அக்டோபர் 22, 2012

மஞ்சளின் மகிமை வரிசை 2


                                                      


  மஞ்சள் பற்றி விரிவாக எழுத தொடங்கினேன்   இருந்தாலும்  நேரமின்மை காரணமாக   விரிவாக எழுத இயலவில்லை  தமிழர்களின்  பண்பாடு என்பது உண்மையில் விரிந்த அறிவியலை உள்ளடக்கியதாகும்.பழந்தமிழர்கள்  அறிவியல் அடிப்படையிலேயே  எல்லாவற்றையும் பகுத்தும் தொகுத்தும்  இந்த உலகினுக்கு  கொடையாக வழங்கினார்கள் . மஞ்சள்  மருத்துவக்   குணம்  நிறைந்தது  உடலில்  தோன்றும்  தோல்  சம்பந்தமான  பிணிகளை  நீக்குவதில்  சிறந்த  இடத்தில் நிற்கிறது . பெண்களின்  பூப்பு  காலத்தில்  அவர்களின்  உடலில் பலவேறு  மாற்றங்கள்  நிகழுகிறது  பெண்களின் உடலமைப்பு  வெளிப்புறமாக  இருப்பதனால்  அவர்களுக்கு  பலவேறு நோய்  தொற்றுகள்  வர வாய்ப்பு  உள்ளமையை  அறிந்த பழந்தமிழர்கள்  அவ்வாறு  எந்த தீங்கும்  வரகூடாது  என  எண்ணியே  பண்பாட்டு முறையை  ஆழப் புகுத்தினார்கள் . எனவே இந்த நாளில்  பெண்களுக்கு  மஞ்சள்  நீராட்டுவிழா  எடுத்தார்கள் . இதனால்  தோல்  சம்பந்த  மான  பிணிகளும்  மற்றும் பல்வேறு  தொற்றுகளும்  வராது    தடுத்தனர் .

     இன்றைய  நிலையில்  இதளியம்(இரசாயணம் ) கலந்த மஞ்சள்  உடலுக்கு கேட்டையும்  பலவேறு  நோய்களையும்  உண்டாக்குகிறது  இவற்றில் இருந்து  தப்பிக்க விழைவோர்  கடைகளில்  விற்கப்படும்  மஞ்சள்  கொம்புகளை  வாங்கி    நீரில்  தூய்மையாக   கழுவி  பின்னர் நன்றாக  வெய்யலில்  காயவைத்து  பின்னர் அரைத்து  பயன் படுத்தலாம்  கரணம் மஞ்சளை  பாதுகாக்கும் பொது அவற்றை செயர்க்கை  வண்ண மூட்டிகளை  சேர்த்து  கலந்து    சந்தைக்கு அனுப்புகிறார்கள்  இந்த செயற்கை  நிறமூட்டிகள்   பலவேறு   நோய்களை  உண்டாக்குகிறது  இதை  பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்ளாமல்   பணம் ஈட்டுவதைப்  பற்றியே  கவலை கொள்ளுகிறனர்   இது சுவர் இல்லாமல்  சித்திரம்  வரைவதற்கு ஒப்பாகும் .

       இன்றைய உலகில்  பணம் மட்டுமே குறிக்கோளாக  கொள்ளபடுகிறது  அதுமட்டும்    இன்றி  மட்டரகமான   நாளிதழ்கள் , ஊடகங்கள்  போன்றவற்றில்  வரும் கருத்துகளை  வேத வாக்காக  கருதி  நடைமுறைப் படுத்துகிறார்கள்  . இது  பிழையனானதகும் . வெளியிடுபவர்கள்  யார்   என்பதைப் பற்றி   எல்லாம்  கருத்தில் கொள்ளுவதில்லை .இந்த சிந்தனையும்  வருவதில்லை   அனால் மூடத்தனங்களை  சொன்னால்  அது காட்டுத்தீயாய்  பரவி உந்த குமுகத்தை  நாசப்படுத்துகிறது .

      முன்பெல்லாம்  பெண்கள்  மங்கள  நாண்  பயன்படுத்துவது பெரு வழக்காக  இருந்தது  இன்று  பெண்கள்  மங்கள  நாணுக்கு (தாலி )பதிலாக  பொன்  நகைகளை  அணிந்து  அழகுபடுத்திக்  கொள்வதிலும் அதில்  தாலியை  இனித்துக் கொள்ளுகிறனர்  . இதனால் வரும் கேடுகள்  எண்ணிலடங்கா  அனால்  அதைப் பற்றி எல்லாம் கவலை  கொள்ளுவதாக  தெரியவில்லை  கரணம் இன்று பெண்கள் மார்பக  புற்று நோய்க்கு  பெரும்பான்மையோர்  ஆளாகி  வருகிறார்கள் .

