நவம்பர் 12, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம்

இன்றைய இளசுகள் எதிர்கால வாழ்வை பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை முறையில்லாத உணவு பழக்கத்தாலும் முறையில்லாத வாழ்க்கை முறையாலும் தங்களுடைய வாழ்கையை வினக்குரியாக்கிக் கொள்ளுகிறனர் . இதைப் பற்றி சிந்திப்பதாகவும் தெரியவில்லை . இதை பொறுமையாக சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சற்று கடினமாக பேசவேண்டி இருக்கிறது நாங்கள் எல்லோருமே அப்படித்தான் இருக்கிறோம் நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்கிறனர் . நாம் சரி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் அனால் உணவு வாழ்கை முறை எல்லாவற்றையும் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டுமே இப்படி உணவு முறை இயற்க்கை சார்ந்த உணவுமுறை வரம் இருநாள் எண்ணை தேய்த்து குளித்துக் கொள்ளுதல் மூகமையாக வயிற்றை தூய்மையாக்கி கொள்ள வேண்டியது தேவையானது . முந்தய பதிவு களில் சொல்லிய படி வேறு எதாகிலும் நோய் இருந்தால் அதை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும் குருதி(இரத்தம் ) அளவு சரியாக இருக்கிறதா உடலில் வலி இருக்கின்றனவா என சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை முறையாக நீக்கிக் கொள்க . பெண் , அல்லது ஆண் எவராக இருந்தாலும் வளமையான அதாவது பணம் , பொருள் போன்றவற்றை பார்க்காமல் முதலில் இருவருக்கும் பிடித்தமானவர்கள் இருக்கிறீர்களா சிக்கல் நேரும் பொது எப்படி அதை அணுகுவது என முடிவு செய்து பின்னர் வாழ்கையை தெரிவு செய்வது மிகவும் சரியானது . பாலுறவைப் பொறுத்தவரை இளமையில் எல்லாமே சரியாகத்தான் தோன்றும் பின்னர் எது முன்பு இனித்ததோ அதுவே கசப்பானதாக மாறும் எனவே எல்லா சிக்கல் களுக்கும் முறையான தீர்வு இருக்கிறது பிரிவு என்பது எங்களிடையே வராது வந்தால் முறையாக பேசி தீர்த்துக் கொள்வோம் என முடிவு செய்து கொள்ள வேண்டும் நம் முதலில் பாலுறவு கட்சிகளை பார்க்க வேண்டாம் என கூறியதி பொருள் இதுதான் அதாவது உரையில்லாத அந்த பாலுறவு கட்சிகளை பார்த்து விட்டு இயல்பான பாலுறவு எளிதில் சலிப்பைத்தரும் இதனால் வாழ்கையே வினாக்குரியவதும் உண்டு அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
More than a Blog Aggregator

நவம்பர் 05, 2012

புதிய வாழ்க்கை முறை நோயில்லாத குழந்தைப்பேறு ....



 நமது வலைபூவிற்கு  வந்திருந்த  கேள்வி நோயில்லாத  குழந்தைபேறு  உண்டாக்க  சொல்லுங்கள்  என  இதுகுறித்து நாம் முன்னமே பேசி இருக்கிறோம் . அருள் கூர்ந்து விரிவாக வாசியுங்கள்  அப்படி  வாசித்து இருந்தால்  அவற்றில் இருந்து வினா தொடுக்கலாம்  .சரி நானும்  பதில் எழுத ஆயத்தமகிவிட்டேன் . இன்று கணிசமாக  நமது மரபு ரீதியான  மருத்துவ முறைக்கு  இளைய  சமூகம்  வருவது  நமக்கு  உண்மையில் மகிழ்வைத்  தருகிறது .

திருமணத்திற்கு  ஆயத்தமாவோம் ...

