இப்போது மிகையாக வாயுத் (குடல்காற்று ) தொந்தரவு என கூறி வருகிறார்கள் . இது முறையில்லாத உணவுப் பழக்கத்தினலன்றி வேறல்ல.உண்ணுகிற உணவு உடலுக்கு ஏற்றதாகவும் எந்த தீங்கும் இல்லாத தன்மை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் . அனால் இன்றுள்ள நிலையில் இது சாத்தியம் இல்லையென நம்மிடம் வருகிறவர்கள் கூறு கின்றனர் .
இது எப்படி என புரியவில்லை நாம் நலமோடு வாழ்வதற்க்குதனே வாழ்கையும் நமது தேடலும் இருக்க வேண்டும் அனால் உண்ண நேரமில்லை உறங்க நேரமில்லை. சரியானதை சரியான நேரத்தில் உண்ண முடியவில்லை இதுபற்றி சிந்தித்தோமா? எதற்காக வாழ வேண்டும் ? வரட்டுத் தனமாக வாழ்ந்து பன்றிகள் போல ஈன்று கூட்டத்தை சேர்த்து செத்து மடிவதா வாழ்க்கை ?
இன்று உள்ள உணவு முறை மனித இனத்தை நோயாளியாக்குகிறது எனவே பண்பாட்டு வடிவிலான பழக்க வழக்கங்களையும் மாற்றித்தான் ஆக வேண்டும் அது பழந்தமிழர்களின் உணவு முறையை அடியொற்றியாதக இருக்க வேண்டும். பழந்தமிழர்கள் உணவு முறையில் மிகவும் சரியாகவே இருந்தார்கள் . திட்டமிட்டார்கள் நோயின்றி வாழ்ந்தார்கள். நாமும் ஏன் வாழக்கூடாது?
முன்பு உணவுக்கு குழம்பிற்காக பயறு வகைகளை முறைப்படி தூய்மையாக்கி பயன்படுத்தினார்கள், இது நோயில் இருந்து அவர்களை காத்தது இன்று அதற்க்கு நேரமில்லை அதனால் உயரமான கட்டிடங்களை கொண்ட மருத்துவ நடுவத்தில் செத்து எடுத்து வந்து அழுது புதைப்பதை பெருமையாக கருதுகிறோம் .
தூய்மை எப்படி? துவரை , சிறுபயறு , காராமணி , என எந்த பயறு வகைகளையும் நேரடியாக உண்ண மாட்டார்கள் அப்படி உண்ண நேரிட்டால் குடலில் நீண்ட நேரம் அழுகி கிடப்பதனால் பல்வேறு நோவை உண்டாக்குகிறது என்பதை கண்டறிந்த பழந்தமிழர்கள் முறைப்படி முளைக்கட்டி செரிக்கும் திறனைக் கூட்டி அதனுடன் முறையாக இஞ்சி , சுக்கு , பூண்டு போன்ற வற்றை சேர்த்து பயன்படுத்தினர் . இன்று அப்படி முளைக்கட்டாமையால் குடலின் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து மட்கி குடலில் ஒருவித வளியை(காற்றை) உண்டாக்கி ஆசன வாய்வழியாக கெட்ட நாற்றத்துடன் வெளியேறுகிறது . இது பெருந் தொந்தரவாக படுகிறது இந்த காற்றை நீண்ட நேரம் அடக்குவதால் பல்வேறு நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது . இது இதய நோய் முதல் பல்வேறு நோயாக பரிணாம வளர்ச்சி அடைகிறது எப்படி என அடுத்த இடுகைகளில் பார்போம்.
/
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
அந்த மேட்டரால் எனக்கும் அவஸ்தை தான்
பதிலளிநீக்கு