செப்டம்பர் 25, 2010

கொசுவிரட்டி ஒரு எச்சரிக்கை

                         இப்போது  எல்லாம்  கொசுவை  விரட்டுவதற்கு  என்றே  பலநிறுவனங்கள்  பலவகையில்   கொசுவர்த்திகளை  உற்பத்தி  செய்கிறது . இவைகள்  உடல்நலனிற்கு  கேடானது  என்பது  பலருக்கு  தெரிவதில்லை  இதனால்  பலநோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது . கொசுவர்த்திகளிலும் , மேட் களிலும் பலவகையில்  விற்ப்பனைக்கு வருகிறது . இவற்றில் எல்லாம் இரசாயனங்கள்  கலக்கப்பட்டே உற்பத்தி  செய்யப்படுகிறது .இந்த  இரசாயனங்களின்  அடர்த்தி  இக்காற்றை  நாம் சுவாசிக்கும்  போது    பலவிதமான  மூச்சு  சம்மந்தமான  நோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது
      
   ந்த  சுழலில்  நாம்  அறையில்  வைக்கப்படும்  கொசுவர்த்திகள்  மூச்சு குழலை .  பாதிக்கிறது. மூச்சுக்காற்றின்  வழியாக  நச்சு  உள்சென்று  நுரையீரல் , இதயம்  போன்ற  இடங்களில்  பாதிப்புகளை உண்டாக்குகிறது . தேவைன்றி  உள் செல்லும்  இந்த நச்சு காற்று   நீர்க்கோவை , சளி , காய்சல் போன்றவை  ஏறப்படுகிறது .சிலருக்கு  மூக்குநாள அழற்சி  தோன்றுகிறது . இதனால்  சிலருக்கு  ஒவ்வாமை  ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் பல பாதிப்புகளை உடல் ஏற்கிறது
   
     கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட்  ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து  கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுவர்த்திகளினால் வரும் காற்றை பிறந்த குழந்தைகள் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படுவதாக லக்னோ பல்கலை கழக ஆய்வு எச்சரிக்கறது. மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொசு விரட்டிகளை ஓட்ட பயன்படுத்தப்படும் ரசாயனம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொசு விரட்டியில்லுள்ள ட்யேக்சின் புற்றுநோயை உண்டாக்ககூடியது. அலேத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்லமெல்ல குறைக்கும் தன்மை உடையது என்கிறார்கள்.

    வற்றிலிருந்து தப்பிப்பது இயற்கையான ரசாயன கல்லப்பில்லாத மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதான கொசுவர்திகளை பயன்படுத்துவதும் கொசுவலைகளை பயன்படுத்துவதும்   தீர்வாக அமையும்.          More than a Blog Aggregator

செப்டம்பர் 23, 2010

உளவியலும் நோயும்

உளவியலும் ...
காரணமாம் .... நோய்களை ..
கூவி  அழைத்திடவே .


எரிச்சல்  தொடர்ந்திடவே ...
எரிந்தது  விடும்
அடிவயிறும் ...
வாயில்  நீரூறும்
இரைபையும்  குடல்கலுமே
புண்ணே  தோற்றம்
கொள்ளும் .

கண்கள்  சிவந்திடவே ...
பரபரப்பு  கொண்டால்தான் ...
இதயம்  பழுதடையும்
எகிறிவிடும்  குருதியழுத்தம்
இதயம்  கேடுவாணேன்...
சினத்தை  விட்டூழிப்போம் .

அச்சம்  தொடர்ந்திடத்தான்...
மூத்திர  காய்களும்
பழுதடையும் ...
அச்சம்  அழித்திட்டால்...
வாழ்வும்  நமதாகும் .

பிணிக்கு  காரணமாம் ...
உளவியலே  என்பதனை ...
கண்டவர்  சித்தர்கள்தான் .

திருமுலரும்...
வள்ளுவரும்  சொல்லாத ...
உளவியலா ?
அறிவியல்  புதுமைகளை
அடுக்கி  காட்டியதை
ஏன்மறந்தீர் ?
பெருமை  பேசவில்லை ...
உரிமை  கொள்ளாமல்
விலங்காய் வாழ்வதுவும்  ஏன் ?
தமிழனே  இப்படித்தான்
விழுந்தது  கிடப்பானோ ?
அடிமை போதுமடா?
விழித்து எழுவதெப்போ ?

எம்மின  மக்களெல்லாம்
அழுவது  கேட்கலையோ ?
சாவது  ஒருநாள்தான்
வரலாற்றில்  நின்றுவிட
வழிஏதும்  கிடைக்கலையோ ?

கண்களை  அழித்துக்கொண்டு ...
கைத்தடியினை  தேடுவதேன் ?
மண்டியிட்டு  வாழ்வதைவிட ...
சாவது  நலனன்றோ ?
சுவற்றை  அழித்துவிட்டு
ஓவியம்  தீட்டலமோ ?

நாம் ...
முன்னவர்  கண்டதை
விட்டுவிட்டு
புரட்டுகின்றீர்....
மருட்டுகின்ற
மருத்துவத்தை ...

