அக்டோபர் 23, 2010

போதையை ஒழி புகையை அழி





  • போதையை ஒழி
  • புகையை அழி


இன்று மயக்கம் தரும் போதை பழக்கம் அரசின் துணையோடு எல்லோருக்கும் பழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது .இதனால் அடுத்த கட்ட தாலைமுறை முற்றிலும் நோயாளியான சமுதமாக மாறிப்போக வாய்ப்புண்டு
எனவே இன்றே இலைய சமூகத்தினை அவற்றில் இருந்து மீட்டெடுக்க வண்டிய நிலையில் உள்ளோம் . போதை பழக்கத்தினால் எவருக்கேனும் நலம் உண்டோ ?

ஒட்டு மொத்த சமூகத்திற்கே அது கெடுதலை செய்கிறது . அப்படி பட்ட செயலை நாம் ஏன் தொடரசெய்ய வேண்டும் . யாருக்கு இதனால் பலன் . குடிப்பவருக்கா ?
அல்லது இந்த சமுகத்திற்கா ? யாருக்குமில்லை தொடுவானேன் ?


மயக்கப் பொருட்களினால் (குடி ,புகை ) வரும் கேடுகள்
.
௧.தொண்டை புண் வருகிறது .

௨. நுரையீரல் இறுக்கம் ஏற்ப்படுகிறது .

௩.காசநோய் தோன்றுகிறது .

௪. குருதி நாள இருக்கநோய் தோன்றுகிறது .

௫. குருதி (இரத்த ) சோகை தோன்றுகிறது .

௬.கல்லீரல் சிதைவு ஏற்ப்படுகிறது .

௭. காமாலை தோன்றுகிறது .

௮. நரம்பு தளர்ச்சி தோன்றுகிறது .

௯. கை ,கால் நடுக்கம் ஏற்ப்படுகிறது .

௧0 .உடல் சோர்வு தோன்று கிறது .

௧௧ .எதிலும் பற்றின்மை ஏற்ப்படுகிறது .

௧௨. பசி இன்மை தோன்றுகிறது .


௧௩ .நாவில் சுவை இன்மை தோன்றுகிறது .


௧௪ .கண்பார்வை குறைபாடு தோன்று கிறது .

௧௫. குத்திருமல் தோன்றுகிறது .


௧௬.உணவு வழிஅழற்சி தோன்றுகிறது .

௧௭ .தலை மயிர் உதிர்தல் , நகம் சிதைவு உண்டாகிறது .

௧௮ .கை ,கால் களில் குருதி ஓட்டத் தடை ஏற்ப்பட்டு கருமைநிறம் தோன்றல் ,உணர்வின்றி போதல் போன்றவை ஏற்ப்படுகிறது .

௧௯. ஆண்மை குறைபாடு தோன்றுகிறது , பெண்களுக்கு பெண்மை குறைபாடு தோன்றுகிறது .

௨0 .நினைவாற்றல் படிப்படியே குறைகிறது .


இப்படி பலநோய்கள் நாம் வீட்டு கதவை தட்டி அழைகிறது அது மட்டுமல்லாமல் நாம் பணமும் செலவாகிறது . பலரிடம் நன்மதிப்பும் கெடுகிறது
தொடர்ந்து பத்து ஆண்டுகள் மது அருந்துவதால் நுரையீரல் புற்று, கல்லீரல் புற்று , குருதிபுற்று , என நோய்கள் தொடர்ந்ந்து வந்து அலைகழிக்கிறது .அதனால் குடிப்பவர்கள் , புகை பிடிப்பவர்கள் அதை விட்டு ஒழித்து விடலாமே
நீங்க என்ன நினைக்கின்றீர்கள் ? எனக்கு எழுதுங்களேன் ..

அடுத்து : ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறதுMore than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...