மார்ச் 26, 2011

வெள்ளப்படுதலும் தீர்வுகளும்

     இந்த வெள்ளைப்படுதல்  நோயை இருபத்தொருவகையாக சித்தர்கள் பகுத்து உள்ளனர்
          உரைத்திட்டேன்  பிரமியமென்ற  ரோகந்தானே
          உத்தமனே  இருபதொன்  றாகுங் கண்டாய்    
    (யூகிமுனிசிந்தாமணி )

 . இந்நோய்  சிறுநீர் இறங்கும் முன்போ அல்லது பின்போ வெள்ளை நிறத்துடன் சீழ்போல  பெண்களின்  பிறப் புறுப்புகளில் இருந்து வெளியேறுதல்  எனலாம்.இந்த சூழலில்  எரிச்சல் ,கடுப்பு ,அரிப்பு போன்ற தொந்தரவுகள்  தோன்றி  பாடாய் படுத்துகிறது .

    இந்த நோய் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமல்லாது  குளிர் பகுதிகளிலும்  காணப்படுவதாக   ஆய்வுகள்  தெரிவிக்கிறது .கிருமிகளின் தாக்கத்தினால் இந்த நோய் தோற்றம் கொள்ளுகிறது  என பசப்புகிற  வைத்திய சிகாமணிகளும் ? உண்டு .

பாடகப் பெண்போக மிகவி  ரும்பிப்
பயின்றிட்டு  பட்டினியே  மிகவி  ருத்தல்
தாடாகத்  தன்பாதத்தின்   சூடு  தாங்கள்
சரசமாய்  காரத்தை மிகப்  புசித்தல்
ஊடாக உப்ரைத்து  துவர்ப்பு மிஞ்சல்
உக்கிரமாம் பலப்  பலவாம்  விசேடம்  செய்தல்
காடான  உளச்சிக்கல்  கார மான
  கைத்தலொடு   மிகுத்தலித்து  காணுங் காலே 
(.யூகிமுனி  சிந்தாமணி )

என இன் நோய்க்கான  காரணங்களை  அடுக்கு கின்றனர்  சித்தர்கள்   மிகுதியான பட்டினி , காரமான உணவுகள் , கடுமையான  வெப்பம்

    இது பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும்  தாக்குகிறது  இதன் தாக்கத்தினால்  ஆண்கள் மிகவும்  பதிப்பு அடைகின்றனர் .பெண்களுக்கு பெண்குறியில்  நமைச்சலும்  அரிப்பும் சிறுநீர் புழையில்  எரிச்சலும்  சிறுநீர் கழிக்கும் போது வெண்மையான சீழ் போன்ற  திரவம் வெளியேறும் . சிலருக்கு நூல்போலவும்  சிலருக்கு மிகையாகவும்  வெளியேறும் .
இதேபோல  ஆண்களுக்கும் ஆண்குறியில் ...

லிங்கத்தில் நோயுண்டாய்க்  கடுப்பு காணும்
நீரிறங்கி வெண்மையாய் சலமாய் வீழும்
பங்கத்தில் மேனியெல்லாம் பழுப்பாய் காணும்
பாண்டுவாய்க்  கண்ணங்களி இரத்த மில்லை
 

     என்பதால் ஆண்குறியில்  வலியை உண்டாக்கி நீரை கழிக்க செய்யும் .சிறுநீரில் வெண்மையான சீழுங் கலந்திருக்கும் . நீர்புழை எரிச்சல் அடையும் .அடிக்கடி நீர்சுருக்கு உண்டாகி உடல் அழல் (பித்தம் )குற்றம்  மிகுந்து சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் அடித்தண்டில் வலி  உண்டாகும் .அடிவயிறு ஒருபக்கம் இழுத்து பிடிப்பது போல இருக்கும் .

    இப்படி இருபாலினரையும் கண்மூடித்தனமாக  தாக்குகிறது .இந்த நோய்  பெண்குழந்தை களையும்  தாக்குகிறது .நம் மருத்துவ நடுவத்திற்கு பத்தே அகவை நிரம்பிய பெண்குழந்தையை இந்த நோதக்கியிருக்கிறது என்றுகூறி  அழைத்து வந்தார் பெண்ணின் தாய்
முறையான  மருத்துவமும் ,உணவுபழக்கங்களையும்  கடைபிடிக்க வேண்டிக்கொள்ள பட்டது .
       பெரும்பாலும் முறையற்ற நடவடிக்கை களும் , முறையற்ற  உணவு  பழக்கங்களும்  இந்நோய்க்கு காரணமாகிறது .

தீர்வுகள்

காரம் குறைத்து உண்க.
குளிர்ந்த நீரில் குளிக்க செய்க.
மென்பானங்களை (கோக் ,பெப்சி ...) நீக்குக .
காபின் கலந்த (காபி )சாக்லேட்  நீக்குக.
மிகையான  பாலுறவை குறைத்துக் கொள்க .
கீரைகள். பழங்கள்  உணவில்  சேர்த்துக் கொள்க.
மாமிச  உணவை  நீக்குக .
எள் எண்ணெய்க் குளியல்  செய்க.

மருந்துகள்
     நெல்லி வற்றல் ,படிகாரம் (தூய்மையாக்கியது)கற்கண்டு  சம அளவு  எடுத்து தூளாக்கி சீன கற்கண்டு  சமன் கூட்டி  நாளும்  மூன்று வேளை மோரில்  அருந்தவும் . மூன்று  நாட்களுக்கு  மோர்  பால் போன்றவற்றில்  சோறு  உண்க .

குமரி கலந்த மருந்து  எடுத்து கொள்க
.
தண்ணீர்  விட்டான் கலந்த மருந்து எடுத்து கொள்க

      கருவேப்பிலை  மிகவும்  சரியான மருந்து  இதன்  பெயரே காரணமாய் அமைந்தது எனலாம் . கருப்பை  வெப்பம்  இல்லை  என்பதுதான் .பழந்தமிழர்  எல்லாவற்றிற்கும்  காரண,காரியத்தோடு  பெயரிட்டனர்  அந்த வகையில் கறிவேப்பிலை  கருப்பையின்  வெப்பத்தை  நீக்குவதில்  வல்லது  துவையல் செய்து  நாளும்  உண்க.நாளும்  சிறுநீர்  கழித்த  பின்னர் படிகாரம்  கலந்த தண்ணீரில்  பிறப்புறுப்புகளை  கழுவி வரவேண்டும்  இப்படி செய்வதால்  எரிச்சல் , அரிப்பு , துர்வாடை  போன்றவை  நீங்கும் .

நோய்வென்று  நீடு வாழ்க
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...