செப்டம்பர் 16, 2010

இயற்கையை வணங்குவோம் .

 இயற்கை  வளத்தை 
  போற்றிடுவோம் .
  உலகில்  இன்பம் 
  கண்டிடுவோம் . 
  காற்றில்  கலக்கும் 
  மாசினை  தான்
  கலந்தது  விடாமல் 
 காத்திடுவோம் . 
 விரும்பிய  மரங்கள் 
 வளர்த்திடுவோம் 
 வேண்டிய  மழையினை 
 பெற்றிடுவோம் 
 அணுவின்  அழிவை 
 தடுத்திடவே  
 இயற்கை  வளத்தை
 காத்திடுவோம் ....
 இன்பம்  நிறைந்த  
 வழ்விதுவே 
 இயற்கை  சார்ந்து 
 வாழ்வதுதான் .
 உயிரை  போற்றி 
 வளர்ப்பது  போல் 
 இயற்கை  வளங்களை 
 வளர்த்திடுவோம் .




   More than a Blog Aggregator

.நோவை ஓட்டுவோம்.

சித்தர்கள்   - நம் முன்னவர்கள் 
காட்டிய வழிதன்னில்  
சென்றிடவே  -தீதில்லை .....
ஈட்டிய  பெருஞ்செல்வம்  
அழித்திட   தேவையில்லை 
காட்டிய வழிதன்னில் 
கடுமையில்லை --அனால் 
கட்டுப்   பாடுண்டு .
வைகறை  துயில் எழுந்து ...
ஈற்று  உணவை (கழிவுகள் )
நீக்கிக்  கொண்டு 
தூய  நீர்பருகி 
எரியோம்பல் (ஆசனபயிற்சி )
செய்திடவே  உடல் 
அனைத்தும்  உறுதிபெறும் .
வளியை(காற்றை) நெறிப்படுத்தி
உள்  வாங்கி கொண்டல்தான் ...
உளவாட்றல்  உயர்வடையும் 
உள்ளத்தை  செழுமையாக்கி ...
ஓரம்ச  சிந்தையாலே(தியானம் )
நாளைத்தான்    செலவிட்டால் ...
அந்  ந்ளெல்லாம்  இனியநாள்.
கம்போ  , கேழ்வரகோ ,சோளமோ
கைகுத்தல்  அரிசியோ ...
பக்குவமாய்  உணவாக்கி 
கீரை ,காய்கள் , தூய்மை 
செய்த  பருப்புகள்  பழம்சேர்த்து 
இளியம்(இரசாயணம் )
நீக்கி  -மண்ணில்  
ஏனம்(பாத்திரம்) செய்தது 
மகிழ்வோடு  உண்டிடவே ...
நோய்  இன்றி  வாழ்ந்திடலாம் .
இடை  உணவாய் 
பழசாறும்  பாகுநீரும் (பானகமும் ) 
பருகிடலாம்        .
வாரத்திற்க் இருநாள்தான் வெந்நீரில் 
எள்  நெய்குளியல் ...
ஆண்டிற்க்   கிருநாள்தான் ....
கழிச்சல் செய்துகொள்க 
திங்களிர்க்  கிருநாள்தான் ...
இல்லற   உறவு ...
நூறாண்டு   வாழ்ந்திடவே ...
நல்லநெறி  இதுவாமே.




More than a Blog Aggregator

செப்டம்பர் 13, 2010

கீரைகள் மருத்துவம் .

@ புளிசக்  கீரை , முளைக்கீரை , இரண்டையும்  சேர்த்து  சாப்பிட்டால்  நன்கு  பசி  உண்டாகும். .
@ மணத்தக்காளி  கீரை , பருப்புக்  கீரை  இரண்டையும்  சேர்த்து  உண்ண வயிற்றுபுண்
குணமாகும் .
@ முளைகீரை , வெந்தயக்கீரை , மனத்தக்களிகீரை , சேர்த்து  சிறு பருப்புடன்  உண்ண  நோய்  எதிர்பற்றல்  உண்டாகி   நோய் விலகும் .
@ கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி  சேர்த்து கீரைத்தண்டையும்  சேர்த்து சமைத்து  உண்ண  மூட்டு  வலிகள்  வாதநோய்கள்  நீங்கும்  நோய்  எதிர்பு  ஆற்றல் கூடும் .
@ முளை  கீரையுடன் ,வல்லாரை  கீரை  சேர்த்து   பருப்புடன்  உண்ண  நினைவாற்றல்  கூடும் .
@ நச்சு கொட்டை கீரையை  பருப்பு சேர்த்து   உண்ண  வாயிற்று  புண்  ஆறும் .
@ மூஞ்சியில்  உள்ள   பரு  பாலுண்ணி  மறைய   அம்மன்  பச்சரிசி செடியை  ஒடித்தால்
வரும்  பலை தடவ   நல்லகுணம்  கிடைக்கும் .
@ துத்திக் கீரையை  மஞ்சள்  சேர்த்து  விளக்கெண்ணையில்  வதக்கி  கட்டினால்  மூல  நோயில்  உண்டாகும்  வலிகள் நீங்கும் .
@ நல்ல  வேலை  கீரையுடன் (கைப்பிடி ) மூன்று  மிளகு மஞ்சள்  சேர்த்து  காலையில் உண்ண vayidru   பூசிகள்  ,புழு , நாக்குப்புசிகள்   நீங்கும் .
@ காணாம்  வாழையை   கைப்பிடி  அளவு  அரைத்து  சாப்பிட  உடல்  சூடு  குறையும் .
@ காணாம்  வாழையை   அரைத்து  சாப்பிட்டால் சிறுநீர் எரிசல்  தீரும் .
@ காணாம்  வாழையுடன் துத்தியை  அரைத்து  சாப்பிட  மலசிக்கல்  தீரும் .
@ குப்பை கீரையை  தொடர்ந்து  சாப்பிட  உடல்  எடை குறையும் .
@ முடக்கத்தான்  கீரையுடன்  சிறிது  சதக்குப்பை  சேர்த்து  கசயமக்கி  சாப்பிட சிறுநீர்  தாரளமாக  பிரியும் .
@ லெட்டுஸ்   கீரையை  தொடர்ந்து சாப்பிட   குருதி  துய்மை  அடையும் .
@ கொடி பசலை  கீரையையும்   கொத்தமல்லி விதை, சீரகம்  இவற்றை கசயமக்கி   சாப்பிட   மலசிக்கல்  குணமாகும் .
@ காசினி   கீரையுடன் சீரகம் ,மஞ்சள்  சேர்த்து  கசயமக்கி   சாப்பிட  கல்லீரல்  வீக்கம்  குணமாகும் .
@ தூது  வலை  கீரையை  சூரணித்து  நாளும்  உண்டுவர  காது  தொடர்பான பிணிகள் , தடுமன்  நீங்கும்.                 More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...