அக்டோபர் 20, 2010

மூலிகைகளின் அறிவியல்

மூலிகைகள் என்றதும் தமிழகமும் , சித்தர்களும் தான் நினைவுக்கு வருவார்கள் .தமிழ மருத்துவத்தின் மூலவர்கள் சித்தர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
இவர்கள் மண்ணையும் மொழியையும் பொன்னே போல் காத்தனர் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடிஓடுகிறது . நோயை நீக்கும் அளவற்ற மூலிகைகளும் மருந்துகளும் தமிழ் மண்ணில் விரிந்திருக்கிறது . இந்த நுட்பங்களை பருண்மையாக ஆய்வு செய்த சித்தர்கள் இம் மூலிகைகளை இனம் கண்டு மக்களுக்கு கொடையாக சித்தர்கள் வழங்கினர் . தமிழரின் மெய் அறிவியலை கண்ட மேலை நாட்டினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ள அறிவியலையும் ,தத்துவங்களையும் கற்க
வந்தனர் .இங்குள்ள அறிவு செல்வங்களை கற்று சென்றது வரலாறு சுட்டிக் காட்டுகிறது அனால் பாவம் தமிழகத்து தமிழர்கள் தொலைகாட்சி பெட்டியை விட்டு நகரமருக்கின்ற்றனர் . நோயாளி யாக மடிய தவம் கிடக்கின்றனர் .
மூலிகைகளின் பயனை பெறுகின்றவர்கள் மிகவும் குறைந்த விழுக்காட்டினரே .
மீதம் உள்ளோர் திரையரங்குகளில் தங்களின் தலைவனை தேடியழிகிண்றனர்.
தமிழகத்தில் உள்ள மூலிகைகள் உலக சிறப்பானவை கரணம் இந்த மண்ணும் , இயற்க்கை சூழலும் தான் . உலக அளவில் நடத்தபப் பட்ட ஆய்வில்
தரமான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்ற இடம் தமிழகம் என கண்டறியப்பட்டுள்ளது .இதனால் தான் உலக அளவில் தமிழக மூலிகைகள் சிறப்பான இடத்தை பெறுகின்றன .
ஒவ்வொரு மூலிகைக்கும் தனியான மருத்துவ குணம் உள்ளதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டனர் . குறிப்பாக வடக்கிருந்து வரும் வேர்களுக்கு தனியான குணம் உள்ளதாக கண்டறிந்தனர் . சித்தர் களின் காலங்களில் நுண்ணிய கருவிகள் இல்லை என்பது நாம் அறிந்ததே இப்படி தங்களின் மெய்யறிவினால் மக்களுக்கு கொடையாக வழங்கியதுதான் நாம் சித்த மருத்துவம் .
இந்த மூலிகை களை பதப்படுத்தும் காலம், பதப்படுத்த வேண்டிய முறை போன்ற வற்றை தெளிவாக்கியுள்ளனர் . இவைகள் நாம் பின்பற்ற வேண்டியே தவிர வேறல்ல .
மனித உடலை வளி , அழல் , ஐ என பகுத்த சித்தர்கள் உடல் வகைக்கு ஏற்ற மூலிகை களையும் இனம் கண்டனர் . ஒரேநோய்க்கு உடல் வகைக்கு ஏற்ற வகையில் மருந்துகள் மாறுபடும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . சித்த மருத்துவம் சிறுவித உற்பத்திமுறையை போதிக்கிறது . அதாவது பரந்துபட்ட மக்களின் நலன்களை கொண்ட மருத்துவம் என்ற கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பபடுகிறது . அப்போத்துதான் மருத்துவமும் செழுமையடையும் மக்களும் வரைவில் நோயில் இருந்து விடுபடுவார்கள் என்ற கண்ணோட்டத்தில் சித்தர்கள் இப்படி பகுத்தனர் .
நோயை நீக்கிக் கொள்ள வேண்டுமெனின் அதக்காக முறையான மருத்துவரை நடவேண்டுமே யன்றி வியாபாரியை நாடி நாம் சென்றுவிடக்கூடது அப்போதுதான் சித்தமருத்துவம் செழிக்கும் .
மூலிகைகள் முறைப்படி பறித்து , நிழலில் உலர்த்தி மரஉலக்கையால் இடித்து துணியில் வடிகட்டி பயன்படுத்த வேண்டும் . இந்த மூலிகைகள் மூன்றில் இருந்து ஆறுமாதங்கள் வரை முழுமையான பலனை தரும் .
இந்த அறிவியலை கண்டு நோய் வென்று நீடுவழ்வோம் . .........


அடுத்து பெண்களின் அந்த மூன்று நாள்சிக்கல் களும் தீர்வுகளும் ....More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...