தமிழர்  செழித்திடதன் ..
உலகும்  செழித்து நிற்கும் .
உலகோர்  நோய்
நீங்கிடத்தான்
ஏற்றம்பெற  மருத்துவத்தை ...
மாற்றம் இன்றி  ஏற்றுக்கொள் ..
உணர்வு  கொண்டிங்கே
தமிழம்  எங்கும்
வாழட்டும்
நோய்வென்று
நீடுவழ்வோம் .....More than a Blog Aggregator

செப்டம்பர் 20, 2010

வாழையின் மருத்துவ குணங்கள்

நம்மில்  பலராலும்  விரும்பி  உண்ணப்படும்  வாழையின்  பொருட்கள் எல்லாமே  மருத்துவ  குணம்  நிறைந்து  உள்ளது  என்பதை  நாம் அறிவோமா ?  வாழை பொருட்களான  பிஞ்சு , காய் , தண்டு ,இலை  , பட்டை, என  அனைத்து  பொருள்களுமே  மருத்துவ  குணம் நிறைந்தவை .  வாழையின்  அனைத்து  பொருட்  களிலும்  நோய்  நீக்கும்  தன்மை  உள்ளன .
வாழைப்பழம்   
     பொதுவாக  எந்தப்  பழங்களையும்  உணவுக்கு  முன்தான்  உண்ணவேண்டும் 
அப்படி எடுத்துக்  கொண்டால்தான்  அதில் உள்ள  முழுமையான  சத்துகள்  நமக்கு  கிடைக்கும் ..  மேலும்  வாழைப்பழம்  உடல்  சூட்டை தணிக்கும் .  மலசிக்கலை தீர்க்கும் .
குருதியை  உண்டாக்கும்  ஆற்றலும்  உண்டு . இது உடலை  வளர்க்கும்  தன்மையும்  உண்டு . இதில்    " எ " சத்து  நிறைந்து  உள்ளதை  நாம்  அறிவோம் .   இதனால்  பல், கண் ,
போன்ற  உறுப்புகளுக்கு  சக்தியை  தரும் . நேந்திரம்  பழம்  நல்ல  பசியுண்டக்கி  என்பதால்  பசி  குறைந்தவர்கள்  நாளும்  மேற்கண்ட்ட  பழத்தை   உண்டுவர  நல்ல பலனை  காணலாம் . வாழை  பழத்தை   பொறுத்தவரை  கோழையை  உண்டாக்கும்
என்பதால்  கோழை  நிறைந்தவர்கள்  உண்பதை  குறைக்கலாம் .
   
வாழை  பழத்தில்  அடங்கிய  சத்துகள் .
ஈரம்  61 .4 % ,  புரதம்  1 .3 % கொழுப்பு  0 .2 % தாது   0 .7 % சர்க்கரை  பொருட்கள்  36 .4 %
சுண்ணாம்பு 0 . 01 % என  கண்டறியப்பட்டுள்ளது .    
வாழைப்பூ   
    பழத்தை  போலவே  பூவிலும்     மருத்துவ குணங்கள்  நிறைந்துள்ளது .  வெப்பம்
நீங்கும் , காசம், கைகள் எரிச்சல்  மூலநோய் , நீரிழிவு , வயிட்ற்று  கடுப்பு ,  வெட்டைநோய் ,  போன்றவைகள்  நீங்கும் , ஆண்மை பெருகும்  .சீதக்  கழிச்சல்  காலங்களில்  பிட்டை  போல்  அவித்து  சாரை கறிவேப்பிலை  சேர்த்து  எருமை  தயிரில்
கொடுக்க  நல்ல பலனை  காணலாம் .
      பெண்களுக்கு  வாழைப்பூ மிகவும்  நல்லது  பெரும்பாடு காலங்களில்  அதிகமாக  பயன் படுத்த    நல்ல பலனை காணலாம் .

வாழைப்பிஞ்சு 
         துவர்ப்பு  சுவை  உடைய  வாழை  பிஞ்சு  வயிற்று  புண்ணை  நீக்கும் .குருதி கடுப்பு
உள்ள மூல நோய்   நீரிழிவு   போன்றவை    குணமாகும் .
 வாழைக்காய் .
      நீரிழிவு  உள்ளவர்கள்  அதிகம்  சேர்க்கலாம் . நோய் கட்டுப்படும்  வாயு  தொந்தரவு 
உள்ளவர்கள்  குறைத்து  உண்ணலாம் . பூப்பெய்திய  பெண்கள்  வாழை  காய் தோல்  நீக்கி  உண்ண  குருதி பெருக்கு கட்டுப்படும் .
 
வாழைஇலை 

               வாழைஇலையில்  உண்பதை  அனைவரும்  விரும்புவர்   இதனால்  மென்மை உணர்வுகள்  மிகும்  உடல் சூட்டை  தனிக்கும்  . கோப குணம் கொண்டவர்கள்  தொடர்ந்து   இலையில்  உண்ண  கோபம் குறையும் . தீசுட்ட  புண்ணில்  இலையை   வதக்கி  கட்டலாம்  வாழை  இலையில்  படுக்கவைக்கலம் .


வாழைத்தண்டு
       உடலில்  உள்ள கொழுப்பை  குறைக்க  நினைப்பவர்கள்  வாழைத்தண்டை  ஒன்று  விட்டு ஒருநாள்  உண்ண  நல்லபலனை  காணலாம் . நீரடைப்பு , நீர்  எரிச்சல்  சிறுநீரககள்
போன்றவை  நீங்கும் .     ஆக  எளிதில்  கிடைக்கும்  வாழையை  பயன்படுத்தி  நோய்  வெல்வோம் . சித்தமருத்துவம்  காப்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...