரணங்களுக்கு ஏற்றபடி தக்காளி, கொய்யா, பேரிச்சை , முந்தரி , வாதுமை, பட்டாணி , நீக்குக .

ஆசனபயிற்சி கள்

சிறுநீரக கற்கள் சிக்கலுக்கு புஜங்காசனம் ,தனுராசனம் ,முக்தாசனம் , அலாசனம் ,உத்திதான் பாதசனம் செய்க .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம் More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...