 இன்றைய  விரைவு  உலகத்தில்  பணம் மட்டுமே  குறிக்கோளாக  கொள்ளப்பட்டு  இளைய தலை முறையினரை    பணம் காய்க்கும் மரமாக  பெற்றோர்கள்  பார்க்கிறார்கள் . அப்படியே அவர்களை  பழக்குகிறார்கள்  பணம் சமபதித்து  சிறிய அகவையிலேயே  நோயில் விழ்ந்து  துடிக்கிறனர்  இவர்களைப் பார்த்தல் வேதனைப் பட   நேருகிறது. பொருளீட்டுவது  முறையான  வாழ்விற்க்குதத் தானேயன்றி  வேறல்ல  இதை  எண்ணம் கொள்ளவும்
      இல்வாழ்க்கை  என்பது  வாழப்போகும் காலங்களில்  ஈடுபாட்டுடன்  வழ முயலுவதாகவும்  இன்பத்தையும் துன்பத்தையும்   முழு ஈடுபாட்டுடன்  எதிர் கொள்வதாகவும் இருக்க வேண்டும் .  வரட்டுத்தனமான   அழகோ ... பணமோ  உண்மையில்  நிம்மதியை  கொடுத்துவிடாது  என்பதை  உள்ளத்தில் கொள்ளவேண்டும்    திருமணம்  ஏற்ப்பாடு  செய்யப்பட பின்னர்  பாலுறவு  தொடர்பான  கட்சிகளை கண்டிப்பாக   பார்க்க கூடாது  காரணம்   இது  அளவிற்கு மிகையான  பாலுறவு என்னத்தையோ  அல்லது அதற்க்கு நேர்மாறான   உலவியலையோ தரும்  அருள் கூர்ந்து  விட்டுவிடுங்கள்.
   திருமணத்திற்கு  முன்னதாக  இரண்டு  அல்லது மூன்று மதங்களுக்கு முன்னமே  இதற்க்கு ஆயத்தம் ஆகிவிட வேண்டும்   பாலுறவு காலத்தில்  கண்டிப்பாக வெறித்தனம் கூடாது  வள்ளுவம்  இதை  பாலுறவைஎன்ன சொல்லுகியது என்பதை  படியுங்கள்  குறைந்தது காதலர்கள் ( கணவன் மனைவி )
இருவரும் வள்ளுவரின்  இன்பத்து பால்  பாடல்களை  எல்லாவற்றையும்  இருவரும் முழு ஈடுபாட்டுடன்  படிக்க வேண்டும்   அப்போது தன என்ன சிக்கல் கல் எல்லாம் இல்வாழ்க்கையில் வரும் எப்படி தீர்ப்போம்  என தெரிந்து கொள்ளவியலும்
 மலரினும் மெல்லிது காமம்  என்பர் வள்ளுவர்  அதுபோல  பாலுறவை கைக்கொள்ள வேண்டும்  கண்மூடித்தனமாக  கையாளக் கூடாது   எல்லா வற்றையும்  முதலில்  நிறைய கணவனும் மனைவியும்  பேசவேண்டும்   அப்போதுதான் இருவரின்  உளநிலையை  அறிந்து கொள்ளவியலும்  பதற்றம் வேண்டாம் இன்று  எண்பது  விழுக்கடு  இளைய  தலைமுறைக்கு  எப்படி பாலுறவு வைத்து கொள்ளுவது என  தெரிய வில்லைஎன்கிறது ஒரு புள்ளிவிவரம் .

பாலுறவில்  உச்ச  நிலை என்பது என்ன ?

வீட்டு விலக்கு  நாளில் பாலுறவு கொள்ளலாமா ?
உச்சகட்டம் இருவருக்குமா ? எப்படி அடைவது ?
தங்களின்  பாலுறுப்புகளை  எப்படி  வைத்துக் கொள்ளுவது ?
கருக் கால  பாத்து காப்பு என்பது என்ன ?
கருக்கலத்தில்  பாலுறவு வைத்துக் கொள்ளலாமா?
பெண்மையை இந்த  காலத்தில் எப்படி கையாளவேண்டும் ?
கருக்கால  நோய்கள் என்ன தேர்வு என்ன ?
அறிவான குழந்தை  கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
நோயில்லாத குழந்தை  பேறு  கிடைக்க  என்ன செய்ய வேண்டும் ?

