ஏப்ரல் 16, 2013

ஆண்மைக்குறைவும் மக்களின் அறியாமையும்

 


             இப்போது  தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரன் போல ஆகிவிடுகிறார்கள் அல்லது ஆக்கி விடுகிறார்கள் . ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் அழகுப் பதுமை அவர். வழமையாக  ஒரு  சமையல்கலை குறித்தான  நிகழ்வில்  பங்கேற்கிறார் . அந்த நிகழ்ச்சியை  தொலைக்கட்சியில்  கண்டவர்கள் எல்லாம் அந்த  அழகுப்  பதுமையை  நல்ல சமையல் கலைவல்லுனராகவே  சித்தரித்து  விட்டார்கள்  பாவம். அதன் பொருட்டு  கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க  இறுதியில் அந்த அழகுப் பதுமை  உண்மையை போட்டு உடைக்க  அப்போதும் கூட  அவரை வட்டமிட்டு  வினாத் தொடுத்தார்கள்  சமையல் கலையை பற்றி கூறுங்கள் என்று . அவர் மீண்டும் மீண்டும் சொன்னது  நான் இதுவரை வீட்டில் கூட சமையல்  செய்தது இல்லை , தொலைக் காட்சி  படப்பிடிப்பிற்காக  நடித்தேன்  அவ்வளவு தான் .பாவம்  அறியாமை  மக்களை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள் ..!

            ஒரு மருத்துவனுக்கான  நல்ல அறிகுறி மக்களை நோயில் இருந்து விடுவிப்பது . ஆனால் செத்துப் போன நிலையிலும்  பணத்தாசை பிடித்து  பணத்தை கட்டிவிட்டுத்தான்  பிணத்தை எடுத்துச்  செல்லச் சொல்லுகிறது இன்றைய  சில மருத்துவமனைகள் . அறியாமை பிடித்த மக்கள்  மீண்டும் மீண்டும் அங்கேயே  வட்டமிடுவது  எதைக்காட்டுகிறது ?

           ஆண்மைக் குறைவு  என்ற  வெற்றுச் செல்லாடலும்  இப்படியே...! இன்றைய புதிய அறிவியலும்  ஆண்குறிக்குச்  செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால்  ஆண்குறி எழுச்சி  இருப்பதில்லை என்கிறது . தூய தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் ஏழு தாதுக்களும்  பலம் குன்றுவதால் பாலியல் குறைபாடு உண்டாகிறது என்று தெளிவாக கூறுகிறது. சித்தர்கள்  உடலின் ஏழு  தாதுக்களும் பலமடைய  முறையான தீர்வினை  மரங்களின்வேர்கள் , பட்டைகள் , இலைகள்  ஆகியவற்றின் மூலமாக வழங்குகிறார்கள் . மருந்துப் பொருட்களை முறையாக முழுத் தூய்மை செய்தல்  சித்த மருத்துவத்தின்  தனிச்சிறப்பாகும்.  
       
           இன்றைய  ஆண்மைத் தளர்ச்சிக்கு (Male Impotence)முகாமையான   காரணம் இரத்த ஓட்டக் குறைபாடு  என்கிறது  புதிய ஆய்வு முடிவுகள் . உடனே  ஆண்குறிக்குச் செல்லும்  இரத்த குழாயில் உண்டாகும் குறைபாடுதானே இது முன்னமே தெரியும்  என்கிறீர்களா ? அதுதான் இல்லை . ஒருசிலர்  உளவியல் குறைபாடு  என்கிறார்கள் இதுவும் இல்லை .தமனி (artery ) குழாய்  களில் உண்டாகும்   இரத்த ஓட்டத்  தடையே ஆண்மைத்திறனை  குறைத்து விடுகிறதாம்.ஆண்களின் பாலுணர்வு கிளர்ந்து எழுவதற்கு நைட்ரிக்  ஆக்சைடு  பேருதவி செய்கிறதாம்.   எப்படி...? என்றால்  ஆண்களின் உள்ளம் பாலுணர்வில் திளைக்கும் போது  அந்த உணர்வை  உடலின் மெல்லிய உறுப்புகள்  உணர்ச்சியாக  மாற்றி  ஆணுறுப்பு  விரைத்தெழ  காரணமாக இருப்பது  இந்த நைட்ரிக் ஆக்சைடுதான் .  இதை  மேலை நாடுகளில் ஜிங்கோ  என மரப்பட்டையில் இருந்துதான்  எடுக்கிறார்கள் .... இது தமிழர்களின்  அறிவு சார் சொத்துரிமையின் ஒரு பகுதிதான் என நான் சொல்ல வேண்டுமா என்ன  ? தமிழர்கள்  விழிப்படைய வேண்டும் என்பது தான் நமது எண்ணமெல்லாம் .

