நவம்பர் 15, 2010

கண்களை பாது காப்போம்


கண்களை பாது காப்போம்

இன்றைய
அவசர உலகத்தில் பொறுமையாக உடலை பாது காக்க வேண்டும் என் எண்ணம் குறைந்து போனது எனலாம் . இப்போது கண்ணுக்கு கண்ணாடி
போட்டுக் கொள்வது பெருமைகுரியதாகும் என எண்ணுகின்றனர் . இது பிழையான ஓன்று . பொதுவாக குறைபாடு நோய் அல்ல நோயை உருவாக்கிக் கொள்ளுகின்றனர் .

கண்குறைபாடு ஏன் ?

கண்களை பொறுத்தவரை இப்போது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து போய்விட்டது எனலாம் . தலையில் எண்ணெய் வைக்காமை ,அதிகாலையில் எழுந்திருக்கமை, முறையில்லாத உணவு பழக்கம் ,எண்ணெய்தேய்த்து குளிக்கமை, இப்படி பல காரணங்களை அடுக்கலாம் . கண்கள் , அதாவது கண் , இதயம் , சிநீரகம் , இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உள்ளதை நாம் அறிவோம் . இந்த அரச உறுப்புகள் அவளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டுப்போனால் அவ்வளவு எளிதில் குணப்படுத்த முடிவதில்லை .


கண்களை பாதுகாத்தல்

௧. கண்களை பாதுகாக்கும் முருங்கை , சிறுகீரை , பொன்னாங்கண்ணி , போன்ற முலிகைகளை முறைப்படி மருந்தாக அல்லாமல் உணவாக உண்ணுதல் .

௨. அதிகாலை துயில் எழுதல் .

௩. கண்களுக்கான பயிற்சிகள் செய்தல் . தண்ணீரில் கண்களை முழுகவைத்து தண்ணீரில் கண்களை நினைத்து கண்களை மேலும் கீழும் அசைத்தல் .

௪. நேராக நின்றுகொண்டு தலையை அசைக்காமல் கண்களை சுற்றுதல் இதையே வலம் இருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் மூன்று சுற்றுகள் சுற்றுதல் .

௫. கேரட் , நெய் அளவுடன் சேர்த்தல்

௬. திரிபலா எண்ணெய் தலைக்கு தேய்த்து தலைக்குளித்தல் .
போன்றவற்றை முறைப்படி செய்யலாம்

கண்கள் கெடுவதர்க்கானகாரணிகள்

அதிகலையேல் நாளும் எழுந்திருக்காமையால் நன்கு ஆதவன் உதித்தபின் நாளும் எழுவதால் ஆதவனின் கதிர்கள் பட்டுப்பட்டு கண்கள் கெடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது . மிகுதியாக காரம் மிகுதியாக புளி சேர்த்தல் (புலி எப்போதும் மனிதர்களுக்கு நன்மையே செய்யும் அது எந்த புலியாக இருந்தாலும் ) அளவிற்கதிகமாக உப்பு சேர்த்தல் மயக்கப் பொருட்கள் (மது , புகை ) கண்களை கெடுக்கும் என்கிறார்கள் . இவற்றை தவிர்க்கலாம் .


கண்படலத்திர்க்கு மருந்து

முன்னாள் அறமன்ற நீதிபதி பலராமையா சித்தமருத்துவம் செய்தவர் அக்காலத்தில் வைத்தியரத்தினம் பட்டம் பெற்றவர் . அவரின் நுலில் இருந்து கண் படலத்திற்கும் (cataract) என்ற கண்மரைத்தல் போன்ற நோய் களுக்கு இம்மருந்தை பயன்படுத்தலாம் .

தூய்மையான தேன் இருநுற்றைமபது மிலி
தூய்மையான நெய் முந் நூறு மிலி
தேனையும் நெய்யையும் ஒரு ஏனத்தில் விட்டு மற்றொரு ஏனத்தில் தண்ணீர் விட்டு அதன்மீது மருந்துகள் உள்ள ஏனத்தை வைத்து நாளும் ஒரு தூய்மையான தென்னை ஈர்க்கில் கலக்கி வரவேண்டும் . தண்ணீர் நாளும் மாற்றவேண்டும் இதை ஆதவன் (சூரியன் ) வெம்மையில் வைக்கவேண்டும் . இப்படிசெய்ய மருந்து ஒருகட்டத்தில் மெழுகு மதிரியகிவிடும் இதை தூய்மையான புட்டியில் அடைத்து நாளும் கண்களில் தீட்டிவர கண்படலம் மாறும் அறுவை செய்ய தேவை இல்லை. பயன்படுத்துவோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவழ்வோம்


அடுத்து : நீரிழிவு நோயா நீக்க முடியுமா ?More than a Blog Aggregator

5 கருத்துகள்:

 1. வணக்கம் சார் நல்ல மருத்துவ ஆலோசனை,

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே பாராட்டுகள் தொடர்ந்து வருகை தாருங்கள்
  போளூர் தயாநிதி

  பதிலளிநீக்கு
 3. நல்ல, பயனுள்ள கருத்துகள்.. நன்றி, நண்பரே. அடிக்கடி இப்படி எழுதவும்..

  பதிலளிநீக்கு
 4. உபயோகமான பதிவு... வாழ்த்துக்கள் நண்பரே!!

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...