பிப்ரவரி 08, 2011

காதலில் வெற்றி பெற ..., வெற்றி மட்டுமே பெற....Valentines Day Special







காதலில் வெற்றிபெற வெற்றிமட்டுமே பெற ...
பழங்காலங்களில் காதலை இலக்கியங்களில் கண்டு காமுற்றனர். இன்று வெறும் ஏட்டளவிலும் முறையல்லாத ஊடகங்களின் வாயிலாகவும் திரைப்படங்களின் வழியிலும் காதலை அடையாளம் காணுகின்றனர் . இதனால் இந்த சமூக அமைப்பு பல்வேறு சிக்கல் களுக்கு ஆளாகிறது அதைப்பற்றி இன்றைய தலைவர்களோ அல்லது ஆன்மீக மடத் தலைவர்களோ சிந்தித்த தாக தெரியவில்லை . எனவே இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக விடலை பருவத்தினர் உளம் போன போக்கில் தம் பாதையை செலவிடுகின்றனர் . இதனால் அடுத்தகட்ட குமுகம் (சமுகம் ) முடமாகும் நிலை உண்டாகியுள்ளது .

இந்த பதின் பருவத்தில் முறையாக கொடுக்கப்படவேண்டிய வழிகாட்டலை இந்த குமுக அமைப்பு செய்யாமையினால் இளைய தலைமுறை தவறான வழியை நாடுகின்றனர்.முறையான உடல்பற்றியும் , உள்ளம் பற்றியும் , விடலைபருவத்தில் ஏற்ப்படும் உடல் , மற்றும் பாலியல்வேட்கை,போன்ற வற்றை முறையாக அணுகி அவர்களுக்கு தெளிவு படுத்தாமையினால் முறை இல்லாத வழியில் தேடி கேட்டுப்போகின்றனர் . இதில் காலத்தை மிகையாக செலவிடுவதால் கல்வியில் எதிர்கால தேடலில் செலவிடாமல் இந்த காதல் போதையில் முழுகி குமுகத்தை முடமாக்குகின்றனர் . கற்க வேண்டிய அகவையில் கற்கமையினால் பின்னாளில் இவர்கள்தான் போக்கிலிகளாக(ரௌடிகளாக )மாறி தவறான வழியில் பொருளீட்டி இந்த குமுகத்திற்கு சவாலாக மாறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம் . இதை பின்னர் விரிவாக கதைப்போம் .

இனக்கவர்ச்சி

இப்படி முறையல்லாத வழியில் பொறப்படும் காதல் முறையில்லாத வகையில் தொடருகிறது. காதல் ஏற்பட வேண்டிய அகவை ஆண் எனில் இருபத்து ஆறு அல்லது இருபத்து ஏழு அகவையிலும் ,பெண் எனில் இருபத்து மூன்றுஅகவையிலும் மணமுடிப்பது தான் முறையாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் தெளிவான அறிவும் நிலையான வருவாயும் கிடைக்கும். உடலும் எல்லாவற்றிற்கும் ஒத்துழைக்கும் முறையான வருவாயை கொண்டு தெளிவான இல்லறத்தை தொடரலாம் .
காதலுக்கு பெண்ணோ அல்லது ஆணோ தேவை எனில் வற்றிய மார்பகம் கூன்விழுந்த முதுகு , நரைத்த தலை தளர்ந்த உடல் இப்படி யுந்தால் அங்கு காதல் வருவதில்லை ? ஆண் எனில் பூத்து குலுங்கும் பெண் தேவை , பெண் எனில் கட்டழகு காளை தேவை ஆக இது இனக்கவற்சியின்றி வேறென்ன?

முறையல்லாத காதல்

பதின் பருவத்தில் தேவையானது கல்வி பற்றிய முறையான சிந்தனை . இதைவிட்டுவிட்டு காதலில் எண்ணத்தை செலவிட்டால் பின்னர் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடாதா ? இந்த சிந்தனையை இளைய பதின் பருவத்தினருக்கு ஊட்டினோமா? எல்லாவற்றையும் கடைவிரித்து காட்டிவிட்டு அதை எல்லாம் பார்க்க கூடாது என கட்டளையிடுவது கண்மூடித்தனமாக தோன்ற வில்லையா ? அல்லது தவறுகின்ற இளைய குமுகத்திற்கு மாற்றுத்திட்டத்தை கட்டினோமா?

