நவம்பர் 14, 2010

சித்தமருத்துவக்கலை உலக நலன்


சித்தமருத்துவக்கலை உலக நலன்
இது ...
தமிழ் மண்ணின் கலை ...
சித்த மருத்துவக்கலை...
பழமையான கலை


இன்றைக்கும்
நிற்கும் கலை ...
அறிவியலில் உதித்த கலை ...
எல்லா நாட்டுக்கும்
ஏற்ற கலை.

இதை
நாம் பாராட்டுகளுக்காக
படைக்கவில்லை...
இது ...
வக்கலை மறுத்து

உலகோர் நோயின்றி வாழவே ...
எம்கனவை
சிறகாய் விரித்து ...
விண்ணில் பறக்கிறோம் ...


ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ...
நோய் வென்று வாழட்டும் .

பாரட்டுகளைவிட ...
குறைகளை உண்மையாக
பட்டியலிடுவதையே
விழைகிறோம் .

உண்மையாக ...
குறைகளை சுட்டிக்காட்டும்
போதுதான் ...
மனிதம் சொழுமையடைய முடியும்
என்பதை
அப்பட்டமாக நம்பித்தொலைக்கிறவன்.


காலம் கடந்துதும் ...
நிற்கும் ...
நம் சித்தமருத்துவம்
மருத்துவ மெய்மம் ...


அடுத்த தலைமுறைக்கும்
அதன் ஆற்றலோடு ...
கடத்தி ...
பதியமிட அழைக்கிறேன் ...


அறியாமையில் இருப்போர் ...
அறிவை ஏற்ப தில்லை ...

கேள்வி எழலாம் ...
வேள்விதான் இது ...


புரியும்படி சொன்னால்
புறக்கணிக்கவாசெய்வார்கள் ?


நாம் வெட்டியாகவா
பொழுதை கழிக்க
சொன்னோம் ...


விடியலைத்தேடி ...
ஏற்க்கதனே சொன்னோம் ...

நான் ...
வினையோ ...
வினையூக்கியோ ...
எதாகிலும் இருக்கட்டும் .
நம் மக்கள்
நோய் வென்று நீடு வாழட்டும் .



More than a Blog Aggregator

நவம்பர் 04, 2010

அந்த மூன்று நாட்கள் .


அந்த மூன்று நாட்கள் .
மாறிவரும்
சூழலில் நோய்கள் எளிமையாகிப் போனது . இந்த நோய்கள்
எல்லாமே இயல்பானவை என எண்ணம் கொண்டு நோயை சுமப்பதை இனிமையாக கருதுகின்றார்கள் போலும் . இன்று நல்ல மனிதர்கள் அருகிப்போனத்தால் கல்லிடம் முறையிடும் வழக்கம் அதிகரித்துப் போனது .
அறிவுத்துறையினர் தம் வழித்தடத்தை மாற்றிக்கொண்டு விட்ட படியால் பூசையடிகள் பூரித்துப் போகிறனர் .

முறை இல்லாத உணவுகள் பல நோய்களை உண்டக்குக்வது போலவே பெண்களின் தாய்மையின் சுமையும் கூட்டி பெண்மையை படாத படு படுத்துகிறது . பழங்காலங்களில் தாய்மையை வளர்க்க பெரிதும் உணவுமுறைகள் காரணமாக இருந்தது . அதனால் தான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றும் நூறாண்டு நலமேடு வாழ்ந்தனர் . இன்று அப்படி எல்லாம் இருக்கவில்லை . மிகவும் இளைய வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் படாத பாடுபடுவதனை தாய்கள் வேதனைப்பட்டு அதை தவிர்க்க முடியாது என்று குழந்தைகளை ஆற்றுப் படுத்துகின்றனர் .
அந்தமூன்று நாட்கள் சுமையானவைதனா ?

பழங்கால உணவுமுறை இரசாயன கலப்பில்லாத இயற்கையோடு இணைந்த உணவுமுறைகள் . இன்றைய பரப்பான வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத உணவு முறையினை கொண்டதாக இருக்கிறது . அளவிற்கதிகமான . மென் குடிநீர் , குளம்பி(காபி ) கோக் , கலந்த உணவுகள் அளவிற்கு அதிகமான கொழுப்பு உணவுகள் . உணர்வுகளை கிளர்ந்து எழச்செய்யும் படக்கசிகள் போன்றவை நோவை வளர்க்கிறது . இது பெண்களுக்கு தெரிவதில்லை கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு குடிநீர் குடிப்பதைபோல ஊசி போட்டு நோவை பெரிதாக்கு கின்றனர் .
குழந்தை களுக்கு இளமையிலேயே எலும்புகளை வளப்படுத்தும் உணவுகளை கொடுக்கவேண்டும் . எள், வெல்லம், உளுந்து , போன்றவை கொடுக்க வேண்டும் . வாரம் இரண்டுநாள் எண்ணெய்க் குளியல் . செய்யவேண்டும் .பரபரப்பையும் அமைதி இன்மையும் நீக்கிக் கொண்டு எரியோம்ம்பல் (ஆசனபயிற்சி ) செய்து உடலையும் மனதையும் அமைதியாக்கிக் கொள்ள வேண்டும் . முறையில்லாத உணவுகளை விட்டு ஒழித்து கீரைகள் , காய்கள் , பழங்கள் அதிகமாக எடுக்க வேண்டும் .
வீட்டு விலக்கு நாட்களில் கடுமையான வலி சோர்வு தலைவலி போன்றவை இருப்பின் இயற்கையான முறையான உணவுகளை எடுக்கவேண்டும் . கடுமையான வலி இருப்பின் முருங்கைகீரை சாறு 25மிலி சிறிது பெருங்காயம் போட்டு தேவையான அளவு உப்பு கலந்து குடிக்க வலி நிற்கும் . தொடர்ந்து வலி இருப்பவர்கள் வீட்டு விலக்கு வரும்மூன்று நாட்களுக்குமுன்பே நாளும் மேற்கண்ட மருந்தை அருந்த நல்ல பலனை காணலாம் ....
அடுத்து


முறையற்ற வீட்டு விலக்கு ....
அதிக இரத்தப்போக்கு .....
மேலும் வீட்டு விலக்கு சிக்கல்கள் ......
உங்களின் கேள்வி கணைகளோடு ....

