இன்றைய சூழலில் இந்த வாயுத் (குடல் கற்று ) தொந்தரவு பல்வேறு நோய்களை தோற்றங் கொள்ளச் செய்கிறது என கடந்த இடுகையில் பதிவு செய்து இருந்தேன் . இன்றைய உணவுமுறை அப்படியாகி விட்டதன் காரணத்தை நாம் அறிந்து கொண்டுதான் தீரவேண்டும் .முதலில் உணவுமுறை ஒரு கட்டுக்கடங்காத நிலையில் நம் வைத்து இருக்கிறோம் . அறிவைத் தேடி அதன் அடிப்படையில் நமது வாழ்வை கட்டமைப்பதில்லை . உணவைத்தேடி உண்பதில்லை முறையான வாழ்வு , உணவுமுறை, வாழ்க்கைமுறை எப்படி பாட்டதாக இருக்கவேண்டுமென ஒரு வரைபடத்தை வகுத்துக் கொள்வதில்லை. அல்லது அதுபற்றி தேடலும் இருப்பதில்லை இதுதான் இன்று நோயாக பரிமாணம் அடைந்து மனிதத்தைக் கொல்லுகிறது.
வறட்சி நிறைந்த உணவுகள் குடலில் ஒருவித நைப்புத் தன்மையை உண்டாக்குவதில்லை இதனால் குடலில் செரிக்கும் தன்மை குறைதல் ,குடல் பலவீனம் அடைதல் கழிச்சல் காணுதல் குடல் கற்றுத் தொந்தரவு என பலவேறு நோயாக வந்து சேருகிறது . வறட்சி நிறைந்த உணவுகள் என்பது எலுமிச்சை , தக்காளி , இப்படியான பொறிக்கப்பட்ட உணவுகளும் துரித உணவுக்களுமான இந்த உணவுகள் குடலில் நைப்புத்தன்மையை உண்டாக்குவதில்லை இந்த உணவுகளை தொடர்ந்து உண்பதால் குடல் கட்டுப் பட்டை இழக்கிறது . முன்பே சொன்ன மாதிரி பல நோயாக பரிமாண மற்றம் அடைகிறது.
பழந்தமிழரின் முந்தய உணவு முறையை கடைபிடிக்கமையால் பலவேறு நோய்களையும் கேட்டுப் பெறுகின்றனர். குறிப்பாக சுவையை உண்டாக்கும் எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள் சில கிழங்குகள் துரித உணவுகள்
எல்லாமே வறட்சியைத் தரும் உணவுகள் என கண்டோம் பருப்பு வகைகளும் இன்று முறையில்லாமல் முறையாக பதப் படுத்தாமல் உணவில் சேர்ப்பதால் நோய் உண்டாகிறது என்பதையும் கணக்கில்எடுத்துக் கொள்ளவேண்டும் . முளை கட்டி பயன்படுத்தப் படும் பருப்பு வகைகள் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில்லை உணவுத்துனுக்குகள் குடலில் நீண்ட நேரம் தங்குவதால் பலவேறு நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது செரிப்பதற்கு எளிமையான உணவுகளை நாம் எடுக்க வேண்டும் இப்படி முறைப்படி உணவு திட்டத்தை வகுத்துக் கொள்வதால் நோயில் இருந்து விலகி இருக்க முடியும் . முளைகட்டாமையால்பருப்பு வகைகள் அதும் புரதம் நிறைந்த பருப்பு உணவுகள் உண்ட உணவு நீண்டநேரம் குடல் பகுதியில் தங்கி அழுகி அங்கு ஒருவித வளியை(காற்றை ) உற்பத்தி செய்கிறது . இதுதான் பலருக்கு சங்கடத்தைக் தருகிறது . பலமருத்துவ வல்லுனர்கள் இந்த குடல் காற்று உணவின் வழி செல்லும் காற்று என புரியாமல் பாவம் பிதற்றக் கேட்டு இருக்கிறேன் அவர்களை விடு விடுவோம் . நாமும் சரியானவர்களை முதன்மைப் படுத்த பழகுவோம் .மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் அதுவரை ....
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
பர்கரும், பீட்சாவும்... கோக்கும் பெப்ஸியும் தமிழனின் இன்றைய இன்றியமையாத உணவாகிப் போனதால்... மருத்துவமனையில் க்யூவில் நிற்கிறான் அவன்...
பதிலளிநீக்குநண்பரே... http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை அனைத்தையும் இணைக்கலாமே... ஏராளமான வாசகர்கள் கிடைப்பார்கள்.