பழந்தமிழரின்  அறிவு மரபை  மதிப்போம்
சித்தர்தம் அறிவினை ஏற்ப்போம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்   வென்று  நீடு வாழ்வோம் .




More than a Blog Aggregator

அக்டோபர் 08, 2012

மஞ்சளின்( turmeric) மகிமை




     தமிழரின்  உணவுமுறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை  என  அடிக்கடி கூறுவதுண்டு . காரணம்  எல்லா உணவுகளும் சிறப்பு வாய்ந்தவை மருத்துவக் குணம் நிறைந்தவை  இப்போதெல்லாம்  மூலிகை  அதுசார்ந்தவற்றைப் பற்றி  மிகையாக எழுதுகிறேன் . காரணம்  மூலிகைகளின் மருத்துவப் பயனை முழுவதுமாக அறிந்து கொண்டால்  தமிழர்கள்  சற்று சிந்திப்பர்களே என்ற  ஒரு ஆசையினால்தான்  .

     இந்த மருத்துவக் குணம் நிறைந்த மஞ்சளின்  தனித்  தன்மை  தோல்  சம்பந்தமான  பிணிகளை  நீக்குவது  தான் ஆனால்  இன்றைய  இரசாயனம்  கலக்கப் பட்ட  மஞ்சளோ  புற்று நோயைகூட  உண்டாக்கும்  என  ஆய்வுகள் சொல்லுகிறது . இந்த மஞ்சள் செடி வகுப்பை சேர்ந்தது .கசப்பும், காரமும்  இதன் சுவைகளாகும். வெப்பம் உண்டாக்குதல் இதன்  தனிக்குணம் ஆகும்.மஞ்சள்  உடலுக்கு வனப்பைத் தரும்  உடலில் பூசி குளிக்க  உடலில் வியர்வை நாற்றம் விலகும் . 




பெண்களுக்கு தனியான கவர்ச்சியைக் கொடுக்கும்.

பசியை  உண்டாகும்
கக்கல் (வாந்தி )
வாத ,பித்த , கப  பிணிகளை  நீக்கும்.
தலைவலி
நீரேற்றம்
நீரழிவு
வெள்ளை
பீனிசம்
வீக்கம்
வண்டுகடி  நீங்கும் .
இரணங்களை  குணமாக்கும் .
உடல் பொன் சாயலைப் பெரும் .
உடலில் மயிர் வளர்தலை கட்டுப் படுத்தும் .
தூளாக்கி  புண்களின் மீது  தூவ  விரைந்து ஆறும்.
 மஞ்சளை  அரைத்துக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
இதை சுட்டு  புகையை நுகர்ந்தால்  நேரேற்றம்  நீங்கும்.
இதை வேம்புடன்  அரைத்து பூச  அம்மை  புண்கள் விரைந்து ஆறும்.
வயிற்றுப் பொருமல்
வயிற்று  வலி மாறல்  சுரம் நீங்கும் .
மஞ்சளை அரைத்து நீரிற்  கலக்கி அதை வெள்ளை துணியில்  நினைத்து காயவைத்து  பயன் படுத்தினால்  வாத நீர் சுருக்கு , ஒருவித தோல் நோய், தனிசுரம் ,விட சுரம்  மலபந்தம் நீங்கும் .

தலைவலிநீ ரேற்றஞ்  சளையாதமேகம்
உலைவுதறு பீனசித்தி  னூடே - வலிசுரப்பு
விஞ்சு  கடிவிடமும்  வீருவிர  ரணங்களும் போம்
மஞ்சட்  கிழங்கிற்கு  மால்.

        இதிலும் கூட  மர மஞ்சள்  என தனியான மஞ்சள்  உண்டு இது மர வகுப்பை சேர்ந்தது. மரத்தின் சக்கை மஞ்சள் நிறம் உடையது இவற்றான் இந்த பெயர் .இது கசப்பு சுவையுடையது .
வெப்பகற்றுதல்  பசியைதூண்டுதல் உடலை உரமாக்குதல் இவை இதன் செய்கைகள் .இதை அரைத்து தலையில் பற்று இட்டால்  வெப்பம் நீங்கும் . இரத்தம் கட்டிய வீக்கம்  தோல் சிதைவு  நீங்கும்.மூலநோய்,  முக்குணம் , கனசுரம், உட்சுரம்  நீக்கும் குணம் இதற்க்கு உண்டு .

