அண்மையில் கலப்பட உப்பு தடைச் சட்டத்தை நடுவணரசு முன்வைதத்தாம்(
நீண்ட நாளாகவே வந்து விட்டது) இது யாரை பாதுகாக்க அல்லது யாரை
அழிக்க என நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் .
முன்பு எல்லாம் எதாவது ஒரு பொருளில் கலப்படம் செய்தால்தான்
தவறு என அரசு குறைகூறும் . இன்று கலப்படம் செய்யவிட்டாலே கம்பி என்ன
வேண்டி இருக்கும் இது எங்கோ வெளிநாட்டில் இல்லை இந்தியாவில்தான் .
அதும் தமிழன் என்றால் அவன் ஒரு மனிதனே இல்லை ஒரு மலையாளியோ அல்லது
சீக்கியனோ சின்ன எறும்பு கடிபட்டு விட்டால் கூட திருவாளர் பரிசுத்தம்
ஓடோடி வருவர் அனால் தமிழன் .... அவன் கிடக்கிறான் விடுங்கள் ... என
.... தூங்க தொடக்கி விடுவார் .
உப்பு இயற்க்கை அன்னையின் செல்லப் பிள்ளையான ஆதவனின்
பார்வைப் பட்டு கடல் நீரே உப்பகிவிடுகிறது . இந்த உப்பை அப்படியே
விற்றால் கலப்படமாம் . கூடவே கொஞ்சம் அயோடினை கலந்து விட்டால் அது
நல்ல உப்பு ? இது சரியா என யாரவது கேட்டீர்காளா இல்லைதானே கொஞ்சம்
உங்களின் இரத்தத்தை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் கப்படமான
இரத்தம் எதையும் சிந்திக்காது ...
அயோடின் சத்து குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தை மந்தத்தன்மை
கொண்டு இருக்கும் என இன்றைய மருத்துவம் கூறுகிறது . இது
பத்தாயிரத்தில் ஒன்று என்ற விகிதத்தில்தான் அதுமட்டும் அல்ல இந்த
அயோடின் குறைபாடு மலைப் பிரதேசங்களில் தான் இந்த மிகையாக
இருக்கும். இதை தடுக்க கருவுற்று இருக்கும் பெண்களுக்குஅயோடின் கொடுக்க
வேண்டும் .
இதை விட்டுவிட்டு குறைபாடு இல்லாத வர்கள் எல்லோரும்
அயோடின் கலந்த உப்பை தின்று நோயை பெற்றுக் கொளுங்கள் என கூறுவது
அறிவுடைமையா ? என கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? அது சரி இந்த அயோடின்
உப்பை தின்று தான் தொலைப்போமே இதை ஏன் வேண்டாம் என கூறுகின்றார்கள்
என நீங்கள் கேட்பது புரிகிறது இந்த அயோடின் கலந்த உப்பை தின்று தீர்ப்பதால் பல்வேறு நோய்கள் நம்மை தாககுகிறதாம். அதை தெரிந்துகொள்ள நீங்கள் இந்த
கட்டுரையை முழுமையாக படிக்க வேண்டும் . நமது இடுகையை எப்போதுமே
முழுமையாக படித்தால்தான் என்ன நோக்கத்திற்காக எழுதப் படுகிறதோ அது
முழுமையாக புரியும்.. படிக்கின்றீர்களா...?
இந்த அயோடின் கலந்த உப்பைத் தின்பதால் கழுத்து வீங்கித்
தொங்குதல், சிறிது நடந்தாலும் மூச்சு வாங்குதல் எடைக்குறைவு , பசி இன்மை
, கை , கால் , நடுக்கம் என பல நோய்கள் தாக்கி இருக்கிறதுஎன தமிழ நாடு அரசு பொது
மருத்துவ மனை நாளமில்லா சுரப்பிகளின் பிரிவின் தலைவர் கூறுகிறார் .மேலும்
எவ்வளவு . எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது ... 80 கிலோ
இருந்தவர்கள் கூட நாற்பது நாற்பத்தைந்து கிலோவிற்கு வந்து விடுவார்கள்
என இதே போல பெண்களும் இளம் அகவையில் இருந்து அறுபது அகவை வரை
கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு கைகள் நடுங்கி , உடல் மெலிந்து
கண்கள் வெளியே தள்ளி பெரிய நோவில் வீழ்ந்து கிடப்பதை சான்று களுடன்
கூறுகிறார் .