இப்படி வினாக்களை தெரிவு  செய்து  வினாக்களைத் தொடுத்து  விடை  விடைதேடினால்  வாழ்வு இனிதாகும் தானே  என்ன தேடுவோமா ?


சித்த மருத்துவம் காப்போம்  நோய் வெல்வோம் .
 
More than a Blog Aggregator

அக்டோபர் 29, 2012

கர்ப்ப மூலிகை வரிசை கரிசாலை ....



    கர்ப்ப  மூலிகைகளைப்பற்றி எழுத்தத்  தொடங்கினேன்  பின்னர் சில வினாக்கள்  அவற்றான்  தொடர்ந்து  எழுத முடியாமல் போனது .இந்த இடுகைக்கு கர்ப்ப மூலிகை  கரிசாலை  ஆற்றி பார்க்கலாம்  இந்த மூலிகை  உண்மையில்  உடலை பொன்னாக்கும் உயர்ந்த மூலிகையாகும்  இதன் பலனை  கண்டவர்களே  அறிந்து கொள்ள இயலும்  இந்த கரிசாலை  மூலிகையை  பலவகையில் அழைக்கின்றனர் . கரிசனாங்கண்ணி ,கரிப்பான் , கரிசாலை ,கைகேசி ,பிருங்கராஜம்  என பல பெயர்களில் அழைக்கின்றனர் .

      இதன்  இலை , வேர் , மற்றும்  எல்லா  பகுதிகலும்  மருந்தாக  பயன்படுகிறது . இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த  வள்ளார்  இதன் பயனை மிகும் சிறப்பாக  பதிவு செய்வர்  நாம் ஒரு கைப்பிடி அளவு  வெறும் வயிற்றில் பச்சையாக  மென்று தின்ன வேண்டும்  என்பர்  இதனின் சிறப்ப்புகள்  அளவிட இயலாதவைகள் .

இது  கசப்பு  சுவையுடையது .

பித்தநீர்  பெருக்குதல் 

உடலை  தேற்றி  பெருக்குதல்
உடலை உரமாக்குதல்
வாந்தியுண்டக்குதல்
நீர்மலம் போக்குதல்
இரத்தத்தைப்  பெருக்குதல்
ஈரலைத் தேற்றுதல்
வீக்கத்தைக்  கரைத்தல்
குட்டம்
காமாலை
பாண்டு
பல்நோய்கள்
சுரம்

போன்ற  நோய்களை  நீக்குவதேடு  இது கல்ப  வகை மூலிகை  ஆதலால்  முறைப்படி உண்டுவர   உடல்  பொன்னிறமாகி உறுதியுடன்  விளங்க  வைக்கும்  . நோய்களை விரட்டும்  தலை மயிர் கருக்கும் கண்கள்  இரவிலும்  ஒளிரும்    இவ்வளவு  சிறப்பு வாய்ந்த  மூலிகையாகும்

குரற்கம்மர்    காமாலை  குட்டமோடு  சோபை
யுரர்பாண்டு  பன்னோ யொழிய  நிரர்சொன்ன
மேய்ந்த கரையோத்த மீளியன்னு  நர்புலத்து
கையாந்த  கரையொத்த  கால்
 என்கிறது மருத்துவ பாடல்   முறைப்படி    உண்ண  விழைவோர் காலையில்  வெறும் வயிற்றில்   ஒரு கைப்பிடி அளவு  மூலிகையை  உண்டுவர  எதிர்பார்த்த  சிறந்த  பலனைத்தரும்

சித்த மருத்துவம்  காப்போம் நோய் வெல்வோம் 

  

More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...