More than a Blog Aggregator

மார்ச் 26, 2013

கோடை வெம்மையை கொடையாக்குவோம்


அன்புள்ள உறவுகளே  வணக்கம்  நீண்ட  நாட்களாக  வலைபதிவு  எழுத இயலவில்லை ...... இப்பொழுது மீண்டும்  எழுதுகிறேன் ....
                              

       இன்றைய புதிய உலகம்  நோய்களை பெரிதும்  உண்டாக்குகிறது  காரணம் முறையில்லாத உணவுகள்  மரபு வழிப்பட்ட  பழமையான  உணவுகள் இன்றைய  இளைஞ்சர் களுக்கு மறந்தே போயின அப்படிப்பட்ட  மிகவும்    சிறப்பு வாய்ந்த உணவுகள்  மனிதத்தை நோயில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் நல்ல தேர்ந்த உணவாகவும்  இருந்தது . ஆனால்  இன்றைய உணவுகள்  வரட்டுத்தனமான  சுவையை மட்டுமே  கொண்டு உடல் நலனை பின்னுக்கு தள்ளிவிடுகிறது .
       இன்றைய புதிய   உலகம் குடிநீரை கூட எடுத்துக் கொள்வதில்லை என்ற  அதிர்ச்சி தரும்  காணக்  கிடைக்கிறது  நீர் வேட்கை  கொள்ளும் நேரத்தில் புட்டியில் அடைக்கப் பட்ட  மென் பானங்களே   அவர்களின் உயிர்காக்கும்   குடிநீராகிவிடுகிறது    ஆனால் அது அவர்களின்  உயிரை குடிக்கும்  என்பது அவர்கள் அறிந்து கொள்ளுவதில்லை  . அது பற்றிய சிந்தையும் அவர்களுக்கு வருவதில்லை  இதற்கான கரணம் இந்த சமூகம் அந்த  கல்விகளை அவர்களுக்கு அளிக்கவில்லை  ஒரு உணவு  நோயில்லாத உணவைத தரவேண்டும் என்பது நமது மரபுவழிபட்ட முறையாகும்  இந்த உலகே பயன் படும் விதமாக நமது உணவு முறை இருந்து வந்தது அனால் இன்று எல்லாவிதத்திலும் மேலை நட்டு நாகரீகத்தை கண் மூடித்தனமாக பின்பற்றியதன் விளைவு  நமது சமூகம் நோயில் வீழ்ந்து தவிக்கிறது . இந்தகைய  பானங்கள்  உடலை கெடுப்பதோடு சிறுநீரகத்தினை  சல்லடைகளாக செயலிழக்க  வைத்து  விடுகிறது  அனால்  நமது  மரபு வழிப்பட்ட  உணவு முறை  கோடைக் காலங்களில்  
 சோற்று நீர்...  இது மிகசிறந்த  சிறந்த குடிநீர்  இதில்  செரிமானம்  கூட்டும் திறன்  மிகையாக உள்ளது  உள்ளுருப்புகளை  திறம்பட  செயல்பட வைக்கிறது .வாத பித்தத்தை  கட்டுப் படுத்துகிறது.

