தமிழர் உணவில் மாங்கனி முதலிடத்தில் இருப்பதுநமக்கு தெரியும். அதாவது மா,பலா,வாழை , என முக்கனிகளை இணைத்து உணவு வழங்குவார்கள் . இந்த மாங்கனி இன்று நச்சாகி மரணத்தையும் புற்று நோயையும் தரும் என எத்தனைபேர் அறிவார்கள்? ஆம் இந்த முதன்மையான கனி இன்று நோயை பரப்பிக் கொண்டு இருக்கிறது எப்படி? இன்றைய விரைவு உலகம் எதையும் பொறுமையாக அணுகுவதில்லை விரைவு அதாவது இன்றய முதலீடு நாளை கொள்ளை இலாபம் என வந்துவிட்ட தனியுடமை காலம். எனவே விரைந்து பழங்களை பழுக்க வைத்து காசாக்க நினைக்கிறது . நாம் ஏன் நோயாளியாக வேண்டும் எத்தனைபேர்இதை சிந்திப்பார்கள்?
மனிதன் சிந்திக்கும் திறன் பெறவேண்டும் என்பதே நமது அவா. இயற்கையாக காய்த்த மாங்காய்களை நீண்டகம்புகளைக் கொண்டு வலையமைத்து பறித்து பயன் படுத்த வேண்டும். பயன் படுத்தி இந்த மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க குறைந்தது ஐந்து , அலது ஆறு நாட்கள் ஆகும் ஆனால் இன்றைய விரைவு உலகம் சில இதளியங்களை(இரசாயணம் ) கொண்டு பழுக்க வைக்கப் படுகிறது எப்படி?
முன்பெல்லாம் பழங்களை இயற்கையாக ... இயற்கைன முறைகளை கொண்டு பழுக்க வைத்தனர் .முற்றிய காய்களை வைக்கோலைப் பயன் படுத்தி பழுக்க வைத்தனர் . அல்லது மண் பானை கொண்டு பழுக்க வைத்தனர். இந்த பழங்கள் மிகையான கவர்ச்சி இல்லாமல் மிகுந்த சுவையுடன் இருந்தது அது ஒரு காலம் இப்போது அதை எதிர்ப்பார்க்க இயலாது .
விரைந்து மாங்காய்கள் பழுக்க கால்சியம் கார்பைடு இரசாயன கட்டிகளைக் கொண்டு பழுக்க வைக்கின்றனர். இந்த பழங்களை உண்பதால் வயிற்று கோளாறுகள், பல்வேறு உடல் நலக் கேடுகள் உண்டாகிறது. இந்தவகையில் பழுக்க வைக்கப் பட்ட பழங்கள் சுவையும் மனமும் இருப்பதில்லை . இயற்கைத்தனமையோடு இருப்பதில்லை அதாவது இன்றைய இளசுகளைப் போலவே வெறும் கவர்ச்சியை மட்டுமே கண்டு காமுருவதுபோல பலர் கவர்ச்சியை மட்டுமே கண்டு பொருளை வாங்கி மடிந்து போகின்றனர் . கவர்சிக்குள்ளும் மிகப் பெரிய கேடுகள் மறைந்து உள்ளதை எத்தனைபேர் அறிவார் ?
இந்த பழங்களில் பாஸ்பரஸ் ஹைட்ரைடு, மற்றும் ஆர்கானிக் இரசாயணம் போன்றவை பழத்தில் சேர்ந்து விடுகிறது இது உடலுக்கு கழிச்சல் , கக்கல்( வாந்தி ) வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் , வயிற்று எரிச்சல் , மிகையான தாகம், பலவீனம் மறந்து போகுதல், பேச்சுக் குறைபாடு, ஆகியவை உண்டாகிறது. இந்த கலவை அதாவது இந்த பழங்கள் புற்று நோயை உண்டாக்க வல்லன . இந்த பழங்களை உண்ணுவதால் உடல் சீர்கேடு அடைகிறது. உடலில் உள்ள கோடானுகோடி செல்கள் மரித்துப் போகிறது பலவேறு மாற்றங்களை சந்திக்கிறது, தேவையா ? எப்போது சிந்திப்போம்?
இந்த வகைப் பழங்களை எப்படி அடையாளம் காணுவது இதுதானே உங்களின் வினா?
பழம் முழுவதும் ஒரேமாதிரியாக மஞ்சளாக இருக்கும் பழத்தில் கரும் புள்ளிகள் இருக்கும் .பழத்தின் உள்ளே பழத்திற்கு உரிய மனமும் சுவையும் இல்லாமல் வெண்மையாக இருக்கும். பழம் மிருதுவாக இருக்கும் . சுவை குறைந்து இருக்கும் . சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன் நீங்கள் மாம்பழம் வாங்க போகின்றீர் களா?