ஜூன் 20, 2011

கால்கை( காக்கா )(Epilepsy) வலிப்பு தீர்வுகள் காரணங்கள் .....


கால்கை வலிப்பு நோய் பற்றிஎழுதுங்கள் என ஒரு வலைபதிவர் கேட்டு இருந்தார் இன்றைய நிலையில் இந்த காக்க வலிப்பிற்கு பாதிக்கப் படுகின்றவர்கள் மிகையாகி வருகின்றனர். பழைய காலங்களிலும் இந்நோய் இருந்ததனால் இந்த நோய்க்கு முறையான மருத்துவம் கண்டு இருக்கிறார்கள் சித்தர்கள் . இந்நோய் பற்றிய குறிப்புகள் சித்த மருத்துவத்தில் காணக்கிடக்கிறது . இந்நோய் அடிப்படையில் மூளை சார்ந்ததே . .

நோயின் தன்மை

இந்நோய் அறிவு குன்றி தன்னிலை மறந்து தன்னை முற்றிலும் மறந்த மயக்க நிலையில் கையும் காலும் வலித்தது இழுத்தல், வாய் கோணுதல், வாயில் நுரை தள்ளுதல் , கண்பார்வை குன்றுதால் ,, ஒருபக்கமாக இழுத்தல், என பல அறிகுறிகளை காட்டும். இந்த நோய் கண்டவர்கள் இந்த பாதிப்புகள் வரும் முன் சில அறிகுறிகளை காட்டுகிறது என்று கூறுகின்றனர் .
இந்த நோய் இருபத்தொரு வகையாக அழைக்கபடுகிறது இந்த இருபத்தொருவகை வலிப்பு நோய்களுக்கும் தனியான முறையான மருந்து களை சித்த மருத்துவம் கூறுகிறது .

நாடி நடை

சிறுவிர லிரண்டு பக்கம்
நாடிதான் சிதறி யோடில்
மருவிய காலுங் கையுங்
வலித்துடன் மிகவே நோகும் .

என தெளிவாக இந்நோயை பகுக்கிறது சித்த மருத்துவம் .சித்தமருத்துவம் என்பது அறிவியலை உள்ளடக்கியது என்பது நாம் அறிந்தது .

பொதுவாக வலிப்பு நோய் கண்டவருக்கு அந்நேரத்தில் சாவிக் கொத்தையோ அல்லது இரும்பு களையோ ஏதாவது ஒன்றை கொடுப்பார்கள் . இதில் அறிவியல் இருப்பதாக தெரியவில்லை.அந்த நேரத்தில் அவரை தனிமைபடுத்தி ஆடைகளை தளர்த்தி நாக்கை பல் இடுக்கு களில் மாட்டிகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு கட்டைகலையோ வேறு ஏதாவது பொருளையோ கொடுத்து நாக்கை கடிக்காமல் செய்ய வேண்டும். அதே சமயம் சுவாசத்தை சீராக்க வேண்டும் . அந்த நேரத்தில் அவருக்கு தூய உயிர்வளி (ஆக்சிஜன் )தேவை எனவே கூடி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு வெளிச்சத்தை தந்து சங்கடப்படுத்தாமல் அவரை தனிமைபடுத்தவேடும்.

நோய் கராணங்கள்

வலிப்பு நோயை பொறுத்தவரை பல காரணங்கள் கூறப்பட்டாலும் சித்தமருத்துவம் தெளிவான கருத்தாக்கங்களை கொண்டு இருக்கிறது.
சிலர் பரம்பரை யாக வரும் என்கிறார்கள் சில குடும்பங்களில் இது உண்மையாகிறது . நம்மை பொறுத்தவரை இந்நோயில் மூளைக்கு செல்லும் அறத்த நாளம் தடைபடுவது ஒரு காரணமா கொள்ள வழி இருக்கிறது. குழந்தைகளில் பலர் நோய் எதிர்ப்பின்மையால் அடிகடி தடுமன் (சளி )தொந்தரவு உண்டாகிறபோது மூளைக்கு செல்லும் நரம்புகள் பலமிழந்து போவதால் மூளைக்கு உயிர்வளி (ஆக்சிஜன் )மாற்றும் தேவையான சத்துகள் செல்லாமல் போகவே இந்நோய் தோன்றுவதாக படுகிறது . காரணம் இந்நோக்கு நாம் பலருக்கு மூளையை பலபடுத்தபடும் மூலிகை மருந்துகளையும் வலிப்பிற்கான மருந்துகளையும் அளிக்கும் போது நோயில் நல்லபலனை எதிர்பார்க்க முடிகிறது.

