ஜூன் 13, 2011

சமைக்காத இயற்க்கை உணவுகள் வந்த நோய் விலக நோய் வராதிருக்க(Organic Food)இன்று இயற்க்கை சார்ந்த சித்தமருத்துவம் / இயற்க்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் பொறியாக (இயந்திரமாக ) கடைபிடிக்க படுகிறதே யன்றி அதன் உண்மை தன்மையுடன் கடைபிடிக்க படுவதில்லை என கானலாகிறது .
நட்சத்திர உணவு விடுதிகளில் (star hotels ) கொடுக்கப்படும் இவ்வகை இயற்க்கை காய்கறிகள் பொழுது போக்கிற்காகவோ அல்லது அறியாமையின் பொருட்டோ இயந்திரத்தனமாக கடைபிடிக்கபடுவதை காணமுடிகிறது.

இயற்கையும் செயற்கையும்

இயற்கை உணவுகள் உண்ணும்போது காய்கள், மூலிகைகள்,பழங்கள், இவைகள் எல்லாமே சமைக்கப்பட்ட உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது.
இவைகள் எடுக்கும்போது நன்கு தூய்மையாக கழுவப்பட்டு மேல்தோல் செதுக்குவது எனின் செதுக்கி உடனே உண்ணப்படவேண்டும். நீண்டநேரம் இருப்பின் அவற்றில் உள்ள தாதுப்பொருட்கள் எல்லாம் வீணாகிவிடும் .
அதேபோல பாலுண்ணும் போதும் அதனுடன் வேறு எந்த சமைக்கப்பட்ட உணவுகளையோ அல்லது பழங்களையோ கண்டிப்பாக எடுக்கலாது .இயற்க்கை உணவுகளுடன் எப்போதும் உப்பு சேர்ப்பதோ அல்லது இயற்க்கை உணவுடன் தண்ணீர் அருந்துவதோ கண்டிப்பாக கூடாது .அவைகள் பிவிளைவை உண்டாக்கும் .
அதேபோல காய்களை பல காய்களுடன் கலந்து கூட்டாக எடுக்கலாம் ஆனால் பழங்களையும் கீரைகளையும் எப்போது தனித்தனியே தான் எடுக்கவேண்டும் .

இயற்க்கை உணவுகள்

இன்று மனிதனுக்கு தேவையான சத்துகளாக புரதம் (protin ) தரசம் (carbohydrates ) கொழுப்பு (fat )
மற்றும் தாதுப்பொருட்கள் (minerals ) தேவை என்கிறது இன்றய அறிவியல் ஆனால் தமிழர்களின் உணவு இந்த அறிவியலின் அடிப்படையிலேயே கடைபிடிக்க பட்டு வருகிறது இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடைபிடிக்க பட்டுவருவதாகும்தரமான தவச (தாணிய ) உணவுகளில் கிழங்குகளில் இருந்தும் தரச (carbohydrates )களும் , கொட்டைகள், வேர்கடலை, எள், தேங்காய் , சில பருப்புகள் ஆகியவற்றில் இருந்து கொழுப்பு (fat )ம் ,
தரமான கொட்டைகள் பாசிபருப்பு , மொச்சை , காராமணி , சோயா மொச்சை போன்றவறில் இருந்து புரதமும் (protin )ம் கிடைகிறது . அதேபோல தூய்மை செய்த காய்களில் எண்ணற்ற தாதுப்(minerals ) பொருட்கள் காணக்கிடைக்கிறது . இவைகளை முறையாக உண்டுவர சமைக்காமலே மனிதன் நலமோடு வாழ முடியும்.

இயற்க்கைபால்

இப்போது மனிதன் விலங்குகளில் இருந்து மாமிசத்தை மட்டுமின்றி அவற்றை கொல்லாமலே அவற்றை சக்கையாக பிழிந்து அதன் அரத்தத்தை குடிக்க தொடங்கிவிட்டன என்ன புரிய வில்லையா விலங்கு களின் பாலை தான் சொல்கிறேன் . இந்த விலங்கு களின் பாலும் இன்று மனிதனுக்கு நோயாக பரிணாமம் அடைந்து வருகிறது பின்னர் தானிய ஒரு இடுகையில் இதை பார்போம்
விலங்கு களின் பாலைவிட பன்மடங்கு சத்து நிறைந்தது மான இயற்க்கைப்பால் நமக்கு கிடைத்த ஒரு கொடையாகும். விலங்கு களின் பால் நோய் மட்டுமின்றி உப்பு காரம் போட்ட எந்த உணவுகளுடன் பாலை அருந்த கூடாது என்பது நமக்கு தெரிந்ததே . ஆனால் இந்த இயற்கைப்பால் அப்படி எல்லாம் இல்லை முறைப்படி செய்யப்பட்ட பாலை எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம் குறைந்த அளவே எடுத்த பதிலும் இதன் பலன் அளப்பரியது .

