டிசம்பர் 10, 2012

திருமணத்திற்கு ஆயத்தமாவோம் 5



    இந்த பதிவில் சில புள்ளிவிவரங்கள்  கொடுக்கிறேன்  என சொல்லிருந்தேன் . பார்க்காலாம் . இன்றைய தமிழ்  சமூக  வாழ்வியல் முறை  மிகவும்  மாறித்தான்  போய்  இருக்கிறது . எதிர்கால  நோயில்லாத  வாழ்க்கை பற்றி  சிந்திப்பதாக  தெரியவில்லை  முறையில்லாத உணவுமுறை  முறையில்லாத  வாழ்க்கைமுறை  ஆகியவற்றால்  மனித இனம்  நோயாளி ஆகிக் கொண்டு இருக்கிறது   என  எழுதினால்  எப்போதும்  நீங்கள்  எதிர்மறை  சிந்தனையுடன்  எழுது கிறீர்கள்  எனவே சலிப்படைய  வைக்கிறது  என்று  கூறுகிறார்கள்  உண்மைதான்  உண்மையை  சொன்னால் சலிப்படையவே   செய்யும் .

      இன்றைய  முறைதவறிய  வாழ்க்கைமுறை  இயற்கையில் இருந்து  முரண்பட்டு நிற்கிறது . வாரட்டுத்தனமான  வாழ்க்கைகளுக்கு  ஆசைப்பட்டு  இயற்கையை  வேருப்பதனால்  உண்டானது . செயற்கை வண்ணம் பூசப்பட்ட ... இயற்கையில் இருந்து  தவறிப்போய்   வெகுதொலைவுக்கு  வந்துவிட்டோம்  ஆகையால் தான்  மீண்டும்  நாம் இயற்கையில் இருந்து தொடங்க  வேண்டும் என்கிறோம்  இரசாயன கலப்பில்லாத  ஒரு இனிய  உலகை படைக்க  வேண்டும்  இப்போது பாருங்கள்  படித்தவர்கள்  பதவியில்  உள்ளவர்கள்  பணக்காரர்கள் இப்படி எல்லோருமே  உடலைப் பற்றியோ  முறைதவறிய  உணவு முறைபற்றியோ  கொஞ்சமும்  சிந்திப்பதில்லை  அதற்குதான்  நாம் அப்படி  எழுதுகிறோம்  கொஞ்சமாகிலும்  மாற்றம் . உண்டகட்டுமே என்றுதான் .

      திருமணம்  ஒரு புனிதமான  வாழ்க்கைப் பயணம் இதில் பயணப் படும் இரு உள்ளங்கள்  வாழக்கை என்ற கப்பலை எப்படி பயன்படுத்துவது  என்பது  தெரிந்து கொள்ளாமலே பயணிக்கத்  தொடங்கி  பயணத்திலேயே  பிரிந்து போகின்றனர் . காரணம்  வாழ்க்கை குறித்தான  முறையில்லாத  புரிதல் .முதலில்  எங்கு  எப்படி பயணம் செய்யப் போகிறோம்  எந்த  வாகனத்தைப் பயன்படுத்தப் போகிறோம்  என்பது பற்றியான  ஒரு திட்டமிடலை  வகுத்துக் கொள்ள வேண்டும் . இது  உறுதியான  இல்லறத்திற்கு  ஒரு தொடக்கமாக இருக்கும்  முறையான திட்டமிட்ட  தொடக்கம்  பாதி  வெற்றி என்பார்கள்  முறையான திருமணமோ  காதல் திருமணமோ  எதிர்கால வாழ்க்கை குறித்து  நிறைய பேசுங்கள்  என்கிறோம் .பேசி பின்னர்  இலவாழ்விற்கான  தாம்பத்திய  உறவுகள் குறித்தான  திட்டமிடலை  முறையாக  செய்க . எப்போது குழந்தைபேறு  எங்கு  என முழுமையாக எல்லாவற்றையும்  திட்டமிடுங்கள் .பின்னர்  இல்வாழ்க்கையை தொடங்குங்கள் .

       பாலுறவு  குறித்து  முறையாக  தெரிந்து  கொள்வது மிகவும் சிறந்தததே  காரணம்  இதில்தான் பலர் தவறி விடுகிறார்கள்  வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள் . குடும்பமும் சிதைகிறது. இல்லறமேர்க்கு புதியதில்  இல்லற இன்பம்  குறித்து தவறான புரிதலால்  சிக்கல் தோன்றுவதால் இங்கு  சரியான  புரிதல்  பெற  ஆற்றுப் படுத்துனரை  கலந்து  ஆலோசிப்பது  மிகவும் சிறப்பானதாக இருக்கும் முதலில் உணர்வு  அடிப்படையில்  கணவன் மனைவியாக  வாழத் தொடங்க வேண்டும்  பாலுறவில்  முதலில் முன் விளையாட்டுகள்  சிறப்பான இடத்தை  வகிக்கிறது  பழங்காலங்களில்  திருமண  விழா  நீண்ட  நாட்களை  கொண்டதாக  இருக்கும்  இரண்டு  வீடுகளுக்கு இடையேயான பாண்பாட்டு ரீதியான  வாழ்க்கை முறை உணவு முறை  நடத்தை முறை  இப்படி  மாற்றி மாற்றி  இரு வீடுகளுக்கும்  புது மண  தம்பதிகள் சென்று  தெரிந்து கொள்வதனால்  இரண்டு வீட்டு  பழக்க நடைமுறைகளையும் அறிந்து கொண்டனர்   அந்த   காலத்தில்  மணமுறிவுகள்  தோற்றம் கொள்ளவில்லை . இன்று அப்படி இல்லை  எனவேதான் பல சிக்கல்  இதை முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் எனபதற் காகத்தான்  பதிவு செய்கிறோம் .

        குழந்தைபேறு வேண்டிய  நாள்களில் எப்படி இருக்க வேண்டும்  என்பதை  திருமந்திரம்  பதிவு செய்வதை பார்ப்போம் .
பய்ந்தது    முன்னைந்தொடிற் பார் ஆயுளு  நூறாம்
பாய்ந்தது  பின்னைந்தோடிற்  பார் வயது ஐம்பதாம்
பாய்ந்திடும்  வாயு பகுத்தறிந்து  இவ் வகை
பாய்ந்திடும்  யோகிக்கு பாய்ச்சலு  மாமே .

      அதாவது கணவனும் நமைவியும் தம்பதிய  உறவு கொள்ளும் பொது அன்றைய  மூச்சுக் காற்று  ஐம்பூதங்களிலும்  பாய்ந்து ஓடினால்  பிறக்கு குழந்தை  அகவை நூறு . அதனால் தான் குழந்திப் பெறுக் காண  திட்டமிடலில்  உள்ளம்  மிகவும் சலனம் அடையாமலும்  மிகையான பாலுறவு   வேட்கையினால்  இருக்கையில்  அது பிறக்கும் குழந்தையின்  ஆயுளையும்  அவனின்  எதிர்காலத்தையும்  அது பதிப்பு அடைய செய்கிறது . இந்த சூழலில் உள்ளமும் உடலும் பதட்டம்   அடையாமலும்  பொறுமையாகவும்  திட்டமிட வேண்டும் என்கிறது மருத்துவக்குறிப்புகள் .
 

     
More than a Blog Aggregator

1 கருத்து:

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...