தீர்வுகள்

முறையான சித்தமருத்துவரின் கீழ் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும். இந்நோய்கும் மூளைக்கும் நொறுங்கிய தொடர்பு இருப்பதால் மூளையை பலப்படுத்தப்படும் மருந்துகள் தேவைப்படலாம். நெய் ,தேன். வல்லாரை , பிரம்மி போன்ற மருந்துபொருட்கள் நல்ல பலனை தரும். தரமான தாவர புரதம் கொழுப்பு சேர்ந்த உணவுகள் தேவைபடல்லாம். பழங்காலங்களில் மணமான பெண்ணிற்கு ஐந்தரை பெட்டி வழங்குவார்கள் இந்த ஐந்தர பெட்டிகளில் உள்ள மருந்துகள் குழந்தை பிறந்தத்தில் இருந்தே வழங்குவார்கள் . அதில் ஒன்றுதான் வசம்பு இந்த வசம்பை பிள்ளை வளர்த்தி என்றே வழங்குவார்கள்
இம்மருந்தை முறைப்படி குழந்தைகளுக்கு வழங்குவது தமிழர்களின் மறிவு மரபில் தோன்றியதாகும். மேல்பூச்சகவும் உள்ளுக்கும் கொடுப்பார்கள் இந்த மருந்து மூளைவளர்ச்சியை துரிதப்படுத்தகூடியதாகும் . இப்படியாக சித்தமருத்துவத்தை முறைப்படி குழந்தையிலிருந்தே கொடுத்துவர வலிப்பு நோயும் மற்றும் பிற நோய்களும் வர வாய்ப்பே இல்லைநோய்கண்டவர்கள் மூளை வளர்ச்சிக்கான மேற்கண்ட வல்லாரை, பிரம்மி , தேன், நெய் போன்றவற்றை எடுத்தும் முறையான மருத்துவரை நாட நல்ல பலன் கிடைக்கும் முறையான நமது சித்த மருத்துவத்தை பயன் படுத்தி நோய் வென்று நீடு வாழ்வோம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.More than a Blog Aggregator

12 கருத்துகள்:

 1. வலிப்பு நோய் குறித்து விளக்கமான
  தெளிவான அனைவரும்
  தெரிந்திருக்க வேண்டிய
  தகவல்கள் அடங்கிய நல்ல பதிவு
  தங்கள் பதிவை தொடர்வது
  அனைவருக்குமே பயனுள்ளது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. டாக்டர் அய்யா வாழ்க.. பயன் உள்ள கருத்துக்கள் தான்

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு பிரயோசனமான பதிவு தயா.தேவையானவர்களிடம் உங்கள் பதிவுகள் போய்ச்சேரவேண்டும் !

  பதிலளிநீக்கு
 4. நன்றி சார்! நான் உங்களிடம் வலிப்பு நோய் பற்றி கேட்டு இருந்தேன் தெளிவாக தெரிவித்ததற்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 5. நல்ல பயனுள்ள தகவல் நாட்டுமருந்து கடையில் என்னென்ன மருந்துகள் இதற்காக வாங்கி சாப்பிட வேண்டும்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பயனுள்ள தகவல் நாட்டுமருந்து கடையில் என்னென்ன மருந்துகள் இதற்காக வாங்கி சாப்பிட வேண்டும்

  பதிலளிநீக்கு
 7. நல்ல பயனுள்ள தகவல் நாட்டுமருந்து கடையில் என்னென்ன மருந்துகள் இதற்காக வாங்கி சாப்பிட வேண்டும்

  பதிலளிநீக்கு
 8. சார் எனக்கு வயது இருபது. எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கையில் வலிப்பு நோயால் தாக்கப்பட்டேன்! அன்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியா மருத்துவம் பார்த்து பயனில்லாமல் இருக்கிறது! தயவு செய்து இதுக்கு ஒரு தீர்வு கூறுங்கள்?

