ஜூன் 01, 2013

உளவியல் போராட்டங்களும்  நோய்களும் 


 அன்பான  உறவுகளே  வணக்கம் .
இந்த இடுகையை  நான் பதிவு செய்து கொண்டு இருக்கும் பொது பலவிதமான  உளவியல்  போராட்டங்களோடு  பதிவு செய்கிறேன் .
காரணம் இந்த  இடுகை உயிர்ப்போடு  இருக்கவேண்டும்  என்பதற்காகத்தான் . ஓமியோபதி  தத்துவத்தை  கண்ட சாமுவேல்  ஆனிமன் தனது வாழ நாளில் பல மருந்துகளை   தானே  உண்டு மெய்பித்தார்  இது சித்தர்களின்  வழிவந்த அறிவு மரபு என்பது  உமக்கு தெரியும் .

        இதற்கு முன்னதாக  பாலுறவு  படங்களை பார்க்கலாமா ?
 என்ற  பதிவை  எழுதுவதற்கு  பல பாலுறவு பட காட்சிகளை  நுணுகி நுணுகிபர்த்துவிட்டு  அதும் கூட  உடல் முழுவதும் எண்ணை  தேய்த்து  குளித்துவிட்டு  உடலை குளிரவைத்துக்  கொண்டு  பார்த்து உடலில் என்ன மற்றம் நிகழுகிறது  என பதிவு செய்தேன். அதேபோல  கடந்த இடுகை  பல மாதங்களுக்கு  முன்பே  எழுத எண்ணி தொகுக்கப் பட்டதாகும்  இதற்க்கு 50க்கும்  மேற்பட்ட பாலுறவு தொழிலாளி களை  நேரில்  கண்டு கேட்டு பதிவு செய்யப் பட்டதாகும் .

       அதே போல  இந்த  இடுகையும்  உயிர்ப்போடு  இருக்க எண்ணி பல போரட்டங்களை  வர  வழைத்துக்  கொண்டேன். அந்த உளவியல் கூறு  இப்போது கூட  இருந்து கொண்டுதான்  இருக்கிறது  என்றாலும்  இப்போது பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும் என எண்ணி பதிவு  செய்கிறேன் இதை  நான் விரும்பிய அதே கண்ணோட்டத்தோடு  எத்தனைபேர்  உள்வாங்கிக்  கொள்ளப் போகிறார்கள்  என்பது எனக்கு புரியவில்லை .

    உலகில்  வாழும் உயிரிகளில்  மனித உயிரி பலவிதமான உளவியல் போராட்டங்களோடு  நோய்களை உள்வாங்கிக் கொள்ளுகிறது . இது  உண்மையில் எவரும் தவிர்க்க இயலாத  கூறு என்பது  எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் இதிலிருந்து விடுபடுவதும்  இதை எளிமையாக எடுத்துக் கொள்ளுவதும் முடியும் இது  உண்மையும் எல்லோராலும் இயலுகிற செயலே 

       உளவியல் போராட்டங்களில்  உடலில்   பலவிதமான  இரசாயன மாற்றங்கள் நிகழுகிறது  இந்த இரசாயன மாற்றங்கள்  பலவிதமான  நோய்களாக மாற்றங்கொள்ளுகிறது. இது தற்காலிக நோயாகவும்   நீண்ட  தீரா  நோயாகவும்  பரிமாணம் அடைகிறது  இந்த உணச்சிப் போராட்டத்தில் மனிதன்  கற்றுக் கொள்ளுவது மிகவும் சொற்பமே  இதை  முறையாக கற்றுக் கொண்டு  இவற்றில் இருந்து விலகி நோயில் இருந்து.விடுபடுகிறவர்கள்  மிகவும் குறைவு .

