பாலுறவு உயிரிகளின் மூகாமையான தேவை என்பதை நாமறிவோம் இது மிகவும் இளமையிலேயே குன்றிப் போவதாக இன்றைய புள்ளிவிவரங்களும் நம்மருத்துவ நடுவத்திற்கு வருகிறவர்களும் கூறுகிறார்கள் . இது உண்மையா? ஏன் இங்கனம் நிகழுகிறது ? இதை தடுக்க முடியுமா? தவிர்க்க இயலுமா?
அன்பு உறவுகளே . வணக்கம் இப்படியான வினாக்கள் கேட்ட படி இருக்கின்றனர் . காரணங்களை அலசுவோம் நீங்களும் உடன் இருப்பது தேவையல்லவா ? இன்றைய விரைந்தோடும் நிகழ்வில் பல்வேறு நோய்கள் பெருகி மனிதத்தை நோயாளியாக்குகிறது முறையில்லாத உணவு முறையில்லாத வாழ்க்கைப் போராட்டங்கள் .வாழ்வியல் முறைகள் . நோய்தரும் இரசாயனங்கள் உலக இன்பங்களை எல்லாவற்றையும் உடனே நுகர்ந்து விடவேண்டும் என்ற வேட்கை ஏக்கம் , அளவு கடந்த சினம் ,அளவு வெறுப்பு போன்ற காரணகளினால் இன்றைய பாலுறவு குன்றிப் போக வாய்ப்பு இருக்கிறது .
மனிதன் என்றாலே உடனே சிலர் குடி , புகைத்தல் , முறையில்லாத உணவுப் பழக்கம் என எந்த திட்டமிடலும் இன்றி உடலைக் கெடுத்துக் கொள்ளுகிறனர் .பாலுறவு வேட்கை கொண்டு ஊக்கி மருந்துகளை (ஆங்கிலமுறை ) மிகையாக எடுத்துக் கொண்டு பின்னர் பாலுறவு எண்ணமே இல்லை . பாலுறவு கொள்ள இயலுவதில்லை என கூறுகிறனர் . இங்கு ஒருவினா எழலாம் சித்த மருத்துவத்தில் ஊக்கி மருந்துகள் வழங்கப் படுவதில்லையா? என கேக்கலாம் ஆனால் இதை வாசிக்கும்எவரும் கேட்பதில்லை அது வேறு செய்தி இப்படி கருணாநிதி மாதிரி நாமே கேட்டுக் கொண்டு நாமே பதில் சொல்லுவோம் .
சித்த மருத்துவத்தில் வழங்கப் படும் ஊக்கி மருந்துகள் பாலுணர்வை / விந்தணுக்களை மிகையாக உண்டாக்கும் படியான மருந்துகள் .இயல்பான உடலுக்கு ஊட்டத்தையும் சக்தியையும் தரவல்லன . ஆங்கில ஊக்கி மருந்துகள் அப்படியல்லவே? உடலுக்கு கேட்டையல்லவா உண்டாக்கும்? கடவுள் பற்றாளர்கள் பாலுறவை சிற்றின்பம் என்பார்கள் . பாலுறவு குறுகிய நேரத்தில் முடிவதுதான் அதன் சிறப்பு நேரம் மிகுகிறது எனின் உடலுக்கு கேட்டை உண்டாக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை இன்றைய உலக வெப்பமயம் உடலையும் உள்ளத்தையும் பலவேறு நிலைகளில் கேடடைய செய்கிறது இந்த நிலையில் பாலுறவினை அதன் நேரத்தை கூட்டி அதனால் உண்டாகும் உடல் சூட்டினை தனித்துக் கொள்ள எந்த வழிவகையும் செய்து கொள்வதில்லை .
மனித உடல் விந்துவை உற்பத்தி செய்யும் இயந்திரம் அல்லவே .இதில் உடலுக்கு ஊட்டம் அளிக்கும் உணவை எடுக்காமல் உடலுக்கு கேட்டை உண்டாக்கும் உணவுகளை எடுக்கும் போது சில உணவுகள் சில நோய்கள் பாலுறவை குறைக்க செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக சக்கரை நோய் பாலுறவை நீக்க செய்யும் . இந்த குறைகளை நீக்கிக் கொண்டு மனிதன் நோயை விட்டுவித்துக் கொள்ளலாம் .
இன்றைய சூழ்நிலையில் தொண்ணூறு அகவையில் பாலுறவை வைத்துக் கொண்டு மகப்போற்றை உண்டாக்கும் சக்தி படைத்தவராகவும் ஒருவர் இருக்கிறார் .முப்பது அகவையில் சர்க்கரை / இரத்த அழுத்தம் / சிறுநீரக கோளாறுகள் என பல்வேறு நோய்களை வரவழைத்துக் கொள்ளுகின்றனர் . இந்த நிலையில் பாலுறவு குன்றத்தானே செய்யும்.
முறையான உணவுப் பழக்கம் வாரம் இருநாள் எண்ணெய்க் குளியல் முறையான உடற் பயிற்சி போன்றவற்றை செய்தால் தொண்ணூறு அகவையிலும் பாலுறவில் வெற்றி பெறலாம் என்பதே நமது நம்பிக்கையான வார்த்தை.
சித்தமருத்துவங் காப்போம் நோய்வேல்வோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...