டிசம்பர் 16, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் 6



    உறவுகளே  வணக்கம் .

    குறிப்பாக  உண்மையில்  எனது குமுகம்  மிகவும்  சிறப்பான  ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது  எண்ணமாக  இருக்கிறது  மற்ற  வலைப்பூக்களைப் போல அல்லாமல்  மீண்டும் மீண்டும்  நாம்  கேள்வி கேளுங்கள்  கேள்வி கேட்கும் பக்குவத்தை  வரவழைத்துக் கொள்ளுங்கள்  என பதிவு செய்கிறோம் . ஒருமாணவன்  என வைத்துக் கொள்ளுவோம் .அவனுக்கு  நாளும்  உணவு கொடுங்கள்  நான் பணம் கொடுத்துவிடுகிறோம்  என சொல்லி குறிப்பிட்ட பணம் கொடுத்து இட்டு சென்றபிறகு  அந்த மாணவனின்  உணவு  தேவை பற்றி  தெரியாத நிலையில் முதலில் நான்கு  இட்டலி  கொடுத்தல் அதில் மூன்றை எடுத்துக் கொண்டு  மீதம் ஒன்றை வைத்து விட்டால்  உணவு கொடுப்பவர் என்ன செய்வர்  மூன்று இட்டலிகள் போதும் என நினைத்து  அவருக்கு  மேலும் உணவு வழங்குவது பற்றி  சிந்திக்க மாட்டார்கள் . அனால்  நான்கையும்   தின்றுவிட்டால்  மேலும் உணவு கொடுக்க தீவிரமாக சிந்திப்பார்கள் . அதுபோல தான்   உண்மையில் என சமூகத்திக்கு   எதாவது செய்ய வேண்டும் என வாழ்கை பற்றியும் உண்மையான மற்றம் வேண்டும் என   சிந்திக்கிறோம்  கேள்வி கேளுங்கள்  என கோருகிறோம்  எங்கிருந்தும் பதில் இல்லை என்பதால்  நமது பதிவில்  ஏனோதானோ  என  முறையான குறிப்புகளை  எடுத்துக்  கொள்ளாமலே பதிவு செய்கிறோம்   சரி  கொஞ்சம்  கேள்வி கேட்க பழகுங்களேன்  காசு எல்லாம் ஒன்றுமில்லை . சரியா  இனி.....

        இந்த பதிவில் திருமூலர்  குழந்தைப்பேறு பாற்றி என்ன பதிவு  செய்கிறார் என பார்ப்போம்....
பாய்கின்ற  வாயு  குறுக்கில்  குறளனனாம்
பாய்கின்ற  வாயு வலையின்  முடமாகும்
பாய்கின்ற  வாயு நடுப்படில்  கூனாகும்
பாய்கின்ற  வாயு மாதாவுக்கு இலை  பார்க்கிலே.

   ஆண்  பெண் இருவரும்  கூடும் போதுமூச்சுக் காற்று  அளவிற்கு குறைந்தால்  பிறக்கும் குழந்தை குறுகிய  வடிவமாக இருக்கும். அதேபோல மூச்சுக் காற்றானது  இளைத்தவன் மூச்சுக்  காற்றுபோல வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். அதேபோல மூச்சானது மேற்க்கூரியதைபோல இல்லாமல் நடுவு நிலையாக இறந்தால் பிறக்கும் குழந்தை கூனுள்ளதாக இருக்கும் . இது ஆணுக்கே  அன்றி பெண்ணிற்கு அல்ல   என்கிறார்.

இன்னொரு இடத்தில் ...

மாதா  வுதரம் மலமிகில் மந்தனாம்
மாதா  வுதரம் சலமிகுள் ஊமையாம்
மாதா  வுதரத்தில்  இரண்டொக்கில்  கண்ணில்லை
மாதா  வுதரத்தில்  வந்த குழவிக்கே .

  தாயும் தந்தையும் கூடும் பொது தாயாரின் வயிற்றில் மலம் மிகில்  துப்புரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால் பிறக்கும் குழந்தை  மந்தமாக பிறக்கும்  இதே போல சலமான சிறுநீர் துப்பரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும்  இரண்டு  வகையான கழிவுகளும்  சம அளவில்   இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாக்  இருக்கும் இது தாயின்  வயிற்றில்  தோன்றும் செய்கைக்கே என அறிக.......

ஆண்  பெண்  அலி இரட்டைப் பேறு

குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது  ஆகில்
குழவியும் இரண்டாம்  அபான னெதுகில்
குழவியும் அலியாம்  கொண்ட காலோக்கில் .

 கணவன்  மனைவி இருவரும்  கூடுங்காலத்தில் வலது மூக்கின் வழியாக  உயிர்ப்பு  வந்து கொண்டு இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் .இதேபோல உயிர்ப்பு இடது புறமாக இருந்தால்  பெண் குழந்தையாக இருக்கும் .இவ்வுயிர் பிற்கு அபானன் எதிர்ப்பட்டு வந்தால் குழந்தைகள் ... அதாவது இரட்டைக்  குழந்தைகளாய்  இருக்கும் . இரு  மூக்கின் வழியாக இருந்தால்  குழந்தை அலியாக  இருக்கும் என்கிறார் .

அப்படியானால்  நன்றாக அறிவாளியாக அழகாக ... குழந்தை  பிறக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என  கேட்க தெண்ற  வேண்டும்   தொன்று கிறதா   சரி நானே சொல்கிறேன் ....

கொண்ட  நால்வாயு இருவர்க்கும் ஒண்டிடில்
கொண்ட குழவியும்  கோமள  மாய்விடும் .
கொண்ட இவ்வாயு குறிப்பறிந்து இவ்வகை
கொண்டதும்  இல்லை கோலம்  உன்னதே .

 மருவிப் புணரும் காதலர்  இருவருக்கும் வருகின்ற உயிர்ப்பு ஒரே அளவகியதாய் இருக்க வேண்டும்  அங்கனம்   ஒரே  அளவு  கொண்டதாக இருந்தால்  பிறக்கும் குழந்தை  அழகும்  சிறப்புமாக பிறக்கும் என்கிறார்  .அவ்வாறு  இல்லாமல்  மூச்சுக்  குழன்று போனால்  பெண்ணின் வயிற்றில்  கரு  தங்கது  என கூறுகிறார். .

சரி மேலும் விவரம் அடுத்த பதிவில்  சிந்திப்போம் .....

சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .


More than a Blog Aggregator

1 கருத்து:

  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...