தமிழரின்
உணவுமுறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என அடிக்கடி கூறுவதுண்டு .
காரணம் எல்லா உணவுகளும் சிறப்பு வாய்ந்தவை மருத்துவக் குணம் நிறைந்தவை
இப்போதெல்லாம் மூலிகை அதுசார்ந்தவற்றைப் பற்றி மிகையாக எழுதுகிறேன் .
காரணம் மூலிகைகளின் மருத்துவப் பயனை முழுவதுமாக அறிந்து கொண்டால்
தமிழர்கள் சற்று சிந்திப்பர்களே என்ற ஒரு ஆசையினால்தான் .
இந்த மருத்துவக் குணம் நிறைந்த மஞ்சளின் தனித் தன்மை தோல்
சம்பந்தமான பிணிகளை நீக்குவது தான் ஆனால் இன்றைய இரசாயனம் கலக்கப்
பட்ட மஞ்சளோ புற்று நோயைகூட உண்டாக்கும் என ஆய்வுகள் சொல்லுகிறது .
இந்த மஞ்சள் செடி வகுப்பை சேர்ந்தது .கசப்பும், காரமும் இதன் சுவைகளாகும்.
வெப்பம் உண்டாக்குதல் இதன் தனிக்குணம் ஆகும்.மஞ்சள் உடலுக்கு வனப்பைத்
தரும் உடலில் பூசி குளிக்க உடலில் வியர்வை நாற்றம் விலகும் .

பெண்களுக்கு தனியான கவர்ச்சியைக் கொடுக்கும்.
பசியை உண்டாகும்
கக்கல் (வாந்தி )
வாத ,பித்த , கப பிணிகளை நீக்கும்.
தலைவலி
நீரேற்றம்
நீரழிவு
வெள்ளை
பீனிசம்
வீக்கம்
வண்டுகடி நீங்கும் .
இரணங்களை குணமாக்கும் .
உடல் பொன் சாயலைப் பெரும் .
உடலில் மயிர் வளர்தலை கட்டுப் படுத்தும் .
தூளாக்கி புண்களின் மீது தூவ விரைந்து ஆறும்.
மஞ்சளை அரைத்துக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
இதை சுட்டு புகையை நுகர்ந்தால் நேரேற்றம் நீங்கும்.
இதை வேம்புடன் அரைத்து பூச அம்மை புண்கள் விரைந்து ஆறும்.
வயிற்றுப் பொருமல்
வயிற்று வலி மாறல் சுரம் நீங்கும் .
மஞ்சளை
அரைத்து நீரிற் கலக்கி அதை வெள்ளை துணியில் நினைத்து காயவைத்து பயன்
படுத்தினால் வாத நீர் சுருக்கு , ஒருவித தோல் நோய், தனிசுரம் ,விட சுரம்
மலபந்தம் நீங்கும் .
தலைவலிநீ ரேற்றஞ் சளையாதமேகம்
உலைவுதறு பீனசித்தி னூடே - வலிசுரப்பு
விஞ்சு கடிவிடமும் வீருவிர ரணங்களும் போம்
மஞ்சட் கிழங்கிற்கு மால்.
இதிலும் கூட மர மஞ்சள் என தனியான மஞ்சள் உண்டு இது மர வகுப்பை
சேர்ந்தது. மரத்தின் சக்கை மஞ்சள் நிறம் உடையது இவற்றான் இந்த பெயர் .இது
கசப்பு சுவையுடையது .
வெப்பகற்றுதல் பசியைதூண்டுதல் உடலை உரமாக்குதல் இவை இதன் செய்கைகள் .இதை
அரைத்து தலையில் பற்று இட்டால் வெப்பம் நீங்கும் . இரத்தம் கட்டிய
வீக்கம் தோல் சிதைவு நீங்கும்.மூலநோய், முக்குணம் , கனசுரம், உட்சுரம்
நீக்கும் குணம் இதற்க்கு உண்டு .
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .

வள்ளுவன் என்ற பெயரினால் ஆன பதிவர் இப்படி கூறுகிறார் .
உலகிற்கே அறிவியலையும் நாகரீகத்தையும் வழங்கிய தமிழ சமூகம் இன்று
நோயாளியகிக் கொண்டு இருப்பதைப் பார்த்தால் வயிறு பற்றி எரிகிறது
அதற்கும் ஒரு மருந்து சொல்லுங்கள் என கேட்டு இருந்தார் .
உண்மைதான் நண்பரே உங்களின் பெயரே உங்களைக் காட்டிவிடுகிறது
சிறந்த தழிர்களின் ஆசானின் பெயரைத் தாங்கி இருக்கிறீர்கள் பாராட்டுகள்.
