தூய்மையில்லாத உணவுகளும் மொச்சை , காராமணி, பட்டாணி , சோயாமொச்சை , கிழங்குகள் , போன்றவைகள் முறைதவறி தவறாக உண்ணப்பட்டால் இவைகள் நீண்ட நேரம் குடலில் தங்கிமட்கி அங்கு ஒருவித வளியை(காற்றை) உற்பத்தி செய்கிறது . இந்த உணவுகளை துணை உணவுகளுடன் அதாவது சுக்கு , மிளகு, இஞ்சி , எண்ணைவகைகள் போன்றவற்றுடன் எடுக்கும்போது பெரும்பாலும் சிக்கலை உண்டாக்குவதில்லை .
இயல்பாகவே மனிதன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை ஈற்று உணவை (மலம் ) கழிக்கச் செய்ய வேண்டும். இந்த நடைமுறை தவறும்போது மனிதன் நோயாளியாகிறான். மனிதனின் பதிமூன்று வேகங்களை வலுக்கட்டாயமாக அடக்குவதால் வலிந்து நோயைத் தழுவு கிறான். இதயம் தொடர்ந்து தொழிற்ப்படும்போது அதன் பாதையில் எந்த குறுக்கீடும் இருக்கலாகாது அனால் வலுக்கட்டாயமாக குடல் காற்று அழுகை, கண்ணீர் , சினம் , ஈற்றுணவு , இப்படி அடக்குவதால் இதயத்தின் பதை மாறிப்போகிறது இதயம் சிரமப் படுகிறது.
இன்று நமது வாழ்க்கை முறையும் உணவு முறையும் மாறித்தான் போனது இப்போது நமது உணவை தீர்மானிப்பது முட்டாள்களின் பெட்டி யாகிவிட்டது முட்டாள்களின் பெட்டி ? (டிவி ) இந்த தொலைகாட்சி களில் ஒரு விளம் பரம் வந்துவிட்டால் அதுதான் தமிழர்களுக்கு பொன்னான நாள் தமிழன் திரைப்படங்களையும் இந்த முட்டாள் பெட்டி களையும் விட்டொழித்து என்று அறிவைத் தேட புறப்படுவானோ? குறிப்பிட்ட உணவின் தன்மை என்ன எந்த அளவிற்கு அது உடலை பாதிக்கிறது எந்த கேட்டை உண்டக்குகியது என்ற அடிப்படை அறிவைக்கூட பெறாதவன் ஆசிரியராகவும் ஆட்சியாளராகவும் இருந்து தொலைக்கிறான் . கேடு நிகழ்வதே இங்குதான் . முறையான உணவுகளைத் தேடுவோம் .முறையனவர்களை ? தேர்வு ? செய்வோம்??????
புட்டியில் அடைக்கப் பட்ட பளபளப்பான பன்னாட்டு நிறுவங்களின் தயாரிப்புகளான கோக் , பெப்சி போன்றவை மனிதன் இதயத்தையும் சிறுநீரகத்தையும் செய்யும் கேடுகள் எண்ணிலடங்கா இவற்றை விட்டொழிப்போம் நோய் நீங்கி வாழ்வோம் . சித்த மருத்துவத்தையும் காப்போமே ?
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
உண்மைதான்.. இளநீருக்கு பேரம் பேசி வாங்கும் நாம், கோக் பெப்ஸிக்கு பேரம் பேசுவதில்லையே... நல்ல அற்புதமான பதிவு
பதிலளிநீக்கு