 உளவியல்  போராட்டங்களினால் தாறுமாறாக  உண்டாகும்  இரசாயன மாற்றம்  தருமாறன இரசயான உற்பத்தி  உடலில் பலமிழந்த  எல்லாப் பகுதிகளையும்  சேதப்படுத்துகிறது .இந்த சூழலில் தூக்கம் இருக்காது  பசி இருக்காது  அமைதியாக  இருக்க  இயலாது  மன நிலை  பாதிக்கப் பட்ட நிலையில் இருப்பார் .இந்த சூழலில் அதிகமான பய உணர்ச்சி  இருக்கும்  மனிதனுக்கு அதிகமான பய உணர்ச்சி இருக்கும் போது  உடலில் தண்ணீர்  சக்தி  காணமல் போய்விடும்  உடலில் தண்ணீர்  சக்தி காணமல் போவதால் சிறுநீரகம் கடுமையாக  பாதிப்பு அடையும் அளவுகடந்த  சினம்  இதயத்தையும்  கண்களையும் பாதிக்கச்  செய்யும்

      அளவு கடந்த  கவலை கொள்ளும்போது பசி உணர்வு குறைந்து போகும்.தூக்கம் குறையும் போது  உடல் சூடேறிப் போகும்  உடல் சூடு  அடைவதால் ரத்தம் சூடேறும்  இந்த நிலையில்  தென்றல்  சில்லென  வீசினாலும் அங்கே நெருப்பைக் கொட்டுவதுபோல  உடலின் நெருப்பு தீண்டும் ...மனிதன் தூங்குவதால்  இரத்தத்தில்  ஒரு வெற்றிடம்  உண்டாகும் இது தடையில்லாமல் உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு பயன் படுகிறது தூக்கம் இழப்பதால் இந்த வெற்றிடம் உண்டாவதில்லைஆதலால்  மனிதன் மனநலன் பதிப்பு அடைகிறான் 

    இந்த கடுமையான உளவியல் போராட்டத்தில் கடுமையான  வீரியம்  மிக்க மருந்துகள் எடுத்தாலும் அது எந்த பலனையும் தராது அனால் ஆங்கில மருந்துகள் குறிப்பிட்ட உடலை கட்டிப்  போட்டு பயமுறுத்தி வேலை வாங்குவது போல வாங்கி குறிப்பிட்ட பகுதியை பாதிப்படையச் செய்து செயலிழக்கச்   செய்யும் ஆக   உளவியல் போராட்டங்களை தவிர்த்து நோயின்றி வாழ்வதற்க்கான வழிகளை உண்டாக்கிக் கொள்ள கோருகிறேன் இந்த பதிவை எழுதுவதற்கு  நான் எடுத்துக் கொண்ட போராட்டம் உண்மையில் அதிகம்  என்றலும் நான் பட்ட எல்லாஉணர்வுகளையும் நான் பதிவு  செய்துவிடவில்லை ...

   சயனைடு என்ற விசத்தை அதன் சுவையை உலகிற்கு அறியச் செய்வதற்காக ஒரு அறிஞ்சர் ஒரு கையில் நச்சுப் பொருளையும்  மற்ற கையில் வெள்ளைத் தாளையும்   வைத்துக் எழுதத் தொடங்க  நச்சைவாயில்  வைத்தவர் s  என்ற ஆங்கில எழுத்தை மட்டுமே எழுத முடிந்ததது அதற்க்குள்ளக அவரை மரணம் தழுவிக்  கொண்டது அறிவியலாளர்கள் உயிரைவிட உலகிற்கு உண்மையை  அறிவிக்க பல சாதனைகளை செய்து இருக்கின்றனர் 

முதலில்  நான்  சொல்லுவது.... 
உணர்ச்சி கரமான போராட்டத்தில் எந்த  முடிவையும் எடுக்காதீர்கள்  இந்த  சூழலில்  1000 மடங்கு  பிழை உண்டாகும் .
பதற்றமான சூழலில்  உங்களின் எண்ணங்களை  திசை  திருப்பி விடுங்கள்.
நிகழ்ந்துவிட்ட  பதற்றத்தை தனித்துக்   கொள்ள  முயலுங்கள் .
சிக்கலை பெரிது படுத்தும்  நபர்களை/ சூழலை  தவிர்த்து  விடுங்கள் .
எந்த சிக்கலுக்கும் எடுத்தேன்  கவிழ்த்தேன்  முடிவை கைக் கொள்ளாதீர்கள்.
இந்த சூழலில் எந்த முக்கியமான முடிவையும் எடுக்காதீர்கள் ..
உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் 
நீங்கள்  எத்த்தனை  பெரிய ஜாம்பவானாக  இருந்தாலும்  உங்களை உங்களின் உணர்ச்சி கவிழ்த்துவிடும்.
நீங்கள் செய்யும் செயல் நியாயமானது என  கற்பிதம் கொள்ளாதீர்கள்.
இந்த பதற்றத்தில்  கொடிய  குற்றவாளியாக இருந்தால் கூட  அவர்களின் தரப்பு நியாயத்தை  பதிவு செய்ய  ஒரு நல்ல வாய்ப்பு கொடுங்கள் .

