ஜனவரி 12, 2011





அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் வணக்கங்கள் .

இந்நாளில் தமிழர்களின் வாழ்வியலுக்காக எமது
௧. நோய் இல்லாமல் வாழ சித்தமருத்துவம் .
௨. விடியலை உடைப்போம்
படித்து மகிழ்வோம்
போளூர் தயாநிதிMore than a Blog Aggregator

இன்றைய பெண்களின் பாலுணர்வு குறைபாடுகள்


இன்றைய பெண்களின் பாலுணர்வு குறைபாடுகள்

இன்றைய இளம் பெண்களிடம் மட்டுமல்லாது பலரிடத்தும் பாலுணர்வு கோளாறுகள் தோன்றி வழக்கை வேதனையாகிறது . இவற்றிற்கான காரணங்கள் பெரும்பாலும் முறையில்லாத வழ்க்கைமுறைதான் எனலாம். இவற்றினை முழுமையாக களைந்து கொள்ளவிட்டால் . இந்த சமுகம் நோயாளியாகும் என்பதில் பிழையில்லை .
இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லோரிடத்தும் பாலியல் தொடர்பான , பிழயான கருத்துகளையே கொண்டு சேர்த்து இருக்கிறது . முறையா கல்வி என்பது அப்பட்டமாக விளக்குவதல்ல . காரணம் பாலியல் கல்வி என்பது பற்றி இன்னும் முழுமை செய்யப்படாமை பிழையனதல்லவா ?
பாலியல் கல்வி நம்மை பொறுத்தவரை வேறுவிதமாக சிந்திக்கிறோம். வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ் )
மென்மையாக பெற்றோரும் அல்லாத ஆசிரியரும் அல்லாத . கல்விக்கே தொடர்பில்லாத ஒரு அமைப்பாக தனித்தனியே , ஆண் , பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே முறையான வாழ்க்கைகல்வி வழங்க வேண்டும் என்கிறோம் . இவற்றை பின்னர் ஆய்வோம் .
பாலியல் அதாவது பாலுணர்வு குறைபாடுகள் ஆண்களை போலவே பெண்களையும் தாக்கி உணர்வு சிக்கலை உண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறது . என்கிறது ஒரு புள்ளிவிவரம் .
பெண்களிடம் காணப்படும் பாலுணர்வு குறைபாடுகள்

தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி உண்டாகாமை
தாம்பத்திய உறவின் மீதான கசப்பு
தாம்பத்திய உறவின் மீது ஆர்வம் இன்மை .
இவைகள் பலரிடத்தும் காணப்படுவதால் இல்வாழ்வில் பெரிதும் வெறுப்படைகின்றனர் .
இதனால் பலரின் வாழ்வு கேள்விகுறி ஆகிறது என்பது உண்மை . இன்று கணவன் மனைவி களுக்கிடையே நடைபெறும் சிக்கல்கள் இது பற்றியதே . அதாவது ஆண் உணர்வு குன்றி இருந்தாலும், அல்லது பெண்கள் உணர்வு குன்றி இருந்தாலும் அங்கு சந்தேகம் என்ற பேய் ஆட்டிபடைக்க தொடங்கு கிறது வேருயாருடனோ தொடர்பு உள்ளது என தவறான காரணத்தை கற்பித்துக்கொண்டு
வாழ்க்கையினை கெடுத்துக் கொள்ளுகிறார்கள் இவற்றை நீக்க வேண்டியது நல்ல மருத்துவர்களின் கடமையல்லவா ?
காரணங்கள்

சர்க்கரை நோய்
மிகையான உடற்பருமன் .
குழந்தையில் உண்டான கசப்பான நினைவுகள் .
உளவியல் குறைபாடுகள் .
கருப்பை நீக்கத்தின் போது .
புகை , மது , பழக்கங்கள் .
கருத்தடை மாத்திரைகள் அல்லது அது தொடர்பான காரணங்களினால் ..
பிற தீராத நோய்களினால் .
ஏக்கம், வெறுப்பு, பதற்றம் , போன்ற காரணங்கள் .
திருமணவாழ்க்கை பற்றிய புரிதலின்மை .
இப்படி காரணங்கள் தொடருகிறது முறையான காரணங்களை கண்டறிந்து நோய் நீங்கி நீடுவழ இந்த பதிவு .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...