இளநீர்  ... இதன் குணத்தை  சொல்லத்தேவையில்லை  உடலை

குளிர்விக்கும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது  . இதில் அடங்கியுள்ள  தாது உப்புகள் என்னில் அடங்காதவை. இவை அனைத்தும்  உடளுக்கு நன்மை செய்யக் கூடியது .

பதநீர் ... இது  கபத்தை  கட்டுப்படுத்துகிறது  மூச்சிறைப்பு  நோயில் சில மருந்துகளுக்கு துணை நிற்கிறது  உடலுக்கு  தாது  உப்புகளைத் தந்து  பல நோவில் இருந்து விடுவிக்கிறது .


மண் பானைநீர் ... இது  மிகசிறந்த  குடிநீர்  இன்று  நீரில்  கலந்து உள்ள தேவையில்லாத  அழுக்குகளை  நீக்கி தூய்மையாக்கி  உடலை குளிர்விக்கிறது. கண் எரிச்சலைக் கட்டுப் படுத்து கிறது.

   இப்படி  நமக்கு மிகையாக  இயற்கை அன்னை கொடையாக அளித்து உள்ள குடிநீர்களை பயன் அடுத்தி நோயில் இருந்து  விலகி இருப்போம் .புட்டியில் அடைக்கப் பட்ட உணவுகள்  உடலையும் சிறுநீரகத்தையும்  கேடு அடைய செய்யக் கூடியது  எனவே இவற்றை தவிர்ப்போம்

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator

டிசம்பர் 16, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் 6



    உறவுகளே  வணக்கம் .

    குறிப்பாக  உண்மையில்  எனது குமுகம்  மிகவும்  சிறப்பான  ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது  எண்ணமாக  இருக்கிறது  மற்ற  வலைப்பூக்களைப் போல அல்லாமல்  மீண்டும் மீண்டும்  நாம்  கேள்வி கேளுங்கள்  கேள்வி கேட்கும் பக்குவத்தை  வரவழைத்துக் கொள்ளுங்கள்  என பதிவு செய்கிறோம் . ஒருமாணவன்  என வைத்துக் கொள்ளுவோம் .அவனுக்கு  நாளும்  உணவு கொடுங்கள்  நான் பணம் கொடுத்துவிடுகிறோம்  என சொல்லி குறிப்பிட்ட பணம் கொடுத்து இட்டு சென்றபிறகு  அந்த மாணவனின்  உணவு  தேவை பற்றி  தெரியாத நிலையில் முதலில் நான்கு  இட்டலி  கொடுத்தல் அதில் மூன்றை எடுத்துக் கொண்டு  மீதம் ஒன்றை வைத்து விட்டால்  உணவு கொடுப்பவர் என்ன செய்வர்  மூன்று இட்டலிகள் போதும் என நினைத்து  அவருக்கு  மேலும் உணவு வழங்குவது பற்றி  சிந்திக்க மாட்டார்கள் . அனால்  நான்கையும்   தின்றுவிட்டால்  மேலும் உணவு கொடுக்க தீவிரமாக சிந்திப்பார்கள் . அதுபோல தான்   உண்மையில் என சமூகத்திக்கு   எதாவது செய்ய வேண்டும் என வாழ்கை பற்றியும் உண்மையான மற்றம் வேண்டும் என   சிந்திக்கிறோம்  கேள்வி கேளுங்கள்  என கோருகிறோம்  எங்கிருந்தும் பதில் இல்லை என்பதால்  நமது பதிவில்  ஏனோதானோ  என  முறையான குறிப்புகளை  எடுத்துக்  கொள்ளாமலே பதிவு செய்கிறோம்   சரி  கொஞ்சம்  கேள்வி கேட்க பழகுங்களேன்  காசு எல்லாம் ஒன்றுமில்லை . சரியா  இனி.....