 நான்  செய்தது மிகவும் குறைவு ...குடும்பத்தில் சிக்கலைத் தீர்க்க  குழப்பத்தையும் உண்டாக்கலாம்  எல்லோரும் கூட்டுக் திரும்பினால்  குழப்பமும் தீரலாம் ....குழப்பங்கள்  தீரவேண்டாம் என எண்ணினால்  விடையும்  தரலாம்  உங்களிடம் இருந்து  தற்காலிகமாக விடை பெறுகிறேன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்
 






Click here to Reply or Forward

      

 
More than a Blog Aggregator

மே 06, 2013

பெண்களும் பாலுறவு வெறித்தனங்களும்

                                         
                                            பண்பாட்டுசீரழிவின்மூலவேர்

       இப்போது  பல இல்லங்களில்  பாலுறவு சிக்கல்  குடும்பத்தையே  சீரழித்து  வருவதை  ஊடகங்கள்  வழி காணுகிறோம். இவற்றிக்கான  சிக்கலை  ஆய்வு  செய்வது இந்த பதிவின் நோக்கம்  பல  ஆண்டுகளாக  இது குறித்தான  ஆய்வை  விரிவான வகையில்  செய்யவேண்டும் என எண்ணம் கொண்டு இருந்தேன்  பலவேறு காரணங்களினால்  இது இயலாமல்  போனது .   இங்கு இதுபற்றி கொஞ்சம் சிந்திப்போம் .
     முதலில்  ஆண்களின் உடலுறுப்புகளும் பெண்களின் உடலுறுப்புகளும்  மாறுபட்டவை .இதிலும்  பாலுறவு  மண்டலங்கள்  மாறுபட்டவை .ஒரு ஆண்  எளிதில்  உணர்ச்சி  அடைந்து பாலுறவு எண்ணத்தை வெகு சீக்கிரத்தில் முடித்துக் கொள்ள இயலும் காரணம் அவனுடைய உடலுறுப்புகள்  அப்படி  அதுமட்டும் இல்லாமல்  இன்றைய விரைவு காலம்... மற்றும் மாறுபட்ட உணவுமுறை .... மாறுபட்ட வாழ்க்கைமுறை  போன்ற காரணங்களினால்  பாலுறவில்  பெரும்பான்மை ஆண்களுக்கு இயலாமை உண்டாகிறது . அல்லது சில பெண்களுக்கு  தமது இணையரிடம் கிடைக்கும் பாலுறவு  போதாக்  குறையானதாக  இருக்கிறது காரணம்  பெண்களின் உடலமைப்பு. அப்படியாக  இருக்கிறது .
    ஓமியோபதி  மெய்மத்தை  கண்டறிந்த  சாமுவேல் ஆனமன்  தனது வாழ்நாளில்  99 மருந்துகளை முறையாக தானே உண்டு மெய்பித்தார் இது  தமிழ் சித்தர்களின்  வழி வந்த தாகும்  எந்த மருந்தையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே   சித்தர்கள்  தானே முதலில் சாப்பிட்டு பார்த்து  இந்த உலகிற்கு அர்ப்பணித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன ? இதை இங்கு பதிவு செய்யக் காரணம் பாலுறவில் கூட  பலவேறு பெண்களிடம் பலவேறு  நிலைகளில் ஈடுபட்டு கிடைத்த சூழலை பதிவு செய்து இருக்கிறார் .
      பாலுறவு  என்பது ஒரு அளவுடன் தமது இணையரிடம் மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டியதாகும் . இது முறைதவறி .... முறையற்ற  சூழலில் இருந்தததை நமது முன்னோர்கள் தமது பட்டறிவால்  முறைபடுத்தினார்கள் என்பது  வரலாற்றை  முழுமையாக  கற்று அறிந்தவர்களுக்கு  தெரியும் . அனால் இன்று இந்த கற்பிதங்களை செய்து கொள்ளாமையால் மரபுவழி வந்த  நமது பண்பாடு கேள்விக் குறியாகிவருகிறது  இதை எப்படி சரி  செய்வது  சரிசெய்ய இயலுமா  என்பது பற்றி சிந்திக்கத்தான் இந்த பதிவு  எப்படி.....
       இன்றைய  முதலாளித்துவ அமைப்பு முறை  எல்லோரையும் மனிதனாக அல்லாமல் ஒரு பொரியாவே (இயந்திரமாகவே ) மாற்றி விட்டு  இருக்கிறது  எனவே எல்லோரும் உலகியல் இன்பங்களை  பாலுறவும்  கூடத்தான்  எல்லாவற்றையும் அதிலும் கட்டுப் பாடற்ற  பாலுறவை போதிக்கிறது .... இதன் பொருட்டு  நமது மரபு வழிபட்ட  கூட்டுக்  குடும்ப அமைப்பு  சீரழிந்து  வருகிறது   இதை முறையான சமூக ஆர்வலர்களால்  தாங்கிக்  கொள்ள  இயலவில்லை .

