டிசம்பர் 02, 2010

பார்த்தீனியம் என்ற நச்சுசெடி


உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகம் மிகசிறந்த தட்ப வெப்ப சூழலை கொண்டது எனக் கண்டறிந்து உள்ளனர் .இங்கு வளரும் நிலத்திணைகள் (தாவரங்கள் ) மருத்துவ குணம் நிறைந்ததென கண்டிருக்கின்றனர் .சீனம்கூட நமக்கு அடுத்த இடம்தான் . இங்கு வளரும் மூலிகைகள் மருத்துவ குணம் நிறைந்தவை என ஆய்வு செய்து அறிவிக்கிறனர் . அனால் நம்மை பற்றி மேலைநாட்டினர் ஆய்வு செய்து சொன்ன பிறகு கூட நாம் மொழியையும் , மருத்துவத்தையும் , பிற கலைகளையும் பின்பற்ற தொடங்க மாட்டோம் எனது வேருசெய்தி .

நஞ்சுசெடிகள்

ஒருநாட்டை ஆள்கிறவர்களை விட ஆளப்படுகிரவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் இது தேவையும் அவசியமானதுமாகும் . இப்போது எங்குபார்த்தாலும் மனித இனத்திற்கோ , வேறு எதாவது
வுயிரிகளுக்கோ பயன்படாத தீங்கை மட்டுமே விளைவிக்க கூடிய நச்சு செடிகள் நிறைந்து காணப்படுகிறது . இதில் யார் குற்றவாளி ? வினா எழலாம் அதை புறந்தள்ளுவோம் தெரிந்து விட்டதல்லவா ? நாளையில் இருந்து நச்சு செடிகளை நீக்க முயற்சி செய்வோம் .

சுற்றுச் சூழல் கேடு

மனிதன் தன் தேவைகளுக்காக பேராசை கொண்டு வலிந்து பலவற்றை கைப்பற்றுகிறான் . அவற்றான் பல சுற்று சூழல் கேடுகளும் அரங்கேறுகிறது . காட்டை அழிக்கிறான் , இயற்க்கை வளங்களை கொள்ளையடிக்கிறான் , தூய காற்றை நாசப்படுத்துகிறான் ,நீரையும் கெடுக்கிறான்
பின்னர் மனித இனம் வாழ்வதே கேள்விக்குறியாகிறது .

நீரையும் உறிஞ்சுகிறது

நாம் வாழும் இந்த பேரண்டத்தை நாசப்படுத்த யாருக்கும் வுரிமையில்லை . அனால் நாசப்படுத்துகின்றனர்.அதுதான் உங்கள் பார்வைக்கு படம் பிடிக்கிறேன் தனிமனிதன் அழுது புலம்பி என்னபலன் . நீங்களும் இணைதல் காலத்தின் கட்டாயம் வாருங்கள் கைகோர்ப்போம் நம் புவியை காப்போம் .
இயற்கையான செடிகளும் மரங்களும் நமது கொடைகள் எனலாம் அனால் அவைகளே நமக்கு
பெருந்தீங்கிழைகுமா? ஆம் தீங்கிழைக்கிறது

தைலமரம் என்றழைக்கப்படும் யூகலிபட்ஸ்.

வேலிக்கத்தன் எனப்படும் மரம் வேலன் மரம்(பல்துலக்க பயன்படுத்துவது ) அல்ல .

சவுக்கு மரம்
இம் மரங்களெல்லாம் நம் மண்ணில் இருந்து நீரை வுறிஞ்சி நம் மண்ணை பழாக்குபவைகள் அவற்றால் எந்த பலனுமில்லை . அவற்றை வெட்டி வீழ்த்துவதே நல்லது .


விசமே செடியாய் பார்த்தீனியம் செடி

எல்லாவற்றையும் விட பார்த்தீனியம் என்ற விசசெடி நம் மண்ணில் நீக்க மற கானலாகிறது இந்த பார்த்தீனியம் செடி மண்வளத்தை கெடுக்கிறது . காற்றில் பரவி பல்கி பெருகுகிறது .சுற்று சூழலை கெடுக்கிறது . நிலத்தில் இருக்கிற ஈர பதத்தை உறிஞ்சி நிலத்தை மலடாக்குகிறது இது வளருமிடத்தில் வேறு எந்த செடியும் வளர்வதில்லை . எதற்கும் பயன்படாத நிலமாக்குகிறது . மனித இனத்திற்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது . குறிப்பாக தோல் நோய் வருகிறது . நம் உணவுப் பொருளில் கலப்படம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது .

உலகத்தீரே இந்த பார்த்தீனியம் என்ற நச்சு செடி நம் மனித இனத்திற்கே எதிரானது எப்பாடுபட்டேனும் இதை அழிப்போம்More than a Blog Aggregator

8 கருத்துகள்:

 1. விழிப்புணர்வு தரும் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. போளூர் தயாநிதிக்கு எங்கள் வந்தனங்கள்.. பயனுள்ள பதிவு தந்ததற்காக..

  பதிலளிநீக்கு
 3. please remove word verification..படிப்பவர்கள் பின்னூட்டம் இடாமல் போவதற்க்கு வாய்ப்புக்கள் உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள் தொடர்ந்து வருகைதாருங்கள் பிழை இருப்பின்
  சுட்டிகட்டுக திருத்திக் கொள்கிறேன் . நமது நோக்கம் தமிழர் அறிவு மரபு உலகெலாம் சென்றடைய வேண்டும் என்பதே . தொடர்ந்து வருகைதாருங்கள் கருத்துகளை பதிவு செய்க .

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள மருத்துவ தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா நண்பரே..

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...