ஜூலை 31, 2012

மாங்க்கொட்டையின் மருத்துவக் குணங்கள்     இந்த காலத்தில்  மாம்பழம்  கூடுதலாக கிடைக்கிறது  பழத்தை  உண்கிறோம்  கொட்டை வீனாக்கிவிடுகிறோம்  அவற்றில் உள்ள மருத்துவ  குணங்களை  அறிந்தோமில்லை. அதேபோல  சிலருக்கு நமது தமிழ  மருத்துவத்தின் மீது  பிடிப்பும் இருப்பதில்லை  அது உடலில் எப்படி வினையாற்றுகிறது   என்பதையும்  அறிந்து கொள்வதில்லை . அப்படிப்பட்டவர்கள்  சிந்திக்கவே இந்த ஆக்கம்.

         பழம் பெருமை வாய்ந்த  சித்தர்களும் சித்தமருத்துவமும்  மனிதனை முழு மனிதனாக பாவித்து  நோவில் இருந்து விடுவிக்க  எண்ணியதை  நாமறிவோம். ஆனாலும் இதன்  தனிச்சிறப்பை  அறிந்தோமில்லை  அதனால் வந்த கேடுகள்தான்  இன்றைய நோய் . இந்த பரந்த உலகத்தில் உள்ள எல்லா  பொருட்களையும்  மருந்தாக்கிப் பார்த்து  மனிதனை  நோயில் இருந்து விடுவிக்க  சிந்தித்தவர்கள்  தமிழ அறிவர்கலான  சித்தர்கள்.

பேசுமே  சீதப் பெருகுஞ்ச்சோ  ரிக்கடுப்பும்
வீசுமோ  மூலமாறு வேங்கொதிப்பு - மாசுடைய
பூன்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் கானில் வாது.

மாங்கொட்டை  உள்ளிருக்கும்  பருப்பினால்
சீதக்கழிச்சல்
இரத்திசாரம்
உதிரக் கடுப்பு
மூலசூடு
பெரும்பாடு
மல  கிருமி  போன்றவை போகும்.

இந்த மரத்தின் வேர் பட்டையினால்
சீத கழிச்சல்
வயிற்று  கடுப்பு
கக்கல் (வாந்தி )
போன்றவை போகும் .

சீதரத்  தப்போக்கை  சிக்கனவேதான்  பிடிக்கும்.
போதவயிற் றுக்கடுப்பைப் போக்குங்  காண் - ஓதுகின்ற
வாந்தியையும்  தீர்க்கும் வெளி மாமரத்தின் வீர்ப்பட்டை
பூந்துகின் மாதே! புகழ் .

மாவிலைக் கொழுந்து உலர்ந்திதினால் சர்க்கரை நோப்வை போக்கும்.இலையை தேன் விட்டு  வதக்கி குடிநீராக்கி கொடுக்க தொண்டைக் காட்டு குரல் கம்மல்முதளியவை போகும்.

மவிலையை தீயில் இட ஆதிளிர்ந்து வரும் பெரும் புகை தொண்டைக்கம்மலை  நீக்குவதோடு  விக்கலையும் நிறுத்தும் .

இலையை சுட்டு சாம்பலாக்கி  வெண்ணையில்  குழைத்து  தீப்பட்ட புண்ணின் மீது போட சுகமாகும்
மாம்பூவை  குடிநீராக்கி சீதக் கழிச்சல் , கழிச்சல் ,போன்றவற்றிற்கு  கொடுக்க  குணம் கிடைக்கும் .
மாங்காயின்  தோல்  வீட்டுவிலக்கு  சிக்கலை  குணமாக்குகிறது .

எளிமையான மூலப் பொருட்களை  மூலதனமாகக்  கொண்டு  சிறந்த மருத்துவக்  குணத்தை  தரும்  சித்த மருத்துவத்தை  பயன்  படுத்தி நோய் வென்று  நீடுவழ்வோம்.
More than a Blog Aggregator

ஜூலை 16, 2012

முப்பது + இல் பாலுறவு குறைகிறதா ?      பாலுறவு  உயிரிகளின்  மூகாமையான  தேவை  என்பதை  நாமறிவோம்  இது  மிகவும் இளமையிலேயே  குன்றிப் போவதாக  இன்றைய  புள்ளிவிவரங்களும் நம்மருத்துவ நடுவத்திற்கு வருகிறவர்களும்  கூறுகிறார்கள் . இது உண்மையா? ஏன் இங்கனம்  நிகழுகிறது ? இதை தடுக்க முடியுமா? தவிர்க்க  இயலுமா?

