மார்ச் 26, 2013

கோடை வெம்மையை கொடையாக்குவோம்


அன்புள்ள உறவுகளே  வணக்கம்  நீண்ட  நாட்களாக  வலைபதிவு  எழுத இயலவில்லை ...... இப்பொழுது மீண்டும்  எழுதுகிறேன் ....
                              

       இன்றைய புதிய உலகம்  நோய்களை பெரிதும்  உண்டாக்குகிறது  காரணம் முறையில்லாத உணவுகள்  மரபு வழிப்பட்ட  பழமையான  உணவுகள் இன்றைய  இளைஞ்சர் களுக்கு மறந்தே போயின அப்படிப்பட்ட  மிகவும்    சிறப்பு வாய்ந்த உணவுகள்  மனிதத்தை நோயில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் நல்ல தேர்ந்த உணவாகவும்  இருந்தது . ஆனால்  இன்றைய உணவுகள்  வரட்டுத்தனமான  சுவையை மட்டுமே  கொண்டு உடல் நலனை பின்னுக்கு தள்ளிவிடுகிறது .
       இன்றைய புதிய   உலகம் குடிநீரை கூட எடுத்துக் கொள்வதில்லை என்ற  அதிர்ச்சி தரும்  காணக்  கிடைக்கிறது  நீர் வேட்கை  கொள்ளும் நேரத்தில் புட்டியில் அடைக்கப் பட்ட  மென் பானங்களே   அவர்களின் உயிர்காக்கும்   குடிநீராகிவிடுகிறது    ஆனால் அது அவர்களின்  உயிரை குடிக்கும்  என்பது அவர்கள் அறிந்து கொள்ளுவதில்லை  . அது பற்றிய சிந்தையும் அவர்களுக்கு வருவதில்லை  இதற்கான கரணம் இந்த சமூகம் அந்த  கல்விகளை அவர்களுக்கு அளிக்கவில்லை  ஒரு உணவு  நோயில்லாத உணவைத தரவேண்டும் என்பது நமது மரபுவழிபட்ட முறையாகும்  இந்த உலகே பயன் படும் விதமாக நமது உணவு முறை இருந்து வந்தது அனால் இன்று எல்லாவிதத்திலும் மேலை நட்டு நாகரீகத்தை கண் மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு  நமது சமூகம் நோயில் வீழ்ந்து தவிக்கிறது . இந்தகைய  பானங்கள்  உடலை கெடுப்பதோடு சிறுநீரகத்தினை  சல்லடைகளாக செயலிழக்க  வைத்து  விடுகிறது  அனால்  நமது  மரபு வழிப்பட்ட  உணவு முறை  கோடைக் காலங்களில்  
 சோற்று நீர்...  இது மிகசிறந்த  சிறந்த குடிநீர்  இதில்  செரிமானம்  கூட்டும் திறன்  மிகையாக உள்ளது  உள்ளுருப்புகளை  திறம்பட  செயல்பட வைக்கிறது .வாத பித்தத்தை  கட்டுப் படுத்துகிறது.

இளநீர்  ... இதன் குணத்தை  சொல்லத்தேவையில்லை  உடலை

குளிர்விக்கும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது  . இதில் அடங்கியுள்ள  தாது உப்புகள் என்னில் அடங்காதவை. இவை அனைத்தும்  உடளுக்கு நன்மை செய்யக் கூடியது .

பதநீர் ... இது  கபத்தை  கட்டுப்படுத்துகிறது  மூச்சிறைப்பு  நோயில் சில மருந்துகளுக்கு துணை நிற்கிறது  உடலுக்கு  தாது  உப்புகளைத் தந்து  பல நோவில் இருந்து விடுவிக்கிறது .


மண் பானைநீர் ... இது  மிகசிறந்த  குடிநீர்  இன்று  நீரில்  கலந்து உள்ள தேவையில்லாத  அழுக்குகளை  நீக்கி தூய்மையாக்கி  உடலை குளிர்விக்கிறது. கண் எரிச்சலைக் கட்டுப் படுத்து கிறது.

   இப்படி  நமக்கு மிகையாக  இயற்கை அன்னை கொடையாக அளித்து உள்ள குடிநீர்களை பயன் அடுத்தி நோயில் இருந்து  விலகி இருப்போம் .புட்டியில் அடைக்கப் பட்ட உணவுகள்  உடலையும் சிறுநீரகத்தையும்  கேடு அடைய செய்யக் கூடியது  எனவே இவற்றை தவிர்ப்போம்

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...