      சீரழிவிற்க்கான  காரணங்களை இனம் கண்டு மரபுவழிப் பட்ட  நமது வாழ்வியல் முறையை  நிலை நிறுத்த  வேண்டிய  திட்டமிடல் களை இன்றைய  இளைய தலைமுறையினருக்கு  அறிமுகப் படுத்த வேண்டியது  மிகவும் தேவையான ஒன்றாகும் .நமது பழமை  வாய்ந்த  வாழ்வியல்  முறை மிகசிறந்த பின்புலத்தைக் கொண்டதாகும்  இதை பாழ்படுத்த  அனுமதிப்பது பெருங்குற்றமாகும் . ஈராயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பாகவே தொல்காப்பியம் முதற்கொண்டு ... வள்ளுவம் தொடங்கி  நமக்கு வாழ்வியல் முறையை  எப்படி பண்படுத்தி  கொடுத்து உள்ளனர்  நமது முன்னோர்  இதை நாம் பாதுகாக்க  வேண்டாமா  அதற்க்குத்தான் நாம் இங்கே சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம் .

     இன்றைய பெரும்பான்மை ஊடகங்கள் ....பாலுறவைத்  தூண்டும்  செய்திகளைத் தங்கி வருகிறது . இதை கட்டுப் படுத்த  நாம் தவறி விட்டோம் இதனால் நமது வாழ்வியல் முறை சீரழிந்து கொண்டு  இருக்கிறது . நாம் சீரழிந்து கொண்டு இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே பலர் சீரழிந்து கொண்டு இருக்கின்றனர்  இதை படம் பிடித்து நமது பழமை வாய்ந்த வாழ்வியல் முறையை கலைகளையும்  அறிமுகப் படுத்தாவிட்டால் எப்படி சமூகம் சீரடையும்?

      பெண்கள்  மனித இனத்தில்  முக்கியமையான  பாத்திரப் படைப்பு இதை பாது காக்க வேண்டியதின் தேவையை உணராமல் இருக்கிறோம். பாலுறவில் சிலருக்கு ஈர்ப்பு கொஞ்சம்  அதிகமாக உண்டாகி விடுகிறது  இன்றைய சூழல்  அவர்களின் தேவையை  தமது இணையர்  நிறைவேற்றாமல் விட்டு விடுகிறார் அல்லது இயலாமையில் உள்ளார் என  வைத்துக் கொள்வோம்  இதை  சரி செய்ய முயல வேண்டுமேயன்றி  வேறு ஒருவருடன் பாலுறவைப்  பகிர்ந்து கொள்ளுவதால்  சீரழிவுகள் தலை தூக்குகிறது . என்பதை  அவர்களுக்கு உணர்த்தி  பண்பட வைக்க வேண்டும்.