தைராய்டு என்பது நம் கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு
நாமில்லா சுரப்பி இது தைராக்சின் டி3 ,டி 4 என்ற ஹார்மோனை சுரக்க
செய்கிறது .இது அளவோடு சுரக்க வேண்டும் . எந்த அளவிற்கு சுரக்க வேண்டும்
என மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் தைராய்டு ஸ்டி முலேட்டிங் ஹர்மன்
கட்டுப் படுத்து கிறது தைரசின் குறைபாடு இருந்தால் அதாவது குறைவாக
சுரந்தால் அது ஹைபோ தைரடிசம் இதன் பதிப்பால் குழந்தை மூளை வளர்ச்சி
குறைந்து காணப்படும். இந்த குறைபாடு தமிழகத்தை ப்ருத்தவரை மிகவும் குறைந்த
அளவிலேயே காணப்படுகிறது . எங்கு குறைந்து காணப்படுகிறதோ அங்கு கண்டு
இந்த அயோடினை கொடுக்கலாம்.
ஒரு மனிதனுக்கு அயோடினின் தேவை மிகவும் குறைவு அதாவது
எழுபது அகவை நிரம்பிய ஒருவர் அவர் வாழ்நாளில் ஒரு தேக்கரண்டி அளவு
தான் . ஆனால் இதை நாளும் எடுத்துக் கொள்வாதல் எதிர்கால குழந்தைகள் முதல்
எல்லோருக்கும் ஜீவனில் ஆட்டோ இம்யூன் தைராய்டைஸ் என்ற நோய் தாக்க
வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அரசு பொது மருத்துவர் . அளவுக்கு
மிகையான அயோடின் மனிதனின் தைராய்டு சுரப்பியை சிதைக்கும் சிதைவுற்ற
அந்த செல்கள் இரத்தத்தில் கலந்து விடுகிறது. உடனே நம் உடலில் உள்ள நோய்
எதிர்ப்பு சக்தியானது தைராய்டு செல்லுக்கு எதிர்ப்பான நோய் எதிர்ப்பு
பொருளை (அன்டிபாடிஸ் ) உற்பத்தி செய்து விடுகிறது அந்த நோய் எதிர்ப்பு
பொருளானது கொஞ்சம் கொஞ்சமாக தைரய்டை அழித்துவிடும் . முழுவதும் அழிந்து
விட்டால் வாழ்நாள் முழுவதும் தைரக்சின் ஹார்மொனுக்காக மருந்து எடுக்க
வேண்டும் . நோய் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சைதான் தீர்வாம் ...
தேவையா முறைய இயற்கையாக கிடைக்கும் உப்பை தின்பதை விட்டுவிட்டு டாட்டா
வையும் அம்பானிகளையும் வாழ வைத்து தமிழன் நோயாளியாக வேண்டுமா ?
சிந்திப்பாயா தமிழனே ?.......
சூடு சுரணை உள்ளவன் போராடி பெறுகிறான் இல்லாதவன் நோயில் வேழ வேண்டியதுதானே ?
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்

தமிழர்
உணவில் மாங்கனி முதலிடத்தில் இருப்பதுநமக்கு தெரியும். அதாவது
மா,பலா,வாழை , என முக்கனிகளை இணைத்து உணவு வழங்குவார்கள் . இந்த மாங்கனி
இன்று நச்சாகி மரணத்தையும் புற்று நோயையும் தரும் என எத்தனைபேர்
அறிவார்கள்? ஆம் இந்த முதன்மையான கனி இன்று நோயை பரப்பிக் கொண்டு
இருக்கிறது எப்படி? இன்றைய விரைவு உலகம் எதையும் பொறுமையாக
அணுகுவதில்லை விரைவு அதாவது இன்றய முதலீடு நாளை கொள்ளை இலாபம் என
வந்துவிட்ட தனியுடமை காலம். எனவே விரைந்து பழங்களை பழுக்க வைத்து
காசாக்க நினைக்கிறது . நாம் ஏன் நோயாளியாக வேண்டும் எத்தனைபேர்இதை
சிந்திப்பார்கள்?
மனிதன் சிந்திக்கும் திறன் பெறவேண்டும் என்பதே நமது அவா.
