டிசம்பர் 06, 2010

குடல்வால் அழற்சி


மனிதனின் சிறுகுடலும் , பெருங்குடலும் இணைகிற இடத்தில் இருக்கும் சிறிய வால் போன்றபகுதி (APPENDIX) எனப்படுகிறது .

நோய்க்குறிகள்
வயிற்றின் நடுபக்கத்தில் வலிதோன்றும். முறையே கிழ்நோக்கி நோய் நகரும் . வயிற்றில் ஒருவித சிக்கல் நீடிக்கும் செரியாமை , மலசிக்கல் , தோன்றலாம் காய்ச்சல் 100 -120 டிகிரியில் தொடரும் வயிற்றில் வலது பக்கம் இருகும் விதை விரைப்படையும் . இருமல் , தும்மல் நோவை அதிகமாகும் .

உளவாற்றல்
பொதுவாக நோய்கண்டவர் நல்ல உளவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் அளவிற்கதிகமான கவலைகளை வைத்துக்கொண்டால் மனிதனை நோய் அழித்துவிடும் . உளம் இறுகினால்,நோய் தீவிரம் அடையும் .திடமான உளவற்றலை வளர்க்கும் போது உடலின் செல்கள் புத்துயிர் பெற்று உடல் சீரடையும் .

அழற்சி அடைதல்

குறிப்பாக உடலின் ஒரு உறுப்புக்கு கடினமான பணி கொடுக்கும் போது அது கேடடைகிறது . தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் குடலை கழுவி உடலைவளர் என்கிறது . தேரையர் என்ற சித்தர்
மனிதன் நோயின்றி வாழும் நெறியை போதிக்கிறார் . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தோற்றம் கொண்ட நம் மருத்துவ முறை அறிவியலை உள்ளடக்கி அறிவியலை போதிக்கிறது .

மலசிக்கல் நோய்க்கு காரணி


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942 )
முன்பு உண்ட உணவு நன்கு செரித்த தன்மையை அறிந்து பின் முறைப்படி பசித்தபின் முறையான உணவை முறையான நேரத்தில் உண்ண வேண்டும் என போதிக்கிறது . இந்த முறையில் மாறுபாடு நேருகிறபோது நோய் தோற்றம் கொள்ளுகிறது . நன்கு செரித்து பசித்து சிக்கலின்றி மலம் வெளியேறினால் நோயில்லை . இதில் எங்கோ தடை ஏற்ப்படும் போது நோய் தோற்றம் கொள்ளுகிறது . முக்கி முக்கி கழிவை வெளியேற்ற முயற்சி நாளும் செய்யும் போது குடல் வால் அழற்சி உட்பட பல நோய்களுக்கு காரணமாகிறது .

தீர்வுகள்

௧. ஒய்வு தேவை
௨. பட்டினி பெருமருந்து என்பார்கள் இந்நோய்க்கு முதலில் பட்டினியே பெருமருந்தாகும் .
௩. குடல் பகுதிகளின் தூய்மையாக்கி கொள்ளவேண்டும் . இதற்க்கு எனிமா சிறந்தது .
௪. பின் வெறுமனே நீரைமட்டுமே உணவாக கொள்ள வேண்டும் .
௫. பின்னர் பழச்சாறுகளை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும் .
குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .
வெந்தயம் நினைய வைத்த நீரை அருந்தலாம் .
இக்காலத்தே மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
இவைகளை தேர்ந்த மருத்துவர் மேற்பார்வையில் செய்க
நோய் நீங்கி வெல்க .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...