இன்று முட்டாள்களின் பெட்டி எனப்படும் தொலைகட்சிகளிலும் ஊடகங்களிலும் காணும் காதலை உண்மையானது என நம்பி விடுகின்றனர் இது அறியாமையின் வெளிப்பாடு எனலாம் அதாவது பதின் பருவம் (டீன் ஏஜ் ) என்பது ஏதும் அறியாமையில் உள்ள அகவை. இந்த காலங்களில் சேட்டை செய்யும் குரங்கு கூட அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரியும் .இந்த சூழலில் இளைய விடலைபருவத்தினருக்கு முறையான வழிகாட்டலும் உடல் உள்ளம் பற்றிய செயல் பாடுகளை நுட்பமாக புரியவைக்கவேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பெரும்பான்மை ஊடகங்கள் இளைய குமுகம் தவறான பாதைக்கு இட்டுசெல்லும் அளவிற்கு வழி நடத்துகிறது எனலாம் . இந்த இன கவர்ச்சி ஊடகங்களின் வழி பெறப்படும் காதல் என்ற சொல்லாடலை உண்மையானது என புரிந்து கொள்ளுகின்றனர் . ஏதோ ஒருசிலர் பணத்தில் கொழுத்து போவதற்கு இந்த ஒட்டு மொத்த குமுகமே ஏன்
பலியாக வேண்டும் .?

முறையான வழிகாட்டல்

இந்த குமுக அமைப்பு இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டலை தொடங்க வில்லை ஆனால் பழியை அவர்களின் தலையில் சுமத்துகிறது கெட்டுபோவதற்கு வழிகளை சமைத்து கொடுத்துவிட்டு உருப்படவில்லை என முனகுவது ஏற்புடையதாக தெரியவில்லை.
திரைப்படம், தொலைகாட்சி, நாளிதழ்கள் போன்ற ஊடங்களில் இளைய தலைமுறையினர் உள்ளத்தை கவரும் விதத்தில் கட்சி படுத்தி காட்டிவிட்டு, காதல் தவறானது என புலம்பி ஆவது ஒன்றுமில்லை. இந்த ஊடகங்களில் இளைய தலைமுறையை சீரழிக்கும் பாலியல் தொடர்பான காட்சிகளை முன்னிலைபடுத்தி காட்டிவிட்டதால் அதில் மயங்கி அந்த காதலை உண்மையானது என நம்பி விடுகின்றனர் .

அரசியல் பிழைப்பு

இன்றைய அரசியல் பிழைப்பு வாதிகள் பண்பாடு , மொழி , இனம் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை இதனால் நுகர்வு பண்பாடு மிகுதியாகி கிடைத்தை எல்லாம் நுகர்ந்து விடவேண்டும் என எண்ணம் கொள்ளுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் மக்களையும் பாடாக படுத்துகிறது . இந்த குமுகத்தை சீரழிக்கிறது .இளம் அகவையில் காட்டப்படும் பாலியல் தொடர்பான கட்சிகள் அவர்களை தவறான வழிக்கு இட்டு செல்லுகிறது.
சம அவவையுடைய எதிர் பாலினரை கண்டாலே மின்மினி பூச்சி பறக்க தொடங்கிவிடுகிறது என்கிறனர் , நெஞ்சம் குருகுருப்பதகவும் இதயம் படபடப்பதகவும், மின்சாரம் பாய்வதை போன்ற உணர்வு தோன்றுவதாகவும் சொல்லுகின்றனர். இந்த எண்ணம் கொண்டுவிட்டால் படிக்கவும் இயலவில்லை, தூங்க இயலவில்லை மூச்சி நின்றுவிடும் போல் இருக்கிறது என்கிறனர் இந்த உணர்களை தந்தது இந்த குமுக அமைப்புதானே ?
காதல் குறித்த புரட்டல் களும் செய்கைகளை தூண்டும் எண்ணங்களும் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது ? ஊடகங்களின் வழிதானே பெறப்படுகிறது .அதுமட்டும் அல்ல நம் பண்பாட்டை சீரழிக்கும் ஆடைகுறைப்பும் ஒருகாரணம் எனலாம் .இந்த சமவயது காதல் எளிதில் தோல்வி அடைகிறது என உறுதியாக கூறலாம் . ஏனெனில் முறையான திருமணம் எனில் குறைந்த அளவு ஐந்து அகவை இருவருக்கும் வேறுபாடு இருக்க வேண்டும் . பெண்களைப் பொறுத்தவரை விரைவில் மூப்பு அடைந்து விடுவது இயற்கையின் காரணமாக . இந்த மூப்பு பலருக்கு வாழ்க்கையில் போராட்டத்தை உண்டாக்கு கிறது எனலாம் .