இயற்கையாக காய்த்த மாங்காய்களை நீண்டகம்புகளைக் கொண்டு வலையமைத்து
பறித்து பயன் படுத்த வேண்டும். பயன் படுத்தி இந்த மாங்காய்களை இயற்கையாக
பழுக்க வைக்க குறைந்தது ஐந்து , அலது ஆறு நாட்கள் ஆகும் ஆனால் இன்றைய
விரைவு உலகம் சில இதளியங்களை(இரசாயணம் ) கொண்டு பழுக்க வைக்கப்
படுகிறது எப்படி?
முன்பெல்லாம் பழங்களை இயற்கையாக ... இயற்கைன முறைகளை
கொண்டு பழுக்க வைத்தனர் .முற்றிய காய்களை வைக்கோலைப் பயன் படுத்தி
பழுக்க வைத்தனர் . அல்லது மண் பானை கொண்டு பழுக்க வைத்தனர். இந்த
பழங்கள் மிகையான கவர்ச்சி இல்லாமல் மிகுந்த சுவையுடன் இருந்தது அது
ஒரு காலம் இப்போது அதை எதிர்ப்பார்க்க இயலாது .
விரைந்து மாங்காய்கள் பழுக்க கால்சியம் கார்பைடு இரசாயன
கட்டிகளைக் கொண்டு பழுக்க வைக்கின்றனர். இந்த பழங்களை உண்பதால் வயிற்று
கோளாறுகள், பல்வேறு உடல் நலக் கேடுகள் உண்டாகிறது. இந்தவகையில் பழுக்க
வைக்கப் பட்ட பழங்கள் சுவையும் மனமும் இருப்பதில்லை . இயற்கைத்தனமையோடு
இருப்பதில்லை அதாவது இன்றைய இளசுகளைப் போலவே வெறும் கவர்ச்சியை
மட்டுமே கண்டு காமுருவதுபோல பலர் கவர்ச்சியை மட்டுமே கண்டு பொருளை
வாங்கி மடிந்து போகின்றனர் . கவர்சிக்குள்ளும் மிகப் பெரிய கேடுகள்
மறைந்து உள்ளதை எத்தனைபேர் அறிவார் ?
இந்த பழங்களில் பாஸ்பரஸ் ஹைட்ரைடு, மற்றும் ஆர்கானிக் இரசாயணம்
போன்றவை பழத்தில் சேர்ந்து விடுகிறது இது உடலுக்கு கழிச்சல் , கக்கல்(
வாந்தி ) வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் , வயிற்று எரிச்சல் , மிகையான
தாகம், பலவீனம் மறந்து போகுதல், பேச்சுக் குறைபாடு, ஆகியவை உண்டாகிறது.
இந்த கலவை அதாவது இந்த பழங்கள் புற்று நோயை உண்டாக்க வல்லன . இந்த
பழங்களை உண்ணுவதால் உடல் சீர்கேடு அடைகிறது. உடலில் உள்ள கோடானுகோடி
செல்கள் மரித்துப் போகிறது பலவேறு மாற்றங்களை சந்திக்கிறது, தேவையா ?
எப்போது சிந்திப்போம்?
இந்த வகைப் பழங்களை எப்படி அடையாளம் காணுவது இதுதானே உங்களின் வினா?
பழம்
முழுவதும் ஒரேமாதிரியாக மஞ்சளாக இருக்கும் பழத்தில் கரும் புள்ளிகள்
இருக்கும் .பழத்தின் உள்ளே பழத்திற்கு உரிய மனமும் சுவையும் இல்லாமல்
வெண்மையாக இருக்கும். பழம் மிருதுவாக இருக்கும் . சுவை குறைந்து
இருக்கும் . சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன் நீங்கள் மாம்பழம் வாங்க
போகின்றீர் களா?
