செப்டம்பர் 04, 2010

இதோ நம் வாழ்க்கை


அன்னையாய்.....
தோழியாய்- எம்
உயிர்வளியை தந்தவளே ...
இயற்கையாய் விரிந்து ...
உயிர்களை காப்பாற்றி ...
உணவையும் வழங்கி ...
எம் உயிரையும் நீட்டி ...
சூழலை காப்பாற்றி
இந்த நிலப்பந்தில்
வாழ வைப்பவளே ..

உன் வளர்ச்சிக்கு
நாங்கள் ஏதும் செய்யவில்லை ...
எங்களை வளர்த்திடவே
நீ வாழுகிறாய் ...
நாங்களோ உன்னை
அழித்திடவே செய்கின்றோம் ..


அத்தனையும் ...

உணர்வின்றி போகின்றோம் ...
உன்னில் பற்றின்றி
அழிக்கின்றோம் .

ஒசோனும் ஓட்டையாகி
வெம்மையை தான்
துப்புதிங்கே...
பணிப்படலம் கரைந்துபோய்
கடல் மட்டம் உயர்ந்து
நிலமெல்லாம் நீராகும்
நாம்தான் வாழ்வதெங்கே ?
இன்னும் நாங்கள்
உணர்ந்திடவே இல்லை ...

காடெல்லாம் அழிந்ததலே...
மழை வளமும்
குறைவாச்சு
மண்வளமும் பாழாச்சு..
அப்போதும் உணரவில்லை ...
என் கண்ணீரும் காயவில்லை ...

கண்ணீரின் பாய்சலாலே ...
கடல் நீரும் உப்பாச்சு ...

நிலத்தடி நீரின் ...
குறைவால்தான் ..கடல்நீர்
நிலத்தில் வந்து...
சிங்களன் போல்
குடிபெயர்ந்து
வாழ்வெல்லாம் பாழாச்சு ..

இதயமெல்லாம் வெடிக்குதிங்கே...
உணர்வோடு வாழ்ந்திடுவோம்
நன்மை எல்லாம் அடைந்திடுவோம் ...
உணர்வோடு வாழ்ந்திடவே
நம்கையில் நாளைவரும் .
நோய் களெல்லாம் அழிந்துபோகும் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...