சித்தமருத்துவம் உணவே மருந்து , மருந்தே உணவு என தனது கோட்பாட்டை முன்வைக்கிறது . ஆனால் இன்று விசமே உணவாக மாறி நம்மைக் கொல்லவருகிறது. அதாவது உணவாக இருக்க வேண்டிய பொருட்கள் தவறானவர்களின் செய்கையால் விசமாக மாறி நம்மைக் கொள்ளுகிறது அந்த வரிசையில் இதுவரை நாம் உணவாகவும் மருந்தாகவும் பயன் படுத்தி வந்த தனியா இன்று விசமாக நம்முன் காட்சி அளிக்கிறது எப்படி ?
இன்று கடைகளில் விற்கப் படும் தனியா நீண்டநாட்கள் கெடாமலும் அதேவேளை புத்தம் புதியதாகவும் காட்சியளிக்க சில மருந்துகளை சேர்த்து அதற்க்கு தனியான வண்ணத்தை யுண்டாக்கி சந்தைக்கு அனுப்புகிறார்கள் . இதன் கவர்ச்சியால் கவரப்பாட்ட மக்கள் நல்லதை ஒதுக்கி தள்ளிவிட்டு விசத்தை வாங்கிவந்து உண்கிறார்கள்.
வழமையாக அறுவடைசெய்த தனியா வேளாண் பெரும்மக்கள்மூலம் சந்தைக்கு வரும் இதை வியாபாரிகள் வாங்கிவந்து பதப்படுத்தி வைத்து இருந்து நமக்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள் . இதில்தான் சிக்கல் வேளாண் பெரும் பக்களிடம் இருந்து பெறப்பட்டு பெரிய பெரிய அறைகளில் பதுக்கப்பட்டு குடோனில் அடைத்து அந்த அறை முழுவதிலும் கந்தக புகையை நிறப்புவார்கள் இந்த குறிப்பிட்ட இடத்தில் வைத்து இருந்து பின்னர் அதன் தன்மை முற்றிலுமாக மாறிவிடும் அதாவது கந்தக புகையின் தாக்கத்தினால் தனியா தனியான அப்போதுதான் அறுவடை செய்யப்பட தனியபோல பொன்னிறமாகவும் கரும்பச்சை நிறத்தையும் அடையும் . பின்னர் இதை சந்தைக்கு அனுப்பி விடுவார்கள் இது நீண்டநாளுக்கு இந்த தன்மை மாறாமல் இருக்கும் அனால் நம்மை மட்டும் நோயாளி ஆக்கும்.
மிகக் கொடிய நச்சுகளில் கந்தக டை ஆக்சைடும் ஒன்று என்பது நமக்கு புரியாத ஒன்று அல்ல இந்த நச்சுசுதான் தாஜ்மாகலையே நிறம் மாற்றியது . கல்லையே நிறம் மற்றும் இந்த கொடிய நச்சு மனிதனை என்ன படு படுத்தும்?
நுரையீரல் , வயிறு மற்றும் மூளைபகுதிகளில் புற்று நோய்க்கட்டிகளை உண்டாகும். இந்த கொடுமை குழந்தைகளை மிகையாக பாதிக்கும் என்கிறார்கள்.
நச்சு தனியா
இதன் பாதிப்பால் வேறு என்ன நோய்கள் உண்டாகும் என்பதுதானே உங்கள் வினா ...? பொறுமை இருந்தால் மேற்கொண்டு படியுங்கள் ...
முதலில் செரிக்கும் திறன் குறையத் தொடங்கும் உணவுகளின் செயல்பாட்டைக் குறைக்கும். சிறிது சிறிதாக குடல் புற்று நோவை உண்டாக்கும் . கழிவு மண்டல குடல்கள் சிறுநீரகங்கள்.சிறுநீர்த்தாரை என எல்லா உடல் உறுப்புகளையும் பாதிக்கசெய்யும் . குருதியோட்டத்தை பாதிக்க செய்து நரம்பு மண்டலங்களையும் உடலின் இயக்கத்தை குறைக்க செய்யும்.
இப்படிப் பட்ட பொருட்களை நாம் அடையாளம் கண்டு நாம் ஒதுக்க வேண்டும் இல்லையேல் பல்வேறு நோய்கள் வந்து விரைந்து நோயைத்தழுவி மரணத்தைத் தரும் நோய்வெல்வோம்.
சித்தமருந்துவங் காப்போம்
அதிர்ச்சியான தகவல், இனி எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும், நன்றி!
பதிலளிநீக்கு