டிசம்பர் 06, 2010

குடல்வால் அழற்சி


மனிதனின் சிறுகுடலும் , பெருங்குடலும் இணைகிற இடத்தில் இருக்கும் சிறிய வால் போன்றபகுதி (APPENDIX) எனப்படுகிறது .

நோய்க்குறிகள்
வயிற்றின் நடுபக்கத்தில் வலிதோன்றும். முறையே கிழ்நோக்கி நோய் நகரும் . வயிற்றில் ஒருவித சிக்கல் நீடிக்கும் செரியாமை , மலசிக்கல் , தோன்றலாம் காய்ச்சல் 100 -120 டிகிரியில் தொடரும் வயிற்றில் வலது பக்கம் இருகும் விதை விரைப்படையும் . இருமல் , தும்மல் நோவை அதிகமாகும் .

உளவாற்றல்
பொதுவாக நோய்கண்டவர் நல்ல உளவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் அளவிற்கதிகமான கவலைகளை வைத்துக்கொண்டால் மனிதனை நோய் அழித்துவிடும் . உளம் இறுகினால்,நோய் தீவிரம் அடையும் .திடமான உளவற்றலை வளர்க்கும் போது உடலின் செல்கள் புத்துயிர் பெற்று உடல் சீரடையும் .

அழற்சி அடைதல்

குறிப்பாக உடலின் ஒரு உறுப்புக்கு கடினமான பணி கொடுக்கும் போது அது கேடடைகிறது . தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் குடலை கழுவி உடலைவளர் என்கிறது . தேரையர் என்ற சித்தர்
மனிதன் நோயின்றி வாழும் நெறியை போதிக்கிறார் . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தோற்றம் கொண்ட நம் மருத்துவ முறை அறிவியலை உள்ளடக்கி அறிவியலை போதிக்கிறது .

மலசிக்கல் நோய்க்கு காரணி


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942 )
முன்பு உண்ட உணவு நன்கு செரித்த தன்மையை அறிந்து பின் முறைப்படி பசித்தபின் முறையான உணவை முறையான நேரத்தில் உண்ண வேண்டும் என போதிக்கிறது . இந்த முறையில் மாறுபாடு நேருகிறபோது நோய் தோற்றம் கொள்ளுகிறது . நன்கு செரித்து பசித்து சிக்கலின்றி மலம் வெளியேறினால் நோயில்லை . இதில் எங்கோ தடை ஏற்ப்படும் போது நோய் தோற்றம் கொள்ளுகிறது . முக்கி முக்கி கழிவை வெளியேற்ற முயற்சி நாளும் செய்யும் போது குடல் வால் அழற்சி உட்பட பல நோய்களுக்கு காரணமாகிறது .

தீர்வுகள்

௧. ஒய்வு தேவை
௨. பட்டினி பெருமருந்து என்பார்கள் இந்நோய்க்கு முதலில் பட்டினியே பெருமருந்தாகும் .
௩. குடல் பகுதிகளின் தூய்மையாக்கி கொள்ளவேண்டும் . இதற்க்கு எனிமா சிறந்தது .
௪. பின் வெறுமனே நீரைமட்டுமே உணவாக கொள்ள வேண்டும் .
௫. பின்னர் பழச்சாறுகளை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும் .
குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .
வெந்தயம் நினைய வைத்த நீரை அருந்தலாம் .
இக்காலத்தே மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
இவைகளை தேர்ந்த மருத்துவர் மேற்பார்வையில் செய்க
நோய் நீங்கி வெல்க .More than a Blog Aggregator

டிசம்பர் 02, 2010

பார்த்தீனியம் என்ற நச்சுசெடி






உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் மிகசிறந்த தட்ப வெப்ப சூழலை கொண்டது எனக் கண்டறிந்து உள்ளனர் .இங்கு வளரும் நிலத்திணைகள் (தாவரங்கள் ) மருத்துவ குணம் நிறைந்ததென கண்டிருக்கின்றனர் .சீனம்கூட நமக்கு அடுத்த இடம்தான் . இங்கு வளரும் மூலிகைகள் மருத்துவ குணம் நிறைந்தவை என ஆய்வு செய்து அறிவிக்கிறனர் . அனால் நம்மை பற்றி மேலைநாட்டினர் ஆய்வு செய்து சொன்ன பிறகு கூட நாம் மொழியையும் , மருத்துவத்தையும் , பிற கலைகளையும் பின்பற்ற தொடங்க மாட்டோம் எனது வேருசெய்தி .