நமது தமிழ் சூழல் என்பது பல்வேறு மாறுபட்ட பருவ நிலைகளைக் கொண்டது . எதற்கும் கட்டுபடாத ஒரு சிறந்த சூழல்.இந்த சூழல்தான் வியக்கத்தக்க அளவிற்கு உலகின் முதன்மையான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கிறது என பல்வேறு மேலை நாடுகள் தெரிவிக்கின்றன. அதோடு மட்டும் அல்லாமல் இங்கு இருந்து பலவேறு மூலிகைகளை தருவித்து பயன்படுத்திக் கொள்ளுகிறது . ஆனால் தமிழர்கள்தான் பாவம் இன்னும் படித்தவர்கலனாலும் பாமரரர்கள் ஆனாலும் அந்த ஆங்கில மருத்துவத்தை விட்டு விலக மாட்டேன் என அடம் பிடித்து மடிந்து போகின்றனர்.
மேலை நாடுகளில் முதலில் மருத்துவர்கள் இயற்க்கை மருத்துவத்திற்க்கே முன்னுரிமை கொடுக்கிறனர் . வலிந்து அனுப்பிவைக்கப் படுகிறனர் . ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் கவலை கொள்ளுவதில்லை என்ற நிலைபாட்டை தமிழர்கள் எடுத்து விட்டார்கள். எதற்கும் மேலைநாட்டு மோகத்தில் அடிமைத்தனத்தோடு சுற்றித்திரியும் நபர்களும் உண்டு. உலகினுக்கே அறிவியலை கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள் என்பது தெரியாது இவர்களுக்கு.
இந்த கொடுமையான வெம்மை தமிழகத்திற்க்கே உரியது. இந்த கோடையை சற்று மென்மையாக அணுக வேண்டும். எல்லா காலங்களிலும் நன்மையும் தீமையும் உண்டு. கோடையின் வெம்மைத்தான் எல்லோருக்கும் கொடுமையாக தெரிகிறது, உடலில் உள்ள கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது ,சிறுநீரகங்களுக்கு கடுமையான பணியை அளிக்காமல் உடலில் உள்ள தோள்களின் வழி வியர்வை நாளங்கள் நன்கு செயல் பட்டு தோலின் வழி அழுக்குகளை நீக்குகிறது. சிறுநீரகம் சற்று ஒய்வு கொள்ளுகிறது எனலாம். உடலில் உறைந்து கிடக்கும் ஐ (கபம் ) கதிரவனின் ஆளுகையால் உறைந்து வெளியேறுகிறது. இந்த ஐ குற்ற நோய் கண்டவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறனர் . இந்த நேரத்தில் உணவுமுறையும் நடவடிக்கை களும் முறைப்படி அமைந்து இருந்தால் பின்னாலில் நோயில் இருந்து விலகி இருக்க இயலும் .
அனைவருமே கோடைகாலத்தில் வெண்மை பருத்தி ஆடையை பயன்படுத்தலாம் .
மதுப் பழக்கம் உள்ளவர்கள் இந்த கொடுமையான வெம்மையை கருத்தில் கொண்டாவது அதை தவிர்க்கலாம். காரணம் இந்த கால மதுப் பழக்கம் சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கும் . எனவே கண்டிப்பாக மதுப் பிரியர்கள் மதுவில் இருந்து விலகி இருக்கலாம்.
கோடையில் மிகையாக வெய்யலில் சுற்றித்திரியாமல் அதன் தாக்குதல் குறைந்த போது பணி முடிக்கலாம்.
கண்ட கடைகளில் கவர்சிகரமாக, வண்ண வண்ணமாக விற்கப் படும் குடிநீரை பயன் படுத்தாமல் இயற்கையான இளநீர் , முலாம் பழம் , தர்பூசணி, போன்றவற்றை பயன்படுத்தலாம்.
இரவில் உள்ளங் காலுக்கு விளக்கெண்ணை தடவி விடலாம். கண்ணையும் பாதுகாக்கும் உடலையும் குளிர்விக்கும் . தலையிலும் விளக்கெண்ணெய் தடவி நீராடலாம். குளிக்க குளிர்ந்த நீர் சிறப்பானது.
வாரம் இரண்டு நாள் எண்ணைக்குளியல் சிறந்தது.
உடலுக்கு வழலைக் கட்டி (சோப்பு ) போட்டு குளிப்பதை தவிர்க்கலாம்.
வெட்டிவேர் , சந்தனம், ஆவாரை,கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு , கார்போக அரிசி , போன்றவற்றை பயன் படுத்தலாம் .
இளநீரில் பனங் கற்கண்டு கலந்து அருந்தலாம் .
சித்த மருத்துவங்காப்போம் நோய் வெல்வோம்