ஜூலை 31, 2012

மாங்க்கொட்டையின் மருத்துவக் குணங்கள்



     இந்த காலத்தில்  மாம்பழம்  கூடுதலாக கிடைக்கிறது  பழத்தை  உண்கிறோம்  கொட்டை வீனாக்கிவிடுகிறோம்  அவற்றில் உள்ள மருத்துவ  குணங்களை  அறிந்தோமில்லை. அதேபோல  சிலருக்கு நமது தமிழ  மருத்துவத்தின் மீது  பிடிப்பும் இருப்பதில்லை  அது உடலில் எப்படி வினையாற்றுகிறது   என்பதையும்  அறிந்து கொள்வதில்லை . அப்படிப்பட்டவர்கள்  சிந்திக்கவே இந்த ஆக்கம்.

         பழம் பெருமை வாய்ந்த  சித்தர்களும் சித்தமருத்துவமும்  மனிதனை முழு மனிதனாக பாவித்து  நோவில் இருந்து விடுவிக்க  எண்ணியதை  நாமறிவோம். ஆனாலும் இதன்  தனிச்சிறப்பை  அறிந்தோமில்லை  அதனால் வந்த கேடுகள்தான்  இன்றைய நோய் . இந்த பரந்த உலகத்தில் உள்ள எல்லா  பொருட்களையும்  மருந்தாக்கிப் பார்த்து  மனிதனை  நோயில் இருந்து விடுவிக்க  சிந்தித்தவர்கள்  தமிழ அறிவர்கலான  சித்தர்கள்.

பேசுமே  சீதப் பெருகுஞ்ச்சோ  ரிக்கடுப்பும்
வீசுமோ  மூலமாறு வேங்கொதிப்பு - மாசுடைய
பூன்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் கானில் வாது.

மாங்கொட்டை  உள்ளிருக்கும்  பருப்பினால்
சீதக்கழிச்சல்
இரத்திசாரம்
உதிரக் கடுப்பு
மூலசூடு
பெரும்பாடு
மல  கிருமி  போன்றவை போகும்.

இந்த மரத்தின் வேர் பட்டையினால்
சீத கழிச்சல்
வயிற்று  கடுப்பு
கக்கல் (வாந்தி )
போன்றவை போகும் .

சீதரத்  தப்போக்கை  சிக்கனவேதான்  பிடிக்கும்.
போதவயிற் றுக்கடுப்பைப் போக்குங்  காண் - ஓதுகின்ற
வாந்தியையும்  தீர்க்கும் வெளி மாமரத்தின் வீர்ப்பட்டை
பூந்துகின் மாதே! புகழ் .

மாவிலைக் கொழுந்து உலர்ந்திதினால் சர்க்கரை நோப்வை போக்கும்.இலையை தேன் விட்டு  வதக்கி குடிநீராக்கி கொடுக்க தொண்டைக் காட்டு குரல் கம்மல்முதளியவை போகும்.

மவிலையை தீயில் இட ஆதிளிர்ந்து வரும் பெரும் புகை தொண்டைக்கம்மலை  நீக்குவதோடு  விக்கலையும் நிறுத்தும் .

இலையை சுட்டு சாம்பலாக்கி  வெண்ணையில்  குழைத்து  தீப்பட்ட புண்ணின் மீது போட சுகமாகும்
மாம்பூவை  குடிநீராக்கி சீதக் கழிச்சல் , கழிச்சல் ,போன்றவற்றிற்கு  கொடுக்க  குணம் கிடைக்கும் .
மாங்காயின்  தோல்  வீட்டுவிலக்கு  சிக்கலை  குணமாக்குகிறது .

எளிமையான மூலப் பொருட்களை  மூலதனமாகக்  கொண்டு  சிறந்த மருத்துவக்  குணத்தை  தரும்  சித்த மருத்துவத்தை  பயன்  படுத்தி நோய் வென்று  நீடுவழ்வோம்.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...