      அன்பு உறவுகளே . வணக்கம் இப்படியான  வினாக்கள்  கேட்ட படி  இருக்கின்றனர் . காரணங்களை  அலசுவோம்  நீங்களும் உடன் இருப்பது தேவையல்லவா ? இன்றைய  விரைந்தோடும்  நிகழ்வில்  பல்வேறு நோய்கள்  பெருகி  மனிதத்தை நோயாளியாக்குகிறது முறையில்லாத  உணவு முறையில்லாத  வாழ்க்கைப் போராட்டங்கள் .வாழ்வியல் முறைகள் . நோய்தரும்  இரசாயனங்கள் உலக  இன்பங்களை  எல்லாவற்றையும் உடனே நுகர்ந்து விடவேண்டும்  என்ற வேட்கை  ஏக்கம் , அளவு  கடந்த  சினம் ,அளவு  வெறுப்பு  போன்ற காரணகளினால் இன்றைய  பாலுறவு  குன்றிப் போக  வாய்ப்பு இருக்கிறது .

       மனிதன் என்றாலே  உடனே சிலர்  குடி , புகைத்தல் , முறையில்லாத உணவுப் பழக்கம்  என  எந்த  திட்டமிடலும்  இன்றி  உடலைக்  கெடுத்துக்  கொள்ளுகிறனர் .பாலுறவு  வேட்கை  கொண்டு  ஊக்கி  மருந்துகளை (ஆங்கிலமுறை )  மிகையாக எடுத்துக் கொண்டு பின்னர்  பாலுறவு  எண்ணமே இல்லை . பாலுறவு கொள்ள இயலுவதில்லை  என கூறுகிறனர் . இங்கு  ஒருவினா எழலாம்  சித்த மருத்துவத்தில்  ஊக்கி மருந்துகள்  வழங்கப் படுவதில்லையா? என கேக்கலாம் ஆனால் இதை வாசிக்கும்எவரும் கேட்பதில்லை  அது வேறு செய்தி  இப்படி  கருணாநிதி  மாதிரி  நாமே  கேட்டுக் கொண்டு  நாமே பதில் சொல்லுவோம் .
    
          சித்த மருத்துவத்தில்  வழங்கப் படும்  ஊக்கி மருந்துகள்  பாலுணர்வை / விந்தணுக்களை  மிகையாக  உண்டாக்கும் படியான  மருந்துகள் .இயல்பான உடலுக்கு ஊட்டத்தையும்  சக்தியையும்  தரவல்லன . ஆங்கில ஊக்கி  மருந்துகள்  அப்படியல்லவே? உடலுக்கு கேட்டையல்லவா  உண்டாக்கும்? கடவுள் பற்றாளர்கள்  பாலுறவை  சிற்றின்பம்  என்பார்கள் . பாலுறவு  குறுகிய  நேரத்தில்   முடிவதுதான் அதன் சிறப்பு  நேரம் மிகுகிறது எனின்  உடலுக்கு  கேட்டை  உண்டாக்கும் என  சொல்லித்தெரிய  வேண்டியதில்லை  இன்றைய  உலக  வெப்பமயம்  உடலையும் உள்ளத்தையும்   பலவேறு நிலைகளில்  கேடடைய  செய்கிறது இந்த  நிலையில்  பாலுறவினை  அதன் நேரத்தை  கூட்டி  அதனால்  உண்டாகும் உடல் சூட்டினை  தனித்துக் கொள்ள  எந்த  வழிவகையும்  செய்து கொள்வதில்லை .