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator

செப்டம்பர் 24, 2012

தமிழன் நோய் நீங்கி நீடுவாழ



     வள்ளுவன் என்ற  பெயரினால் ஆன  பதிவர்  இப்படி கூறுகிறார் . உலகிற்கே அறிவியலையும் நாகரீகத்தையும் வழங்கிய தமிழ  சமூகம்  இன்று நோயாளியகிக்  கொண்டு  இருப்பதைப்  பார்த்தால்  வயிறு  பற்றி எரிகிறது  அதற்கும் ஒரு மருந்து சொல்லுங்கள்  என கேட்டு இருந்தார் .

       உண்மைதான் நண்பரே  உங்களின் பெயரே  உங்களைக் காட்டிவிடுகிறது  சிறந்த தழிர்களின்  ஆசானின் பெயரைத் தாங்கி  இருக்கிறீர்கள் பாராட்டுகள். உண்மையில்  தமிழரின் நோய்க்கு  அடிப்படைக் காரணம்  தமிழனை  தமிழனே  மதிப்பதில்லை . தமிழ கலைகளை  போற்றி பாதுகாப்பதில்லை.  தமிழ  கலைகளை  செய்கிறவர்களை  ஆதரிப்பதில்லை  இதனால்  தமிழன்  நோயாளியாகிப்  போனான்  போய்கொண்டு  இருக்கிறான் .இது வள்ளுவர் காலத்திலேயே  தொடங்கி விட்டது தான்  என்றாலும்  இப்போது தமிழன்  நிலை  மரணத்தின் பிடியில்...  இப்போதாகிலும் விழித்தால் நலம் பெறலாம் . ஒன்றுமில்லை .... தமிழ  கலைகளையும்  தமிழையும்  தமிழ அறிஞ்சர்  களையும்  காப்பது போற்றுவது  பாதுகாப்பது .... தமிழன்  ஓரணியில் திரளுவது ... தமிழன் உலகெங்கும்  தாக்கப் பட்டால்  குரல் கொடுப்பது...  என சூடு  சொரணை பெற்றுவிட்டாலே  தமிழன்  உலகின் உச்சத்திக்கு சென்று விடுவான்  அந்நியன் காலை நக்கும் தமிழன்  சிந்திப்பான் என எண்ணுவோம் .

        உலகின் உயர்ந்த மருத்துவம்  புதையலாக  நம் மண்ணில் சிறப்புகளைக் கொட்டிக் கிடைக்கிறது . தமிழனோ   அறியாமையில் வீழ்ந்து கிடக்கறான்

                                   சிறந்த மருந்து  குங்கிலியம்  அறிவோம் .

      தமிழ  மருத்துவத்தில் மிகசிறந்த மா மருந்து குங்கிலியம் இது ஒருவகை மரத்தின் பிசின் இந்த மரத்துக்கு கருமருது என பெயர்  இந்தவகை மரங்கள்  நிறைய உண்டு  எனினும் வெள்ளை ,சிவப்பு என இரண்டு வகை மட்டுமே சிறப்புவாய்ந்த வையாக கருதப்படுகிறது பூனைக்கண்  குங்கிலியம்  என்ற ஒரு சாதியும் உண்டு.
இது ...
வேப்பமுண்டாக்குதல்
கொழயகற்றுதல்
 ஆகியவை குங்கிலியத்தின் சிறப்புகள் ஆகும்.
தந்திமேகம்
சீழ்விரணம்
எலும்பைப் பற்றிய விரணம்  ஆகியவற்றைப் போக்கும் குணம் இதற்க்கு உண்டு .
வெட்டையால் பிறந்த நாளப் புண்
கொப்பூழ் விரணம்
சீழ்மேகம்
உள்மூல விரணம்
ஆகியவற்றைப் போக்கும்
கருமை , செம்மை  எண்ணும் இருவித குங்கிலியத்தால் காது, உதடு நாசி முதலிய இடங்களில் உண்டாகும் நோய்கள் மேகப் புண்  கட்டிவாதவிருத்தி  சூலை , கிராணி , கானாவிடம் , கீல்பிடிப்பு  நீங்கும் .நகங்களைப் பற்றிய  இரணம்  நீங்கும்.


காததர நாசிநோய் கட்டிக்கடி  மேகப்புண்
வாதவித்தி ரஞ்ச்சூளை வந்குனகம் - ஒதியிலைத்
திக்கி லிருக்த்  திடமுள்ள  வேவுபயக்
குகளி ருக்கனமக்  குள்.      ( தேரையர்  குணபாடம்  )


குங்கிலியத்தை  முறைப்படி உண்டுவர  ஆண்மை பெருகும்  உடல்  குளிரும்..

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்.
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...