தொடர்வோமா ......More than a Blog Aggregator

நவம்பர் 02, 2010

அச்சப்பட்டே சாவானேன்......
வரட்டுத்தனமான கோட்பாடுகளையும் குருட்டுத்தனமான சிந்தனைகளையும்
கொண்டிருப்பதையும் அதை மக்கள் மீது திணிப்பதையும் . விரும்பாதவன் நான் .
எதாவது ஒரு கருத்து பகிரப்பட்டால் அது இந்த மக்கள் கூட்டத்திற்கு நன்மையே செய்வதாக இருக்கவேண்டும் என எண்ணுபவன் நாம் .
நண்பர்கள் இருவர் பேசிக்கொள்வதை தற்செயலாக கேட்க நேர்ந்தது அது மருத்துவம் தொடர்பாக இருக்கவே நாம் காதுகளை தீட்டிக் கொண்டோம் .நண்பர்களில் ஒருவருக்கு சாதாரண கட்டி அதாவது கொழுப்புக் கட்டி என்று மருத்துவ உலகம் அதை அழைக்கும் அந்த கட்டி வந்த நண்பர் ஒருமருத்துவரிடம்
சென்று வுள்ளார் மருத்துவரோ அச்சப்பட தேவையில்லை என சிலமருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளார் .ஆங்கிலமருத்துவர்களில் உள்ள நேர்மையான மருத்துவர் போலும் எதாவது சிக்கல் இருந்தாலும் வளர்ச்சி இருந்தாலும் வர சொல்லி அனுப்பி வுள்ளார் . ஆனால் வீட்டிற்கு வந்ததும் தான் அவருக்கு சிக்கலே தொடங்கியது எனலாம் . வீட்டிற்கு வந்ததும் பக்கத்து வீடு ,எதிர்வீடு , தெரிந்தவர்கள் என அவரரவர்களுக்கு தோன்றியதெல்லாம் சொல்லி குழப்பியுள்ளனர் . இவரும்குழம்பித்தான் போனாராம் . அதைத்தான் நண்பர்களிடம் கதைத்துக்கொண்டிருகிறார் .
ஒரு அறிஞரிடம் மற்றொருவர் சொன்னாரம் ஐயா இவர் ஒரு செய்தியை மூன்று கோணத்தில் சிந்திப்பார் அவரிடம் பேசுங்கள் என்றதற்கு முதல் அறிஞர் சொன்னாரம் தேவையில்லை ஏன் என்றால் நான் குழப்ப வாதிகளிடம் பேசுவதில்லை என்றாராம் . எதற்க்கு இதை இங்கு சொல்கிறேன் என்றால் ஒரு செய்தியை இரண்டு கோணத்தில் சிந்திப்பது தான் சிறந்தது . ஒன்று நன்மை மற்றது தீமை தேவையில்லாமல் மூன்றாவது கோணத்தில் சிந்திப்பதால் மனிதன் குழப்ப வதியவன் என்பது உண்மையன்றோ ?
நண்பர்களில் ஒருவருக்கு கட்டிவந்தது ஒன்று . மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் இல்லைஎன்றால் அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டு போகவேண்டியதுதானே ? அதைவிட்டு தானும் குழம்ம்பி மற்றவர்களையும் குழப்பி என்ன அறியாமை அறுவை செய்து கொள்ள சொன்னாரம் ஒருமருத்துவர் அவருக்கு தமிழே தெரியாதாம். மருந்து தந்து அச்சப்படதேவை இல்லை என்ற தமிழ் பேசும் மருத்துவர் மீது நம்பிக்கை இல்லை காரணம் அவர் எளிமையானவர் அதே சமயம் நேர்மையானவர் . அதுதான் அறியாமையில் உள்ளவர்களுக்கு தெரியாதே .
எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது சித்தமருத்துவம் . முறையான மருந்து உண்டுவந்தால் எல்லா நோய்களையும் நீக்கிக் கொள்லாம். மருத்துவம் தொடர்பாக செல்லும் முன்பாக எந்த மருத்துவம் சிறந்தது எந்தமருத்துவர் சிறந்தவர் என்பதை எல்லா வகையிலும் பேசி சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமை எல்லாவற்றையும் ஆய்வு செய்க .
மற்றவர்களின் வீண் தலையீடு களை அனுமதிக்க வேண்டாம் . அதேபோல
மருந்தளுனரை மருத்துவராக ஆக்கும் பழக்கமும் காணப்படுகிறது .
எந்தநோயும் நோய் அல்ல நோய்களுக்கான தொடக்கம் . கண்டபடி தானே மருந்து வங்கி நோயை பெரிதாக்கிக் கொள்வதையும் தவிர்க்கலாம் . சாதாரண எந்த வலியும் இல்லாத வளர்ச்சியும் இல்லாத கட்டிகளை கண்டு அச்சப்படுவனேன் .
சித்த மருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...