நவம்பர் 25, 2010

இயற்கையாக ஒரு அழகு கலை

அழகை விரும்பாதார் யார் ? அதுவும் இயற்கையான அழகு என்றால் ?
நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்குகிறது பார்ப்போமே

முதலில் பெண்களின் கூந்தல் பற்றியது . கூந்தல் என்றல் பேன்தொல்லை இருக்கத்தானே செய்யும்
அவற்றை எப்படி சமாளிப்பது ?
துளசி மூலிகையே சிறந்தது இம் மூலிகையை அரைத்து தலையெல்ல்லாம் பூசி சற்று நேரம் விட்டு குளிக்க பேன்தொல்லை தீரும் .
சிறிதளவு படிகாரத்தை (நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ) பொறித்து தூளாக்கி நீரில் கலக்கி தலையில் பூசி இரண்டு மணிநேரம் விட்டு குளிக்க பேன் தொல்லை போயே போச்சு .

செம்பட்டை நிறம் மாற (மயிர் )

தமரைபூ குடிநீராக்கி நாளும் குடிக்க வேண்டும் .

கரிசாலை நூறு கிராம் , கொட்டை கரந்தை மூலிகை நூறு கிராம் , நன்கு உலர்த்தி காலை மாலை அரை
தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட நல்ல பலன் .

மயிர் நன்கு செழிக்க

வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து தலயில் பூசி குளிக்க நல்ல பலன் .
சடாமஞ்சில் கொண்டுவந்து தேவையான எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுக நல்ல பலன் .

பருக்கள்

மூஞ்சில் பரு இருந்தால் எவர்தான் விரும்புவர் ? அதை நீக்க முடியுமா ? நீக்க முடியும் உறுதியாக சொல்லலாம் . என்ன செய்ய வேண்டும் என்பதுதானே வினா?
தலையில் பொடுகு இருந்தால் மூஞ்சியில் பருவுக்கு கொண்டாட்டம்தான் . அதை முதலில் நீக்குக . அதற்க்கான தீர்வு நம் பதிவில் உள்ளது காண்க .
வேம்பு நல்ல மருந்து வேம்பின் துளிரை கொண்டுவந்து அரைத்து மூஞ்சியில் பூசி குளிர்ந்த நீரில் கழுவுக . நாளும் செய்ய வேண்டும் .

படிகாரம் கொண்டு தேய்க்கலாம் . நல்ல பலன் . பருவிர்க்கு மலசிக்கல் முகமையான காரணம் அதை நீக்குக .
நாளும் இயற்க்கை உணவுகளை காலையில் எடுக்கலாம் . இதனால் மூஞ்சி அழகாகும்.

மூஞ்சிப் பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் வீங்குவதலும் , நாளங்கள் அடைபடுவதலும் பரு உண்டாகிறது . பதின் பருவத்தில்
(டீன் ஏஜ் )பாலுணர்வு கூடுவதாலும் இந்த காரணங்களினால் எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்பட்டு சீபம் என்ற எண்ணெய் சுரப்பை அதிகமாக்குகிறது . அளவிற்கதிகமான கொழுப்பு உணவுகளும் நோவை தூண்டுகிறது .காபி , தேநீர் , புகைப்பழக்கம் ,செரியாமை , போன்றவைகள் நோயை தூண்டும் .

உணவு கட்டுப்பாடு தேவை .
இயற்க்கை உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும் .
பப்பாளி பழம் அடிக்கடி எடுக்கலாம் .
எலுமிச்சை சாரு எடுத்து மூஞ்சிஇல் பூசி குளிர்ந்த நீரில் கழுவலாம் .
பருக்களினால் ஏற்ப்படும் கரும் புள்ளி நீங்க படிகாரம் நல்ல பலனை
தரும் .
உருளை கிழங்கின் சாரு எடுத்து பூசி கழுவலாம் .
உளவியல் போராட்டங்களை நீக்குவதும் அவசியம் .

நரை காரணங்கள்
அடிப்படை காரணம் மாறுபாடான உணவு பழக்கம் , அளவுகடந்த உள சிக்கல் .
வைட்டமின் B குறைபாடு , இரும்பு சத்தின்மை , செம்பு சத்து குறைவு ,இவைகள்தான் அடிப்படை கரணங்கள் .
இந்த சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கவும் வண்டும் .
கவலை தலையில் இருக்கிற மயிர் கால்களின் அனைத்து பகுதி களையும் ஒரு இறுக்கத்தை உண்டாக்குகிறது . எனவே கவலையை நீக்க வேண்டும் ,
நரைத்தபின் அவற்றை நீக்க நல்ல மருந்துப்பொருட்கள் மூலிகைகள் உண்டு அவற்றை கொண்டு நரையை நீக்கி மகிழ்வுடன் வாழலாம் .

நூறு அகவைவரை பல்லை பதுகப்பதெப்படி.?
More than a Blog Aggregator

15 கருத்துகள்:

 1. word verification ஐ எடுத்துவிடுங்கள்..

  பதிலளிநீக்கு
 2. //நரை கரணங்கள் //
  //முரயட்ற//
  //பதுகப்பதெப்படி.?//

  எழுத்து பிழைகளை திருத்திகொள்ளுங்கள் பாஸ்..

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா8:32 PM, நவம்பர் 25, 2010

  payanula kurippu melum pala payanulla kurippugalai ethir parkirom...

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு பாராட்டுகள் உங்களின் கருத்துகள் எம்மை செழுமை படுத்தும் குறைகளை கண்டு சொல்லுங்கள் அவைதான் எனக்கு நல்ல மருந்து
  போளுர்தயநிதி

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்தல் சகோ.கண்டிப்பாக படிப்பவர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு பாராட்டுகள் உங்களின் கருத்துகள் எம்மை செழுமை படுத்தும்

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...