     தமது இணையரை  விடுத்து பலருடன் பாலுறவு  கொள்ளுவதால்  உடலின் ஏழு  தாதுக்களும் கேடு அடைகிறது  இப்படி தொடர்ந்து கேடோடைவதால் உடலில் கடுமையான பதிப்பினை  உண்டாக்குகிறது . இவருடன் பாலுறவு கொள்ளும் அனைவரும் நோய் கண்டவர் ஆகிறார்.

      மனித உடலில்  ஆணாக இருந்தாலும்  அது பெண்ணாக இருந்தாலும்  விந்துப் பொருள் மிகவும் உன்னதமானது இதை அளவறிந்து  செலவிட வேண்டும்  மிகையாக  செலவிட்டால்  உடல்  சூடேறி  கேடு அடையும்  இதை எவராலும் தவிர்க்க இயலாது . அனால் முறையாக ஒரு கணவனும் மனைவியும்  எவ்வளவுதான்  பாலுறவை வைத்துக் கொண்டாலும்  உடல் கேடு அடையாது .

      பலரோடு பாலுறவினை  பகிர்ந்து கொள்ளுகிற போது உடலில் பலவிதமான  மாற்றங்கள் நிகழ்ந்து  உடல் கேடு அடைகிறது . குறிப்பாக ஒருவர்  பாலுறவு வைத்துக்  கொண்ட 48 மணி நேரம் வரை அதனின் தாக்கம் பெண்களுக்குள் உண்டாக்கும் இந்த இடைப்பட்ட  நேரத்தில் வேறு ஒருவருடன் பாலுறவைப் பகிர்ந்து கொண்டால் .... இது தொடர்ந்தால்  குறிப்பிட்ட அந்த பெண் கடுமையான  இரசாயன மாற்றங்கள் உடலில் உண்டாகி தினமும் பலரோடு  பாலுறவை வெறித்தனமாக  வைத்துக் கொள்ள  தூண்டுகிறது . என்கிறது அறிவியல் .

      இதை  தடுக்க என்னும் போதுதான்  குடும்பங்களில்  சிக்கல் தோன்று கிறது . இந்த நேரத்தில் மனைவியின்  வெறித்தனத்தை  தீர்த்துக் கொள்ள  பலரை  நாடுகிறாள் . கணவன் நாணுகிறான்  குடும்பம் சீரழிகிறது . இப்படிப் பட்டோருக்கு  ஓரினச்  சேர்க்கை முதற் கொண்டு சுய இன்பம் வரை  துணையாகிறது  . இவற்றால் உடல் கேடு அடையும் என்பது  உண்மை .


    இந்த  பண்பாட்டு சீரழிவின்  தொடக்கத்திலேயே  இனம் கண்டு அதை தடுத்து விட்டால்  குடும்பமும்  சீரழியாது . நாடும்  கேடு அடையாது. இவர்களின் பாலுறவு  எண்ணங்களை  தூபமேற்றி விடுவது  இன்றைய இணையதளம் முதற்க் கொண்டு  கைப் பேசிவரை  துணைபோகிறது .


 என்ன செய்யப் போகிறோம் ?

சித்த மருத்துவத்தில்  இதற்கு என்ன தீர்வு   சிந்திப்போம்.

சித்த மருத்துவங் காப்போம்  நோய் வெல்வோம்.

More than a Blog Aggregator

ஏப்ரல் 16, 2013

ஆண்மைக்குறைவும் மக்களின் அறியாமையும்

 


             இப்போது  தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரன் போல ஆகிவிடுகிறார்கள் அல்லது ஆக்கி விடுகிறார்கள் . ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் அழகுப் பதுமை அவர். வழமையாக  ஒரு  சமையல்கலை குறித்தான  நிகழ்வில்  பங்கேற்கிறார் . அந்த நிகழ்ச்சியை  தொலைக்கட்சியில்  கண்டவர்கள் எல்லாம் அந்த  அழகுப்  பதுமையை  நல்ல சமையல் கலைவல்லுனராகவே  சித்தரித்து  விட்டார்கள்  பாவம். அதன் பொருட்டு  கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க  இறுதியில் அந்த அழகுப் பதுமை  உண்மையை போட்டு உடைக்க  அப்போதும் கூட  அவரை வட்டமிட்டு  வினாத் தொடுத்தார்கள்  சமையல் கலையை பற்றி கூறுங்கள் என்று . அவர் மீண்டும் மீண்டும் சொன்னது  நான் இதுவரை வீட்டில் கூட சமையல்  செய்தது இல்லை , தொலைக் காட்சி  படப்பிடிப்பிற்காக  நடித்தேன்  அவ்வளவு தான் .பாவம்  அறியாமை  மக்களை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள் ..!