நஞ்சுசெடிகள்

ஒருநாட்டை ஆள்கிறவர்களை விட ஆளப்படுகிரவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் இது தேவையும் அவசியமானதுமாகும் . இப்போது எங்குபார்த்தாலும் மனித இனத்திற்கோ , வேறு எதாவது
வுயிரிகளுக்கோ பயன்படாத தீங்கை மட்டுமே விளைவிக்க கூடிய நச்சு செடிகள் நிறைந்து காணப்படுகிறது . இதில் யார் குற்றவாளி ? வினா எழலாம் அதை புறந்தள்ளுவோம் தெரிந்து விட்டதல்லவா ? நாளையில் இருந்து நச்சு செடிகளை நீக்க முயற்சி செய்வோம் .

சுற்றுச் சூழல் கேடு

மனிதன் தன் தேவைகளுக்காக பேராசை கொண்டு வலிந்து பலவற்றை கைப்பற்றுகிறான் . அவற்றான் பல சுற்று சூழல் கேடுகளும் அரங்கேறுகிறது . காட்டை அழிக்கிறான் , இயற்க்கை வளங்களை கொள்ளையடிக்கிறான் , தூய காற்றை நாசப்படுத்துகிறான் ,நீரையும் கெடுக்கிறான்
பின்னர் மனித இனம் வாழ்வதே கேள்விக்குறியாகிறது .

நீரையும் உறிஞ்சுகிறது

நாம் வாழும் இந்த பேரண்டத்தை நாசப்படுத்த யாருக்கும் வுரிமையில்லை . அனால் நாசப்படுத்துகின்றனர்.அதுதான் உங்கள் பார்வைக்கு படம் பிடிக்கிறேன் தனிமனிதன் அழுது புலம்பி என்னபலன் . நீங்களும் இணைதல் காலத்தின் கட்டாயம் வாருங்கள் கைகோர்ப்போம் நம் புவியை காப்போம் .
இயற்கையான செடிகளும் மரங்களும் நமது கொடைகள் எனலாம் அனால் அவைகளே நமக்கு
பெருந்தீங்கிழைகுமா? ஆம் தீங்கிழைக்கிறது

தைலமரம் என்றழைக்கப்படும் யூகலிபட்ஸ்.

வேலிக்கத்தன் எனப்படும் மரம் வேலன் மரம்(பல்துலக்க பயன்படுத்துவது ) அல்ல .

சவுக்கு மரம்
இம் மரங்களெல்லாம் நம் மண்ணில் இருந்து நீரை வுறிஞ்சி நம் மண்ணை பழாக்குபவைகள் அவற்றால் எந்த பலனுமில்லை . அவற்றை வெட்டி வீழ்த்துவதே நல்லது .


விசமே செடியாய் பார்த்தீனியம் செடி

எல்லாவற்றையும் விட பார்த்தீனியம் என்ற விசசெடி நம் மண்ணில் நீக்க மற கானலாகிறது இந்த பார்த்தீனியம் செடி மண்வளத்தை கெடுக்கிறது . காற்றில் பரவி பல்கி பெருகுகிறது .சுற்று சூழலை கெடுக்கிறது . நிலத்தில் இருக்கிற ஈர பதத்தை உறிஞ்சி நிலத்தை மலடாக்குகிறது இது வளருமிடத்தில் வேறு எந்த செடியும் வளர்வதில்லை . எதற்கும் பயன்படாத நிலமாக்குகிறது . மனித இனத்திற்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது . குறிப்பாக தோல் நோய் வருகிறது . நம் உணவுப் பொருளில் கலப்படம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது .

உலகத்தீரே இந்த பார்த்தீனியம் என்ற நச்சு செடி நம் மனித இனத்திற்கே எதிரானது எப்பாடுபட்டேனும் இதை அழிப்போம்More than a Blog Aggregator

நவம்பர் 28, 2010

ஐம்பதிலும் ஆசைவரும்

ஐம்பதாவது இடுகை

இப்போதைய வாழ்வில் போராட்டங்களே நிறைந்துள்ளதால் வாழவேண்டிய அகவையில் வாழமுடியாமல் தவிக்கின்றனர் . மனிதன் பிறந்ததின் பொருளென்ன ? கேட்டால் விழிப்பார்கள் .
நம் வாழ்க்கை எதற்க்கு? நாம் என்னவாக இருக்கிறோம் . என்னவாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவில்லை

எது வழக்கை

இது குறித்து எமது விடியலை உடைப்போம் என்ற நூலில் பருண்மையாக எழுதியுள்ளோம் விரைவில் வெளிவரும் .
வழக்கை குறித்தான கற்பிதங்கள் மனிதனுக்கு மனிதன் மாற்றம் கொள்ளும் போலும் . அதுதான் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு கசக்கிறது. இருக்கும் வரை மகிழ்வோடு இருப்போம் என எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுகரத் தொடங்கி விடுகின்றனர் .இப்படி பட்ட எண்ணங் கொண்டவர் விரைவில் மூப்படைந்து மறித்து போகின்றனர் .இப்படி பட்ட
எண்ணம் பிழையானதே . நூறாண்டுநோய் இன்றி மனிதன் வழவியலும் .

ஐம்பதில் ஆசைவரும்

எமது மருத்துவ நடுவத்திற்கு ஐம்பதை கடந்த இளஞர்கள் வருகின்றனர் . சில பாலியல் குறைபாடுகளோடு ... அவைகள் எல்லாம் எளிதில் தீர்க்க கூடிய சிக்கல்களே அவைகள்
.குறி எழுச்சி இன்மைய
.விரைவில் விந்து வெளிஏறல்.
.முழுமையாக இன்பம் பெறஇயலாமை ...
இப்படி சிறிய குறைபாடுகள் எல்லாம் தீர்கக்கூடியவைகள் என நம்பிக்கையூட்டி வருகிறோம் .

நூறாண்டு வழக்கை ...

இந்த காலத்தில் நூறாண்டு வாழ்வதாவது... அதெல்லாம் இயலாத செயல் ,முப்பது அகவைலேயே மூப்படைந்துவிடுகின்றனரே, சர்க்கரைநோய் , இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் இதயநோய் ,மூட்டுவலி நோய்களின் படடியல் நீளுகிறதே என்பாருமுண்டு இந்தஎண்ணம் பிழையானது நூறாண்டு வழவியலும்

தளர்ச்சி நீங்குமா

உளம் செம்மையானால் எல்லாமே சரியாகும் . உளவியல் காரணங்கள்தான் மனிதனை ஆட்டிப்படைக்கிறது . இரண்டுபாலினரும் முறையாக உடலை பாதுகாத்து வந்தால் எல்லாமே இயலும் .
பெண்களைப் பொறுத்தவரை நாற்பது அகவைக்கு மேல்தான் அவர்களின் பாலுறவு நாட்டம் அதிகமாகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம் . இந்த வேட்கையை தீர்க்க வில்லை என்றால் போராட்டமாக வெடிக்கிறது என்பதும் உண்மையே .

வாழதொடங்குவோம்

எல்லா நோய் களுக்கும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது போல் பாலியல் குறைபாடுகளுக்கும் முழுமையான தீர்வு உண்டு . தீர்வு கண்டு விட்டால் ஐம்பதில் மட்டுமல்ல தொன்னுரிலும் முழுமையான இன்பம் கண்டு வாழ முடியுதனே ?
அடுத்து :

பிறப்பு உறுப்புகளை பாதுக்கக்கும் முறைகள்
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...