ஜனவரி 29, 2011

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ? வாழமுடியுமா ? முடியும் என்பதே ...

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ?
வாழமுடியுமா ? முடியும் என்பதே ...


பழந்தமிழர்களின் அறிவு வியப்படைய வைக்கக்கூடியது என்பது நாம் அறிந்தது . பழந்தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்? வினாக்குறி எழுகிறதல்லவா விடைதேடுவோம் .
தோரயமாக பழந்தமிழர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வியலும் எனது எமது சிறிய அறிவிற்கு படுகிறது .

காரணங்களை தேடுவோம்

பழங்கலங்களில் எல்லாம் பொதுவாக இருந்தது . தனியுடைமை காலமாக அப்போது இருக்கவில்லை .இயற்கையாக விளைந்த உணவுகளை முறையாக உண்டு வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் உலகில் முதலில் தோன்றிய இனம் என்ற வகையில் இருந்திருக்கலாம் . சித்தர்களின் காலம் என்பது நிலக்கிழாரிய காலகட்டம் .அதற்கும் முன்பாகவே சிந்துவ்ளி காலங்களிலேயே தமிழர்களின் அறிவு மரபு விரிந்து இருந்தது என்பது நாம் அறிவோம் . இந்த காலங்களில் தோன்றிய மருத்துவம் சித்தர்களின் கூறிய மதிநுட்பம் கடுமையான அர்பணிப்பு போன்ற கரங்களினால் நம் சித்தமருத்துவம் செழுமை அடைந்தது .

அறவியலும் அறிவியலும்

உலகினுக்கே அறிவியலை வழங்கியவர்கள் நம் பழந்தமிழர் என்பது நம் அறிந்ததுதான் . சித்தர்களின் அளப்பரிய உழைப்பினால் தம்மையே அற் பணித்துக்கொண்டு மக்களுக்காக கடுமையாக உழைத்தார்கள் . இந்த காலங்களில் தான் மனிதனின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை கல்பமருந்து களினால் செழுமையாக்கி மனிதத்தை மூப்பில் இருந்து காத்தனர் . அப்படிப்பட்ட கல்ப மருந்துகள் நூற்றி எட்டு என வகுத்தனர் . இந்த மருந்துகள் மனிதனை நோய் இன்றி வாழ வைத்தது நீண்ட நாட்களுக்கு நோய் இன்றி வாழ்ந்தனர் . இந்த காலங்களில் மனிதன் இராசயனங்களை கண்டிருக்கவில்லை அனால் சித்தர்கள் கடுமையான இராசயனங்கலையே முறையாக தூய்மை படுத்துதலின் காரணமாக மருந்துகள் ஆக்கி மனிதத்தை வழவைத்தனர் .

300 ஆண்டுகள் வாழ்வது முடியுமா?

மனிதன் 300 ஆண்டுகள் வாழமுடியுமா என வியப்படையலாம் மருத்துவர் வீரபாகு என்பர்
ஒருகணக்கு ஒன்றை கட்டுகிறார் பார்போம்.பிறந்த முயல் மூன்று மாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோட தொடங்குகிறது , அதன் அகவை இருபது
மாதம் . பிறந்த ஆடு ஆறுமாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோடுகிறது அதன் அகவை பத்து ஆண்டுகள் . ஒரு பசு கன்று ஈன்று ஒருஆண்டில் பூப்பு எய்தி கன்று ஈனுகிறது அதன் அகவை இருபது ஆண்டுகள் . இந்த மாதிரி பிறந்து பதினைந்து ஆண்டுகளில் பூப்பு எய்தும் மனித இனம் இருபது மடங்கு வாழமுடியும் தானே பழங்கால மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க இயலும்தனே ?
எல்லாம் சரி
மனிதன் 300 ஆண்டு வழவியலுமா?

வாழமுடியும் எங்ஙனம் எனில் இயற்கையாக மனிதன் வாழ தொடங்க வேண்டும் . கண்டதை எல்லாம் கண்ட நேரங்களில் தின்பதை நிறுத்தி
இயற்கையோடு இணைந்த வழக்கைமுறையை கடைபிடிக்க வேண்டும் . அது என்ன முறை அடுத்து காண்போம் .
இது குறித்த விமர்சனங்களை siddhadhaya@gmail .com மின் அஞ்சல் செய்க .

அடுத்த எமது இடுகை காதல் என்பது ... காதல் என்பதை இன்றய இளைஞ்சர்கள் எப்படி புரிந்து
கொடிருக்கிரார்கள் . இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த இடுகை ...
நோய் வெல்வோம் நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...