இயற்கை பால் செய்முறை


வேர்கடலை பால் என எடுத்து கொள்வோம் . தரமான வேர்கடலை எடுத்து கொண்டு அவற்றில் தூசு சொத்தை இல்லாமல் எடுத்து கொண்டு அதை தூய்மை நிறைந்த மணல் பரப்பிய தட்டில் பரப்பி நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வார நாற்பத்தெட்டு மணி நேரத்தில் முளைக்க தொடங்கும் இந்த வேளையில் அந்த வேர்கடலையை தூய்மையாக கழுவி பின்னர் உலக்கையில் இடித்தோ அல்லது அம்மா புரட்சி தலைவி கொடுக்கும் (வெளிநாடுகளில் வாழ்பவர்கள்?சொம்மா நகை சுவைக்காக )மிக்சியில் அடித்தோ அதிலிருந்து வரும் சாற்றை பிழிந்து விலங்கு களின் பாலைபோலவே பாலாகவும் மற்றபடி தயிர் ,மோர் ,வெண்ணை , நெய் என எல்லாவகையிலும் பயன் படுத்தலாம்.

இயற்கை உணவுகள் மட்டுமே எடுத்து வாழ முடிமா ?

இன்றைய நிலையிலும் இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்து மனிதன் வாழ முடியும் இயற்கை உணவுகளில் மனிதனுக்கு தேவையான எல்லா சத்துகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளது என்னவெனில் எளிதில் செறித்து விடும் உடல் உழைப்பில் ஈடுபடுகிறவர்கள் கொஞ்சம் அவல் சேர்த்து அவல் தேங்காய் துருவல் அவல் இயற்கைபால் , அவல் வாழைபழம் , அவல் காய்கள் , என சுவைக்கு ஏற்றபடி எடுத்து அடுப்பில்லாமலே முறையாக உணவு எடுத்து மனிதன் நீண்ட நாள் வாழ முடியும் .
இயற்கை உணவுகளாக இயற்கைப்பால் , காய்கள் , பழங்கள் , கீரைகள் , மூலிகைகள் , தேன் தானியங்கள், கொட்டைகள் , தேங்காய் ,எள், என எல்லாவற்றையும் முறையாக உணவாக எடுக்கலாம் இயற்கையாக எடுக்க முடியாத உணவுகளை ஆவியூட்டி மிளகு சேர்த்து உண்ணலாம் .

குறிப்பு : நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை உணவுகளை உண்டுவிட்டுத்தான் மற்றவர்களுக்கு போதிக்கிறோம் .

பழமையான சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

12 கருத்துகள்:

 1. தமிழர்களின் உணவுமுறைகளை வரலாற்றில் பதித்து கொண்டு வரும் உங்களுக்கு முதலில் நன்றி ..
  எத்தனையோ உணவு முறைகளை நாம் மறுத்து வருகிறோம் ... மறந்தும் வருகிறோம் ...
  நொடியில் தயாராகும் உணவுகளை விரும்பி சாப்பிட்டு விரைவில் நிறைய பிரச்சினைகளை சம்பாதித்து கொள்கிறோம்..
  இந்த பதிவில் நான் சில விடயங்களை அறிந்து கொண்டேன் ...
  தொடரட்டும் தங்களின் மேம்பட்ட பணி... வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 3. மிக பயனுள்ளத்தகவல்.... மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ம்...நானும் கூடியளவு சைவ உணவுகளையே உட்கொள்கிறேன்.சிலநேரங்களில் கடலுணவும் !

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள நல்ல பதிவு
  எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணமும்
  விளக்கி இருக்கிறீர்கள் நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் கருத்துகளிர்க்கும்நன்றி பாராட்டுகள் எம்மை வலைசரத்தில் அறிமுகப்படுத்திய இராஜேசுவரி அவர்களுக்கும் பணிவான நன்றிகள் பாராட்டுகள் .

  பதிலளிநீக்கு
 8. அம்மா புரட்சி தலைவி கொடுக்கும் (வெளிநாடுகளில் வாழ்பவர்கள்?சொம்மா நகை சுவைக்காக )பாத்துங்க நிலா மோசடி வழக்கு பாய்ஞ்சிட போகுது

  பதிலளிநீக்கு
 9. அம்மா புரட்சி தலைவி கொடுக்கும் (வெளிநாடுகளில் வாழ்பவர்கள்?சொம்மா நகை சுவைக்காக )பாத்துங்க நிலா மோசடி வழக்கு பாய்ஞ்சிட போகுது

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...