        இந்த பதிவில் திருமூலர்  குழந்தைப்பேறு பாற்றி என்ன பதிவு  செய்கிறார் என பார்ப்போம்....
பாய்கின்ற  வாயு  குறுக்கில்  குறளனனாம்
பாய்கின்ற  வாயு வலையின்  முடமாகும்
பாய்கின்ற  வாயு நடுப்படில்  கூனாகும்
பாய்கின்ற  வாயு மாதாவுக்கு இலை  பார்க்கிலே.

   ஆண்  பெண் இருவரும்  கூடும் போதுமூச்சுக் காற்று  அளவிற்கு குறைந்தால்  பிறக்கும் குழந்தை குறுகிய  வடிவமாக இருக்கும். அதேபோல மூச்சுக் காற்றானது  இளைத்தவன் மூச்சுக்  காற்றுபோல வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். அதேபோல மூச்சானது மேற்க்கூரியதைபோல இல்லாமல் நடுவு நிலையாக இறந்தால் பிறக்கும் குழந்தை கூனுள்ளதாக இருக்கும் . இது ஆணுக்கே  அன்றி பெண்ணிற்கு அல்ல   என்கிறார்.

இன்னொரு இடத்தில் ...

மாதா  வுதரம் மலமிகில் மந்தனாம்
மாதா  வுதரம் சலமிகுள் ஊமையாம்
மாதா  வுதரத்தில்  இரண்டொக்கில்  கண்ணில்லை
மாதா  வுதரத்தில்  வந்த குழவிக்கே .

  தாயும் தந்தையும் கூடும் பொது தாயாரின் வயிற்றில் மலம் மிகில்  துப்புரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால் பிறக்கும் குழந்தை  மந்தமாக பிறக்கும்  இதே போல சலமான சிறுநீர் துப்பரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும்  இரண்டு  வகையான கழிவுகளும்  சம அளவில்   இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாக்  இருக்கும் இது தாயின்  வயிற்றில்  தோன்றும் செய்கைக்கே என அறிக.......

ஆண்  பெண்  அலி இரட்டைப் பேறு

குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது  ஆகில்
குழவியும் இரண்டாம்  அபான னெதுகில்
குழவியும் அலியாம்  கொண்ட காலோக்கில் .

 கணவன்  மனைவி இருவரும்  கூடுங்காலத்தில் வலது மூக்கின் வழியாக  உயிர்ப்பு  வந்து கொண்டு இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் .இதேபோல உயிர்ப்பு இடது புறமாக இருந்தால்  பெண் குழந்தையாக இருக்கும் .இவ்வுயிர் பிற்கு அபானன் எதிர்ப்பட்டு வந்தால் குழந்தைகள் ... அதாவது இரட்டைக்  குழந்தைகளாய்  இருக்கும் . இரு  மூக்கின் வழியாக இருந்தால்  குழந்தை அலியாக  இருக்கும் என்கிறார் .

அப்படியானால்  நன்றாக அறிவாளியாக அழகாக ... குழந்தை  பிறக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என  கேட்க தெண்ற  வேண்டும்   தொன்று கிறதா   சரி நானே சொல்கிறேன் ....

கொண்ட  நால்வாயு இருவர்க்கும் ஒண்டிடில்
கொண்ட குழவியும்  கோமள  மாய்விடும் .
கொண்ட இவ்வாயு குறிப்பறிந்து இவ்வகை
கொண்டதும்  இல்லை கோலம்  உன்னதே .

 மருவிப் புணரும் காதலர்  இருவருக்கும் வருகின்ற உயிர்ப்பு ஒரே அளவகியதாய் இருக்க வேண்டும்  அங்கனம்   ஒரே  அளவு  கொண்டதாக இருந்தால்  பிறக்கும் குழந்தை  அழகும்  சிறப்புமாக பிறக்கும் என்கிறார்  .அவ்வாறு  இல்லாமல்  மூச்சுக்  குழன்று போனால்  பெண்ணின் வயிற்றில்  கரு  தங்கது  என கூறுகிறார். .

சரி மேலும் விவரம் அடுத்த பதிவில்  சிந்திப்போம் .....

சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .


More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...