உண்மையில் தமிழரின் நோய்க்கு அடிப்படைக் காரணம் தமிழனை தமிழனே
மதிப்பதில்லை . தமிழ கலைகளை போற்றி பாதுகாப்பதில்லை. தமிழ கலைகளை
செய்கிறவர்களை ஆதரிப்பதில்லை இதனால் தமிழன் நோயாளியாகிப் போனான்
போய்கொண்டு இருக்கிறான் .இது வள்ளுவர் காலத்திலேயே தொடங்கி விட்டது தான்
என்றாலும் இப்போது தமிழன் நிலை மரணத்தின் பிடியில்... இப்போதாகிலும்
விழித்தால் நலம் பெறலாம் . ஒன்றுமில்லை .... தமிழ கலைகளையும் தமிழையும்
தமிழ அறிஞ்சர் களையும் காப்பது போற்றுவது பாதுகாப்பது .... தமிழன்
ஓரணியில் திரளுவது ... தமிழன் உலகெங்கும் தாக்கப் பட்டால் குரல்
கொடுப்பது... என சூடு சொரணை பெற்றுவிட்டாலே தமிழன் உலகின் உச்சத்திக்கு
சென்று விடுவான் அந்நியன் காலை நக்கும் தமிழன் சிந்திப்பான் என எண்ணுவோம் .
உலகின் உயர்ந்த மருத்துவம் புதையலாக நம் மண்ணில் சிறப்புகளைக்
கொட்டிக் கிடைக்கிறது . தமிழனோ அறியாமையில் வீழ்ந்து கிடக்கறான்
சிறந்த மருந்து குங்கிலியம் அறிவோம் .
தமிழ மருத்துவத்தில் மிகசிறந்த மா மருந்து குங்கிலியம் இது ஒருவகை
மரத்தின் பிசின் இந்த மரத்துக்கு கருமருது என பெயர் இந்தவகை மரங்கள்
நிறைய உண்டு எனினும் வெள்ளை ,சிவப்பு என இரண்டு வகை மட்டுமே
சிறப்புவாய்ந்த வையாக கருதப்படுகிறது பூனைக்கண் குங்கிலியம் என்ற ஒரு
சாதியும் உண்டு.
இது ...
வேப்பமுண்டாக்குதல்
கொழயகற்றுதல்
ஆகியவை குங்கிலியத்தின் சிறப்புகள் ஆகும்.
தந்திமேகம்
சீழ்விரணம்
எலும்பைப் பற்றிய விரணம் ஆகியவற்றைப் போக்கும் குணம் இதற்க்கு உண்டு .
வெட்டையால் பிறந்த நாளப் புண்
கொப்பூழ் விரணம்
சீழ்மேகம்
உள்மூல விரணம்
ஆகியவற்றைப் போக்கும்
கருமை , செம்மை எண்ணும் இருவித குங்கிலியத்தால் காது, உதடு நாசி முதலிய
இடங்களில் உண்டாகும் நோய்கள் மேகப் புண் கட்டிவாதவிருத்தி சூலை , கிராணி ,
கானாவிடம் , கீல்பிடிப்பு நீங்கும் .நகங்களைப் பற்றிய இரணம் நீங்கும்.
காததர நாசிநோய் கட்டிக்கடி மேகப்புண்
வாதவித்தி ரஞ்ச்சூளை வந்குனகம் - ஒதியிலைத்
திக்கி லிருக்த் திடமுள்ள வேவுபயக்
குகளி ருக்கனமக் குள். ( தேரையர் குணபாடம் )
குங்கிலியத்தை முறைப்படி உண்டுவர ஆண்மை பெருகும் உடல் குளிரும்..
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்.

இன்றைய
சூழலில் எல்லோருக்கும் எதை உண்ணுவது எப்படி உண்ணுவது என்பது
தெரிவதில்லை என்பதாக கடந்த பதவில் எழுதியிருந்தேன் . உண்மைதான் உண்ணத்
தெரிந்தவனுக்கு நோயில்லை என்பார்கள் . இப்போது நோயும் இன்னதென்று
தெரிவதில்லை எப்படி உண்பதேனவும் அறிவ தில்லை ஆகையால் காலம் முழுவதும்
நோயாளியாகவே கிடந்துவிடுவது சிலருக்கு பழகிவிட்டது .