            ஒரு மருத்துவனுக்கான  நல்ல அறிகுறி மக்களை நோயில் இருந்து விடுவிப்பது . ஆனால் செத்துப் போன நிலையிலும்  பணத்தாசை பிடித்து  பணத்தை கட்டிவிட்டுத்தான்  பிணத்தை எடுத்துச்  செல்லச் சொல்லுகிறது இன்றைய  சில மருத்துவமனைகள் . அறியாமை பிடித்த மக்கள்  மீண்டும் மீண்டும் அங்கேயே  வட்டமிடுவது  எதைக்காட்டுகிறது ?

           ஆண்மைக் குறைவு  என்ற  வெற்றுச் செல்லாடலும்  இப்படியே...! இன்றைய புதிய அறிவியலும்  ஆண்குறிக்குச்  செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால்  ஆண்குறி எழுச்சி  இருப்பதில்லை என்கிறது . தூய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் ஏழு தாதுக்களும்  பலம் குன்றுவதால் பாலியல் குறைபாடு உண்டாகிறது என்று தெளிவாக கூறுகிறது. சித்தர்கள்  உடலின் ஏழு  தாதுக்களும் பலமடைய  முறையான தீர்வினை  மரங்களின்வேர்கள் , பட்டைகள் , இலைகள்  ஆகியவற்றின் மூலமாக வழங்குகிறார்கள் . மருந்துப் பொருட்களை முறையாக முழுத் தூய்மை செய்தல்  சித்த மருத்துவத்தின்  தனிச்சிறப்பாகும்.  
       
           இன்றைய  ஆண்மைத் தளர்ச்சிக்கு (Male Impotence)முகாமையான   காரணம் இரத்த ஓட்டக் குறைபாடு  என்கிறது  புதிய ஆய்வு முடிவுகள் . உடனே  ஆண்குறிக்குச் செல்லும்  இரத்த குழாயில் உண்டாகும் குறைபாடுதானே இது முன்னமே தெரியும்  என்கிறீர்களா ? அதுதான் இல்லை . ஒருசிலர்  உளவியல் குறைபாடு  என்கிறார்கள் இதுவும் இல்லை .தமனி (artery ) குழாய்  களில் உண்டாகும்   இரத்த ஓட்டத்  தடையே ஆண்மைத்திறனை  குறைத்து விடுகிறதாம்.ஆண்களின் பாலுணர்வு கிளர்ந்து எழுவதற்கு நைட்ரிக்  ஆக்சைடு  பேருதவி செய்கிறதாம்.   எப்படி...? என்றால்  ஆண்களின் உள்ளம் பாலுணர்வில் திளைக்கும் போது  அந்த உணர்வை  உடலின் மெல்லிய உறுப்புகள்  உணர்ச்சியாக  மாற்றி  ஆணுறுப்பு  விரைத்தெழ  காரணமாக இருப்பது  இந்த நைட்ரிக் ஆக்சைடுதான் .  இதை  மேலை நாடுகளில் ஜிங்கோ  என மரப்பட்டையில் இருந்துதான்  எடுக்கிறார்கள் .... இது தமிழர்களின்  அறிவு சார் சொத்துரிமையின் ஒரு பகுதிதான் என நான் சொல்ல வேண்டுமா என்ன  ? தமிழர்கள்  விழிப்படைய வேண்டும் என்பது தான் நமது எண்ணமெல்லாம் .

More than a Blog Aggregator

மார்ச் 26, 2013

கோடை வெம்மையை கொடையாக்குவோம்


அன்புள்ள உறவுகளே  வணக்கம்  நீண்ட  நாட்களாக  வலைபதிவு  எழுத இயலவில்லை ...... இப்பொழுது மீண்டும்  எழுதுகிறேன் ....
                              

