மே 14, 2012

மூப்பை வெல்லலாமே
     இன்று   சித்த  மருத்துவத்தின்  முழுமையான  பரிமாணத்தை  பெரும்பான்மை  மக்கள்  புரிந்து  கொள்ள  வில்லை  அல்லது  புரிய  வைக்கப்  படவில்லை  நானூறு  ஆண்டுகால  அடிமைசிந்தனை தமிழனை  மிகையாகவே  பாதிக்கச்  செய்து   விட்டது  அதனால்  தான்  தமிழில்  உள்ள  சிறப்புகளை  தேடிதேடித்  தந்தாலும்  அவனுக்கு  செரிக்க  வில்லை  தன்னுடைய  இனத்தின்  அறிவை   பலத்தை  அவனால்  புரிந்து  கொள்ளப்  படவில்லை   மருத்துவத்தை  எடுத்துக்  கொண்டால்  உலகினுக்கே  சித்த  மருத்துவம் கொடுத்ததது   எண்ணிலடங்கதவைகள்   இருந்தாலும்  தமிழன்   அடிமைத்தனத்திலேயே   கிடக்கிறான்  என்றால்  நானூறு  ஆண்டுகளின் அடிமைத்தன  மிச்ச  சொச்சம்தனே  ? அதனால்தான்  நோவில் வீழ்ந்து கிடக்கிறான்

      மூப்பை  தவிர்க்கலாமே  என  எழுதிவிட்டு  அறவுரை  கூற தொடங்கி விட்டீரே  என  கேட்பது புரிகிறது சிந்திக்க தெரியாதவர்கள் சிந்தனையை  ...  தமிழில் உள்ள அறவியலை...  புரிய வைப்பதர்க்குதான் . மனிதம் மீண்டும்  மரணத்தை இளமையிலேயே  சந்திக்க தொடங்கி விட்டன இது அவனின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதானே...  உன்னத்தெரிந்தவனுக்கு நோயில்லை என்பார்கள் . அதுபோல நீடுவாழும் நெறியை உங்களுக்கு  அறிமுகப் படுத்துவது எனது தேவையாகிவிட்டது உலக மருத்துவ  முறைகளில் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவமே என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை  இதில்  உள்ள சிறப்புகளைதனே  தமிழன் தொலைத்துவிட்டான்  அதைத்தான் அறிமுகப் படுத்துகிறேன் .

    சித்த மருத்துவத்தில்  நூற்றிஎட்டு  கற்ப மருந்துகள்  உள்ளது அதாவது கற்பம் என்றாலே  அழிவில்லாத   என்ற  பொருளை உடையது  இந்த உடலை அழியாமல் கக்கும் மருந்து என்பது
பொருள் இதையும் கூட

        மூலிகைக் கற்ப  முயன்ற அறுபத்தும்
        பாவி யுபரசம்  பாங்காய்  அறுபது
       வாழிய சூதமும்  தங்கம் மிகரண்டு
        யொலி யொருநூற்றுப் பத்திரண் டொன்றே.

      உடலை திடப்படுத்தி உயிரை நிலைக்கசெயும்  சக்தி கொண்ட  கற்பங்கள்  நிறைவே உள்ளது  ஆனால் அவற்றில் மிகவும் மூகமையனது கர்ப்பங்கள் மொத்தம் நூற்றி இருபதொருவகைகள்  உள்ளது இதில்
மூலிகைகள் அறுபதும் உபரசங்கள் அறுபதும் தங்கமும் இரசமும்  சேர்ந்த கர்ப்பம் ஒருவகையும் அடங்கும் என்கிறார்  திருமூலர்    இவற்றை முறைப்படி  பயன்படுத்த  வேண்டும் என்றாலும்  அதற்குரிய கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க வேண்டும்.

       உடலை  கட்டுக் காப்புடன் வைத்து  கொள்ள வேண்டும்  உணவை  முறைப்படி முறையான உணவை  முறைப்படி  எடுக்க வேண்டும்.

                அண்டம்  சுருங்கில் அதற்கோர்  அழிவில்லை
              பிண்டம்  சுருங்கில் பிராணன் நிலைபெறும்
                உண்டி  சுருங்கில் உபாயம்  பலவுள
                  கண்டம்  கருத்த  கபாலியும்  ஆமே .

      ஒரு மனிதனுடைய உடல் இளைத்து விட்டது என்று வருந்த வேண்டியதில்லை. உடல் இளைத்தால் நாம்  நீண்டநாள் வாழலாம்.உடலுக்கு அழிவில்லை. வயிறானது பெருத்து இருந்தால் மூச்சு  விடுவதற்கு சிரமப்படுவான் .வயிறு சிறுத்து இருந்தால் மூச்சுவிட  ஏதுவாகும் உணவு குறைத்து உண்ணும்போது உடல் எளிதாக  இயங்கும். அதாவது  உயிர்ப்பற்றலை முறைப்படுத்தி  மூச்சுக் காற்றை முறைப்படி பயன்  படுத்த  உயிர் நிலைபெறும்  மூச்சை  முழுமையாக உள்வாங்கி  வெளிவிடும்   ஆமை  ஆயிரமாண்டுகள்  வாழுகிறது  மூச்சை  விரைந்து செலவழிக்கும் உயிரினங்கள் விரைந்து  மரணத்தை  தழுவுகிறது .

    மூச்சை  அடக்கும்  வித்தையை  திருமூலர்  அழகாக  விளக்குகிறார்  இந்த  சிறந்த முறையை  கடைபிடிக்கும் போதுதான்  உயிர்ப்பாற்றல்  கூடும்

                      ஏற்றி  இறக்கி இருகாலும் பூரிக்கும்
                      காற்றைப்  பிடிக்கும்  கணக்கறி வாரில்லை
                      காற்றை பிடிக்கும்  கணக்கறி  வாளர்க்கு
                      கூற்றை  உதைக்கும்  குறியது  வாமே .
 
      இங்கு கூற்று  என்பது எமன்  என்று  நம்மக்கு தெரியும்  ஆக மரணத்தை வெல்லும்  மா  மருந்து
 காற்றை  அதாவது மூச்சுப் பயிற்சியை  முறைப்படி  செய்யும் போது  கிடைக்கிறது  என்பது  உண்மைதானே .        வளரும் அடுத்த  இடுகையில்  விரிவாக  சிந்திப்போம் . அதுவரை

சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம்  
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...