         மனித உடல்  விந்துவை  உற்பத்தி  செய்யும்  இயந்திரம்  அல்லவே .இதில்  உடலுக்கு ஊட்டம் அளிக்கும்  உணவை எடுக்காமல்  உடலுக்கு கேட்டை உண்டாக்கும் உணவுகளை  எடுக்கும் போது சில உணவுகள்  சில நோய்கள்  பாலுறவை  குறைக்க  செய்கிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக  சக்கரை  நோய் பாலுறவை  நீக்க செய்யும் . இந்த குறைகளை  நீக்கிக் கொண்டு மனிதன்  நோயை  விட்டுவித்துக் கொள்ளலாம் .

      இன்றைய சூழ்நிலையில்  தொண்ணூறு  அகவையில்  பாலுறவை வைத்துக் கொண்டு மகப்போற்றை  உண்டாக்கும் சக்தி  படைத்தவராகவும்  ஒருவர் இருக்கிறார் .முப்பது  அகவையில்  சர்க்கரை / இரத்த அழுத்தம்  / சிறுநீரக  கோளாறுகள்  என பல்வேறு  நோய்களை  வரவழைத்துக்  கொள்ளுகின்றனர் . இந்த நிலையில் பாலுறவு குன்றத்தானே   செய்யும்.

        முறையான  உணவுப் பழக்கம்  வாரம்  இருநாள் எண்ணெய்க்  குளியல் முறையான உடற் பயிற்சி  போன்றவற்றை  செய்தால்  தொண்ணூறு  அகவையிலும்  பாலுறவில்  வெற்றி  பெறலாம்  என்பதே  நமது  நம்பிக்கையான  வார்த்தை.

சித்தமருத்துவங்  காப்போம்  நோய்வேல்வோம் .
More than a Blog Aggregator

ஜூலை 09, 2012

சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்    காலங்கள் தோறும் நமது  மண்ணில்  பல்வேறு  மருத்துவக்  குணம் நிறைந்த பழ  வகைகளும் மூலிகைகளும்  விளைந்து கிடக்கிறது விலை உயர்ந்த  பழங்கள்தான்  மதிப்பு மிக்கவை  சத்தானவை  என்ற  சொத்தைய வாதங்கள்  கழிவு நீர்  குடிநீறாகி  விடுதல்போல  மக்களிடம் கலந்துவிடுகிறது . உண்மையை ஏற்பது / அல்லது  கடைபிடிப்பது  மிகவும்  இயலாத காரியமாக  தமிழ  ,மண்ணில்  இருக்கிறது காலம்  காலமாக  நாம்  உண்மையையும்  நேர்மை யையும்  புறக்கணித்தே  வருகிறோம்  சித்தர்களின் காலங்களில்  எந்த பலனையும் எதிர் பார்க்காமலே மக்களுக்காவே  சேவையாற்றி  வந்து இருக்கிறார்கள்  ஆனாலும் முழுமையாக  அவற்றை  நாம் மக்கள்  பயன்படுத்திக் கொண்டு இருந்தால்  இன்று தமிழம்  எல்லா  நிலையிலும்  முன்னேறிய  முதன்மை  நிலமாக  இருந்து இருக்கும்  இவ்வளவு  சிறப்புகள் இருந்தும்  தமிழர்கள் இவற்றினை  பயன் படுத்திக் கொள்ளாமை என் என்பது புரிய வில்லை  அருள் கூர்ந்து தெரிந்தவர்கள்  சொல்லுங்களேன்  ?
    
         ஏன் எனின்  சித்த  மருத்துவம் மக்களின் மகத்தான  மருத்துவமாகவில்லை இந்த  மருத்துவத்தின் சிறப்புகளை  மக்கள் ஏன் புரிந்து  கொள்ள மறுக்கிறார்கள் ?