  பதிலளிநீக்கு
 9. சார் எனக்கு வயது இருபது. எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கையில் வலிப்பு நோயால் தாக்கப்பட்டேன்! அன்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியா மருத்துவம் பார்த்து பயனில்லாமல் இருக்கிறது! தயவு செய்து இதுக்கு ஒரு தீர்வு கூறுங்கள்?

  பதிலளிநீக்கு
 10. *நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து*


  ☕ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே விருபக்சாபுரம் என்ற ஒரு குக்கிராமத்தில் உள்ள சித்தவைத்திய சாலை. இங்கு நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கப்படுகிறது .


  ♿நடக்க முடியாதவர்கள் காரிலேயே உட்கார்ந்து இருந்தால் போதும் அவரே வந்து மருந்து கொடுக்கிறார். ஓய்வறைகளும் உள்ளது. இலவசமாக.!!


  ☕மருத்துவர் ஒரு சட்டையும், லுங்கியும் கட்டிக்கொண்டு சாதாரணமாக தன் கையாலேயே ஒரு கிளாஸ்ல் மருந்து கொடுக்கிறார்.  ஒரேமருந்து எல்லாருக்கும். எந்த கேள்வியும் இல்லை. மூன்று மணிநேர இடைவெளியில் மூன்று முறை குடிக்கனும். கொஞ்சம் புழுங்கலரிசி சோறு தராங்க. சாப்பிட்டுவிட்டு வரனும். 500ரூபாய் கட்டணம். இங்கே வருபவர்கள் பெரும்பாலும் பெரிய பணக்காரர்களே.
  15நாள் இடைவெளியில் மீண்டும் தரனும்.


  ☕முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது நல்ல முன்னேற்றம். BP அதிகமாகி பக்கவாதத்தில் சுயநினைவின்றி கிடந்த பாட்டியை கொண்டு சென்றோம். இப்போது நல்ல முன்னேற்றம். கைகால்கள் அசைக்கிறார். சாப்பிடுகிறார்.


  ☕மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் சென்றோம்.


  ☕(மொத்தம் மூன்று முறை, அதேபோல ஒரு ட்ரிப்புக்கு மூன்றுமணி நேர இடைவெளியில மூன்று முறை தரவேண்டும் , ஆக மொத்தம் ஒன்பது வேளை) சரியாகிவிடும் நம்பிக்கை இருக்கு. ஆனால் மருத்துவ மனைகளுக்கு போயிருந்தால் எத்தனை லட்சங்கள் ஆகியிருக்குமோ தெரியாது.

  ☕தினமும் குறைந்தது 1000 பேர் வராங்க. மூன்று மாநிலங்களில் இருந்தும் வராங்க. உங்களில் யாருக்காவது பாதிப்பிருந்தால் போய்வாருங்கள். தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கள். நல்லதே நடக்கிறது.

  *முகவரி:*
  C.மோகன்ராவ், S/O.C.ராணோஜிராவ், பெராலிஸிஸ் பக்கவாதம்,
  லக்குவான் வைத்தியம்,
  விருபக்ஷாபுரம், சப்பிடிபல்லி (po)
  பலமனேர் வட்டம், சித்தூர் மாவட்டம்.
  ஆந்திர பிரதேசம் - 517 432
  📞: 08579. 200347

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, வேறு ஏதேனும் போன் நம்பர் உள்ளதா? இந்த எண்ணில் போன் போக வில்லை

   நீக்கு
 11. எனது மகன் பிறந்து மூன்று மாதம் ஆகிறது சளியால் மருத்துவமனையில் சேர்த்தோம்.2 ம் நாள் வலிப்பு வந்து பெரிய மருத்துவமனையில் சேர்த்தோம்.20நாள் வைத்தியம் பார்த்தோம்.எல்லா டெஸ்ட் எடுத்ததில் அவனுக்கு மூளையில் நீர்க்கோர்த்துக்கு ஆபரேஷன் பண்ற அளவுக்கு இல்லை வளர வளர சரயாகிடும்.ஆனால் எப்பனாலும் வர வாய்ப்பிருக்கு சொல்றாங்க மாத இருமுறை செக்கப் வரனும்.மாத்திரை ரெகுலரா சாப்ட சொல்லிருக்காங்க.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு சொல்லுங்க ஐயா.பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...