நாம் கூட எல்லா உணவுகளையும் பட்டியலிட்டு இதை எல்லாம்
உண்ணலாம் எதெல்லாம் உண்ணக் கூடாது என அழகாக பட்டியலிடலாம் என
எண்ணினேன் இன்றைய உணவுகளின் பட்டியல் விண்ணை முட்டும் அளவிற்கு
உயர்ந்து உள்ளமையால் என்னால் பட்டியல் இடமுடியவில்லை. வாய்க்கு சுவையும்
வயிறு நிரம்பினால் போதும் என்ற உள வாற்றளுக்கு இன்றைய மனித விலங்குகள்
தள்ளப்பட்டு விட்டன .ஆனால் விலங்குகள் என மனிதனால் வருணிக்கப் படும் எந்த
விலங்கும் சுற்று சூழலை கெடுப்பதில்லை நோய்வந்த பின்னர் மனிதன் மாதிரி
தீனியை வலுக்கட்டாயமாக திணிப்பதுமில்லை. உடலில் கேடு நிகழ்ந்து விட்டால்
உணவை நிறுத்துவது விலங்குகளின் முதன்மையான பணியாக இருக்கிறது . ஆனால்
மனிதன் தீனிப் பையை வலுக்கட்டாயமாக நிரப்பி நோயை வலிந்து அழைக்கிறான்
நோய் உள்ளநிலையில் உணவை தவிருங்கள் என சொன்னால் வேற்று கிரக மனிதனை
பார்ப்பது மாதிரி நம்மை பார்க்கிறார்கள் . பெருந்தீனி நோயை உண்டாக்கும் .
இதைத்தான் வள்ளுவர் கழி பேரிரையான் கண் நோய் என்கிறார் .நாம்ம
வர்கள்தான் நல்லதை கேட்பதில்லையே ?
இங்குள்ள சில கொள்ளை (இந்த கணினிவேறு கொள்கை என அடித்தால்
கொள்ளை என வருகிறது ) கொலை செய்யும் கூட்டத்தார் என்ன புரியவில்லையா?
அதுதாங்க அரசியல் பிழைப்பளிகள் எடுத்ததுக்கு எல்லாம் காந்தி
...காந்தி... என்பர்கள் இதைத்தான் இந்த உலகத்திற்கு தமிழ் தேசிய தலைவர்
சொல்லவேண்டும் என திலீபனை காவு கொடுத்தார் தலைவருக்கும் தெரியும்
தீலீபன் மரித்துப் போவார் என இருந்தும் அமைதி வழியிலும் நாங்கள்
முயன்று பார்த்துவிட்டோம் என்பதை பதிவு செய்தார் . எந்த உண்மையை உலக
கொலைகாரர்கள் ஏற்றுக்கொன்றர்கள் . கொன்றுதான் அழித்து விட்டார்களே ? இதை
ஏன் சொன்னேன் என்றால் ஏறத்தாழ பதின்மூன்று நாள்கள உணவின்றி
நீரைக்கூட அருந்தாமல் திலீபன் உயிர்வாழ்ந்தார் . வெறும் நீரை மட்டுமே
அருந்தி வாழ்நாள் முழுவதும் கழிக்கயியலும் தெரிந்து கொள்ளத்தான்
சொன்னேன் .
கடினமான நோயுள்ள நிலையில் உணவை மறுப்பது நோயில் இருந்து
தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்ள முடியும் அல்லது நோய் என்னது என
கண்டறிந்து குறிப்பிட்ட அந்த நோய்க்கு பகையான அதாவது பொருந்தாத உணவை
மறுத்தல் மனிதன் செய்கிற நல்ல செயல் .இப்போது மனிதன் தான் நோயாளியாக
அல்லாவா இருக்கிறான் .பாவம் அவர்களுக்கத்தான் இதை படித்துக் கொண்டு
இருக்கும் உங்களுக்கு இல்லவே இல்லை .
இனிப்பு ;மண் ,நீர் இணைத்து தோன்றும்
புளிப்பு ;மண் ,தீ இணைத்து தோன்றும்
உப்பு ;நீர் ,தீ இணைத்து தோன்றும்
கசப்பு ;காற்று, விண் இணைத்து தோன்றும்
கார்ப்பு ;தீ . காற்று இணைத்து தோன்றும்
துவர்ப்பு ; மண் , காற்று இணைத்து தோன்றும்
காரம், கசப்பு ,துவர்ப்பு மிகையாக கொள்ள வளிக்(வாத )குற்றம் மிகையாகும் .
உப்பு ,புளிப்பு, காரம் மிகையாக கொள்ள பித்தம் மிகையாகும்
இனிப்பு ,புளிப்பு , உப்பு மிகையாக கொள்ள ஐ (கபம் மிகுதியாகும் )
சீதள வீரிய உணவுகள் வாயுவையும் கபம் போன்றதையும் மிகையாக்கும் .இது
பித்தத்தை குறைக்கும். கப வகை உணவுகள் வாயுவைக் குறைக்கும் சூடான
வீரிய உணவுகள் பித்தத்தை மிகையாக்கும் . இந்த மிகப் பெரிய அறிவியலும்
கண்டவர்கள் நமது பழந்தமிழ அறிவர்கள் (சித்தர்கள் ) அவர்களின் கால்
வழிவந்த சித்த மருத்துவத்தை பொன்னேபோல் காப்போம் பின்பற்றுவோம்