சீத பழத்தின்  சிறப்புகளைப்  பார்ப்போம்


சீதாப்பழம்

நரம்பு
மூளை
இதயம்  போன்றவற்றை வலுப்பெற செய்கிறது .
தசை நார்களுக்கு  வலுவூட்டுகிறது .
உள்ளத்திற்கு உவகையூட்டுகிறது
உடலுக்கு  குயர்ச்சியைத்  தருகிறது .
விதைகள் தலைப் பேனை கொல்லுகிறது
இதன்  இலைச்சாறு வலிப்பு  மயக்கம் போன்றவற்றை  நீக்குகிறது .
இதன் காய்  சீதக்  கழிச்ச்சலை  நீக்குகிறது .
பழம் புதிய  இரத்தத்தை  உண்டாக்குகிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தை  தருகிறது.
ஆயுளை நீட்டிக்கிறது .
நினைவாற்றலை  பெருக்குகிறது.
புரதமும்  கொழுப்பும்  இதில்  நிறைய  உள்ளது .
உடலின் வளர்ச்சிக்கு தேவையானவைகள்  இதில்  அதிகமாக  உள்ளது.
சுரநோயில் (காய்ச்சல் )இதன் பழத்தின்  கூழ்  குணப் படுத்துகிறது.
நாம்  இதை  பயன் படுத்திக் கொள்ளலாமே .


சித்த மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம்  
More than a Blog Aggregator

ஜூலை 02, 2012

காய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்     தமிழ  மருத்துவத்தில் காய கல்பம்  என்ற சொல்லாடல் அடிக்கடி கேட்டு இருக்க கூடும் சரி  காயகல்பம்  என்பதென்ன ? காயம்  என்பது உடல்  கல்பம் என்பது அழியாமல் பாதுகாத்தல்  என்பதாகும்.
எதற்கும்  வினா எழவேண்டும்  எழவில்லை எனின் தான்  ஐயமே . நாம் குறிப்பிடும் இம்  மா  மருந்து  காய  கல்ப  வகையை  சேர்ந்தது உடலை அழியாமல்  பாதுகாக்கக்  கூடியன .

தூய  தமிழ  மருத்துவத்தின் உயரிய  சிறப்பே  இவைகள் நோயில் இருந்து விடுவிப்பதோடு நோயின்றி வாழ  வழிவகை செய்கிறது.  சித்தமருத்துவத்தில் மருந்தே உணவு உணவே மருந்து  என்பது உங்களுக்கு தெரியும் .

காய கல்ப  தன்றிக்கையின் மருத்துவக் குணங்கள்


குடலுக்கு சக்தியை  கொடுக்கும்
காய்ச்சல்  நீக்கும்
பித்த தலைவலி  நீக்கும்
இரத்த மூலம்
சீதக்  கழிச்சல்
மலசிக்கல்
வாய் நீர் ஒழுகல்
கண்பார்வை  தெளிவடையும்
புண்  ஆறும்
கோடைகால  அக்கியை குணமாக்கும்
உடலினை  உரமாக்கும்
சிலந்தி விடம்  நீக்கும்
ஆண்குரிப்புன்
சீழ்மேகம்
வாதபித்தம்
இரத்த பித்தம்
தலை மயிரை வளர்க்கும்
காசம்
சுவாசம்
நினைவு  மறத்தல்
வயிற்றுப் போக்கு
வீக்கம்
பல்வலி
ஆகியவற்றை  நீக்கும் .

சிலந்தி  விடம் காமியப்  புண்  கீழான  மேகங்
கலந்து  வாரும்  வாதபித்தங்  காலோ- ட்லந்துடலில்
ஊன்றிக்காய்  வெப்ப முதிரபித்  துங் கருங்
தான்றிக்காய்  கையிலெடுத்தால்.

ஆனிப்பொன் மேனிக் கமழும்  ஒளியுமிழும்

கோணிக் கொண் வாதபிதங்  கொள்கைபோம் - தானிக்காய்
கொண்டவர்க்கு  மேகம்  அறும் கூற  அளந்தனியும்
கண்டவர்க்கு  வாதம் போம்  கான் .

      இவ்வளவு  மருத்துவக்  குணங்கள்  நிறைந்த  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்  சேர்ந்த  மா  மருந்துகள்  தான்  சித்த மருத்துவத்தில்  நூறு  நோய்களுக்கு மேல்  நீக்கும்  மிகசிறந்த  மருந்து மட்டும் அல்லாமல்  காய  கல்பம்க  செயல் படும்  திரிபலா . இந்த முக் கூட்டு  மருந்து  திரிபலா  மூன்று ஒன்றாய்  கூடும் போது  பலன் பாலமடங்கு  கூடும்  இதைப்  பற்றி  நான் தனியாக  எழுத  வேண்டுமா ? என்ன .


போளூர் தயாநிதி 
91-94429 53140.

 சித்த மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...