       இன்றைய புதிய உலகம்  நோய்களை பெரிதும்  உண்டாக்குகிறது  காரணம் முறையில்லாத உணவுகள்  மரபு வழிப்பட்ட  பழமையான  உணவுகள் இன்றைய  இளைஞ்சர் களுக்கு மறந்தே போயின அப்படிப்பட்ட  மிகவும்    சிறப்பு வாய்ந்த உணவுகள்  மனிதத்தை நோயில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் நல்ல தேர்ந்த உணவாகவும்  இருந்தது . ஆனால்  இன்றைய உணவுகள்  வரட்டுத்தனமான  சுவையை மட்டுமே  கொண்டு உடல் நலனை பின்னுக்கு தள்ளிவிடுகிறது .
       இன்றைய புதிய   உலகம் குடிநீரை கூட எடுத்துக் கொள்வதில்லை என்ற  அதிர்ச்சி தரும்  காணக்  கிடைக்கிறது  நீர் வேட்கை  கொள்ளும் நேரத்தில் புட்டியில் அடைக்கப் பட்ட  மென் பானங்களே   அவர்களின் உயிர்காக்கும்   குடிநீராகிவிடுகிறது    ஆனால் அது அவர்களின்  உயிரை குடிக்கும்  என்பது அவர்கள் அறிந்து கொள்ளுவதில்லை  . அது பற்றிய சிந்தையும் அவர்களுக்கு வருவதில்லை  இதற்கான கரணம் இந்த சமூகம் அந்த  கல்விகளை அவர்களுக்கு அளிக்கவில்லை  ஒரு உணவு  நோயில்லாத உணவைத தரவேண்டும் என்பது நமது மரபுவழிபட்ட முறையாகும்  இந்த உலகே பயன் படும் விதமாக நமது உணவு முறை இருந்து வந்தது அனால் இன்று எல்லாவிதத்திலும் மேலை நட்டு நாகரீகத்தை கண் மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு  நமது சமூகம் நோயில் வீழ்ந்து தவிக்கிறது . இந்தகைய  பானங்கள்  உடலை கெடுப்பதோடு சிறுநீரகத்தினை  சல்லடைகளாக செயலிழக்க  வைத்து  விடுகிறது  அனால்  நமது  மரபு வழிப்பட்ட  உணவு முறை  கோடைக் காலங்களில்  
 சோற்று நீர்...  இது மிகசிறந்த  சிறந்த குடிநீர்  இதில்  செரிமானம்  கூட்டும் திறன்  மிகையாக உள்ளது  உள்ளுருப்புகளை  திறம்பட  செயல்பட வைக்கிறது .வாத பித்தத்தை  கட்டுப் படுத்துகிறது.

இளநீர்  ... இதன் குணத்தை  சொல்லத்தேவையில்லை  உடலை

குளிர்விக்கும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது  . இதில் அடங்கியுள்ள  தாது உப்புகள் என்னில் அடங்காதவை. இவை அனைத்தும்  உடளுக்கு நன்மை செய்யக் கூடியது .

பதநீர் ... இது  கபத்தை  கட்டுப்படுத்துகிறது  மூச்சிறைப்பு  நோயில் சில மருந்துகளுக்கு துணை நிற்கிறது  உடலுக்கு  தாது  உப்புகளைத் தந்து  பல நோவில் இருந்து விடுவிக்கிறது .


மண் பானைநீர் ... இது  மிகசிறந்த  குடிநீர்  இன்று  நீரில்  கலந்து உள்ள தேவையில்லாத  அழுக்குகளை  நீக்கி தூய்மையாக்கி  உடலை குளிர்விக்கிறது. கண் எரிச்சலைக் கட்டுப் படுத்து கிறது.

   இப்படி  நமக்கு மிகையாக  இயற்கை அன்னை கொடையாக அளித்து உள்ள குடிநீர்களை பயன் அடுத்தி நோயில் இருந்து  விலகி இருப்போம் .புட்டியில் அடைக்கப் பட்ட உணவுகள்  உடலையும் சிறுநீரகத்தையும்  கேடு அடைய செய்யக் கூடியது  எனவே இவற்றை தவிர்ப்போம்

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...