செப்டம்பர் 25, 2010

கொசுவிரட்டி ஒரு எச்சரிக்கை

                         இப்போது  எல்லாம்  கொசுவை  விரட்டுவதற்கு  என்றே  பலநிறுவனங்கள்  பலவகையில்   கொசுவர்த்திகளை  உற்பத்தி  செய்கிறது . இவைகள்  உடல்நலனிற்கு  கேடானது  என்பது  பலருக்கு  தெரிவதில்லை  இதனால்  பலநோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது . கொசுவர்த்திகளிலும் , மேட் களிலும் பலவகையில்  விற்ப்பனைக்கு வருகிறது . இவற்றில் எல்லாம் இரசாயனங்கள்  கலக்கப்பட்டே உற்பத்தி  செய்யப்படுகிறது .இந்த  இரசாயனங்களின்  அடர்த்தி  இக்காற்றை  நாம் சுவாசிக்கும்  போது    பலவிதமான  மூச்சு  சம்மந்தமான  நோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது
      
   ந்த  சுழலில்  நாம்  அறையில்  வைக்கப்படும்  கொசுவர்த்திகள்  மூச்சு குழலை .  பாதிக்கிறது. மூச்சுக்காற்றின்  வழியாக  நச்சு  உள்சென்று  நுரையீரல் , இதயம்  போன்ற  இடங்களில்  பாதிப்புகளை உண்டாக்குகிறது . தேவைன்றி  உள் செல்லும்  இந்த நச்சு காற்று   நீர்க்கோவை , சளி , காய்சல் போன்றவை  ஏறப்படுகிறது .சிலருக்கு  மூக்குநாள அழற்சி  தோன்றுகிறது . இதனால்  சிலருக்கு  ஒவ்வாமை  ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் பல பாதிப்புகளை உடல் ஏற்கிறது
   
     கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட்  ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து  கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுவர்த்திகளினால் வரும் காற்றை பிறந்த குழந்தைகள் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படுவதாக லக்னோ பல்கலை கழக ஆய்வு எச்சரிக்கறது. மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொசு விரட்டிகளை ஓட்ட பயன்படுத்தப்படும் ரசாயனம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொசு விரட்டியில்லுள்ள ட்யேக்சின் புற்றுநோயை உண்டாக்ககூடியது. அலேத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்லமெல்ல குறைக்கும் தன்மை உடையது என்கிறார்கள்.

    வற்றிலிருந்து தப்பிப்பது இயற்கையான ரசாயன கல்லப்பில்லாத மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதான கொசுவர்திகளை பயன்படுத்துவதும் கொசுவலைகளை பயன்படுத்துவதும்   தீர்வாக அமையும்.          More than a Blog Aggregator

2 கருத்துகள்:

  1. கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. ...

    மேற்கூறிய உடல்நலக் குறைவுக்கு சித்த மருத்துவத்தில் என்ன மருந்து சொல்லப்படுகிறது...

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக நுரையீரலை துய்மைபடுத்திக் கொள்ள மூச்சு பயிசிகள் உதவும் அதிகாலையி லேயே செய்யலாம் . குறிப்பாக சித்த மருந்தான அணு தைலம்மூக்கில் இரண்டு சொட்டு விட்டு வாயில் கொண்டுவந்து துப்பிவிட்டு தொடர்ந்து கொசு விரட்டி பற்றி நீங்கள் கேள்வி கேட்டிருந்தீர் . மூச்சு பயிற்சி செய்யலாம் நுரையீரல் தூய்மையாகும் polurdhayanithi

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...