தமிழரின் உணவுமுறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என அடிக்கடி கூறுவதுண்டு . காரணம் எல்லா உணவுகளும் சிறப்பு வாய்ந்தவை மருத்துவக் குணம் நிறைந்தவை இப்போதெல்லாம் மூலிகை அதுசார்ந்தவற்றைப் பற்றி மிகையாக எழுதுகிறேன் . காரணம் மூலிகைகளின் மருத்துவப் பயனை முழுவதுமாக அறிந்து கொண்டால் தமிழர்கள் சற்று சிந்திப்பர்களே என்ற ஒரு ஆசையினால்தான் .
இந்த மருத்துவக் குணம் நிறைந்த மஞ்சளின் தனித் தன்மை தோல் சம்பந்தமான பிணிகளை நீக்குவது தான் ஆனால் இன்றைய இரசாயனம் கலக்கப் பட்ட மஞ்சளோ புற்று நோயைகூட உண்டாக்கும் என ஆய்வுகள் சொல்லுகிறது . இந்த மஞ்சள் செடி வகுப்பை சேர்ந்தது .கசப்பும், காரமும் இதன் சுவைகளாகும். வெப்பம் உண்டாக்குதல் இதன் தனிக்குணம் ஆகும்.மஞ்சள் உடலுக்கு வனப்பைத் தரும் உடலில் பூசி குளிக்க உடலில் வியர்வை நாற்றம் விலகும் .
பெண்களுக்கு தனியான கவர்ச்சியைக் கொடுக்கும்.
பசியை உண்டாகும்
கக்கல் (வாந்தி )
வாத ,பித்த , கப பிணிகளை நீக்கும்.
தலைவலி
நீரேற்றம்
நீரழிவு
வெள்ளை
பீனிசம்
வீக்கம்
வண்டுகடி நீங்கும் .
இரணங்களை குணமாக்கும் .
உடல் பொன் சாயலைப் பெரும் .
உடலில் மயிர் வளர்தலை கட்டுப் படுத்தும் .
தூளாக்கி புண்களின் மீது தூவ விரைந்து ஆறும்.
மஞ்சளை அரைத்துக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
இதை சுட்டு புகையை நுகர்ந்தால் நேரேற்றம் நீங்கும்.
இதை வேம்புடன் அரைத்து பூச அம்மை புண்கள் விரைந்து ஆறும்.
வயிற்றுப் பொருமல்
வயிற்று வலி மாறல் சுரம் நீங்கும் .
மஞ்சளை அரைத்து நீரிற் கலக்கி அதை வெள்ளை துணியில் நினைத்து காயவைத்து பயன் படுத்தினால் வாத நீர் சுருக்கு , ஒருவித தோல் நோய், தனிசுரம் ,விட சுரம் மலபந்தம் நீங்கும் .
தலைவலிநீ ரேற்றஞ் சளையாதமேகம்
உலைவுதறு பீனசித்தி னூடே - வலிசுரப்பு
விஞ்சு கடிவிடமும் வீருவிர ரணங்களும் போம்
மஞ்சட் கிழங்கிற்கு மால்.
இதிலும் கூட மர மஞ்சள் என தனியான மஞ்சள் உண்டு இது மர வகுப்பை சேர்ந்தது. மரத்தின் சக்கை மஞ்சள் நிறம் உடையது இவற்றான் இந்த பெயர் .இது கசப்பு சுவையுடையது .
வெப்பகற்றுதல் பசியைதூண்டுதல் உடலை உரமாக்குதல் இவை இதன் செய்கைகள் .இதை அரைத்து தலையில் பற்று இட்டால் வெப்பம் நீங்கும் . இரத்தம் கட்டிய வீக்கம் தோல் சிதைவு நீங்கும்.மூலநோய், முக்குணம் , கனசுரம், உட்சுரம் நீக்கும் குணம் இதற்க்கு உண்டு .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .
நல்ல பயனுள்ள தகவல்..பகிர்வுக்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிகவும் பயன் தரும் பகிர்வு...
பதிலளிநீக்குஆனால், மகிமை தெரியாமல் விற்று கொண்டே இருக்கிறோம் அயல்நாட்டிற்கு...
நல்ல தகவல்கள்.மஞ்சள் நீராட்டு விழாவிற்கும் மஞ்சளின் மருத்துவ தன்மைக்கும் தொடர்பு உண்டா....கஸ்தூரி மஞ்சள் எந்த வகை
பதிலளிநீக்குகுழந்தைகள் பற்றிய சித்த மருத்துவ குறிப்புகளை கூறினால் சிறப்பாக இருக்கும்
பதிலளிநீக்கு