காதல் என்பது என்ன ...

உண்மையில் காதல் என்பது என்ன ? ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வதற்கான ஓரு முன்நீர்ர்பாடுதாநீ ? இன்றைய காதல் அப்படி இருக்கிறதா ? கண்டதும் காதல் என்பது நாய்காதல் என்று சொல்லலாமா? நாய்கள்தான் கண்டதும் (பார்த்தத்தும்) ...... நாம் ஆறு அறிவு உள்ள மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள் ஆகவே காதல் செய்யும் முன் ஆண் அல்லது பெண்ணின் வெறுமனே புறத்தோற்றத்தை கண்டு காதலிக்காமல் அவள் அவன் நம் காதலுக்கு ஏற்றவனா? இணக்கவற்சியினால் உண்டானதா? நம் எண்ணம் களுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர்களா ? சிக்கல் நேர்ந்தால் அதை எப்படி அணுகப் போகிறோம் ? வாழ்வதற்கு பணம் தேவைப்படுமே அந்த பொருளை எப்படி ஈட்டபோகிறோம் எதிர்காலத்திட்டம் இவற்றைப்பற்றி எல்லாம் நன்கு பேசித்தானே காதல் வாழ்க்கையை தொடங்க வேண்டும் அப்படி இல்லாமல் இன்று கண்டது காதல் என்பதால் விரைந்து மன முறிவுகளும் அல்லவா உண்டாகிறது ? இதற்க்கு என்ன தீர்வு வைத்துள்ளனர்.

காதலிக்கும் முன்பாக எதிர்கால திட்டம் தம் காதல் முறையான அகவையில் முறையாக தொடங்கியது தானா எல்லைமீறிய நிறைவேறாத காதலா நான்கு வருவாய் ஈட்டும் பலர் மண முறிவுகளை சந்திக்கின்றனரே என எல்லா வகையிலும் சிந்தித்து காதல் செய்தால் இந்த
குமுகம் விழிப்படைந்து விட்டது என்பது பொருளாகும் . உங்கள் காதல் எப்படி பட்டது ?
இதைப்பற்றி எல்லாம் பெசிவிட்டுதனே பிப்ரவரி பதினான்கு பற்றி சிந்திக்க வேண்டும் அப்படி வாழ்வின் இன்பம் , துன்பம் எல்லா பக்கங்களையும் இன்பம் எனின் குதித் தெழாமல் துன்பம் வந்தவிடத்து துவண்டு போகாமல் துன்பம் நேர்ந்த விடத்து தீர்வு மணமுறிவு என எண்ணாமல் வள்ளுவ பேராசான் சொன்ன மாதிரி

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் .

என்பது போல் இல்லறத்தில் உண்டாகும் சிக்கல்களை முறையாக பொறுமையாக பேசி தீர்த்து கொண்டு வாழ்வை வாழ்ந்து காட்ட இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவோம் .

காலமெல்லாம் முறையான காதல் வாழ்க .
எமது விடியலை உடைப்போம் என்றநூலில் இருந்து ... ஒரு பகுதி
இன்றைய இளைய தலைமுறைக்கு முறையான தமிழ் உணர்வை ஊட்டி வாழ்வியலை படமாக வழிகாட்டும் முழுமையான நூல்.

தொடர்புக்கு :போளூர் தயாநிதி .siddhadhaya @ gmail .com
91 - 94429 53140 .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...