செப்டம்பர் 10, 2012

பகுத்துண்ணப் பழகுவோம்



         மனிதனைத் தவிர்த்து   நோய்வந்த  நிலையில்  விலங்குகள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்கவே செய்கிறது  அல்லது நோயை நீக்கிக் கொள்ள போராடுகிறது  நோயுடன் கண்டதை தின்று வாயை கட்டாமல் உண்டு  கொழுப்பதில்லை  விலங்கினங்கள்.  ஆனால் மனித படித்தவன்  முதல் பாமரன் வரையிலும்  உணவைத் தவிர்க்க சொன்னால்  நம்மை ஓருமாதிரி பார்க்கிறார்கள் . அறிவை ஏற்ப்பதில் சிலருக்கு  குழப்பம் மட்டுமல்ல அறியாமையும் கூடவே  சேர்ந்து விடுகிறது பாவம் விடுங்கள்    அவர்கள் அறியாமையில் உள்ளார்கள்   .

        உணவு  என்பது  மனித உடலுக்கும்  உயிர்வாழ்த்தலுக்கும்  இன்றியமையாத   உணவாக  இருக்க  வேண்டும்  ஆனால் இன்று  உண்ணப்படும்  உணவு  முறை  மனிதனை  நோயாளியக்ககுகிறதேயன்றி   மனிதனை  முறையான  வழிநடத்தவில்லை  . இது   எங்கிருந்து  பெறப்பட்டது  என்பது  உண்மையில்  நமக்கு  புரியவில்லை   பழந்தமிழரின்  உணவு  முறை  என்பது  உலகினுக்கே   வழிகாட்டியாகவும்  பழந்தமிழ  உணவுமுறை  ஒரு   கட்டமைப்புடன்  இருக்கும்  அதாவது  முதலில்  இனிப்பு   இருக்கும்  பின்னர்  பருப்புகலந்த  நெய்யும்  சேர்ந்து  இருக்கும்  அதற்க்கு  பின்னர்  சற்று  காரம்  சேர்ந்த  உணவுகளும்  பின்னர்  சாத்துநீர்  (ரசம் ) கலந்த  உணவு  அதற்க்கு  பின்னர்  மோர்  இருக்கும்   இவைகள்   எல்லாம்    முறையான  உணவு  முறையை  கண்டதாகவும்  செரிப்பதற்கு   எளிமையனதகவும்  நோயை வரவழைக்காத  வுணவு  முறையாகவும்  இருந்தது  . ஆனால் இன்று  முறையில்லாத  உணவுப்  பழக்கம்  முன்பு  முறையான  உணவுகள்  இருந்த   இடத்தில்  நோயை வரவழைக்கும்   முரியில்லாத  உணவுகள்  இவைகள்  மனிதனை   முற்றாக    நோயாளியக்குதன்றி  வேறொன்றும்   செய்யவில்லை   இந்த  பிழையான  உணவுமுறையை  சொன்னாலும்  சிலர்  அதற்க்கு  நீங்கள்  பொறுப்பேற்க முடியுமா    என   சவால் விடக்கூடும்      .

        உணவுமுறை  முறையான  உணவுத்திட்டம்  கொண்டு    இருக்கவேண்டும்  இந்த  உணவுத்திட்டமானது  நோயின்றி  வாழ்வதற்கு  இன்றியமையாத  வனாக  இருத்தல்  வேண்டும்  அப்படி  எல்லாம்  பார்த்துக்  கொண்டு  இருப்பதில்லை  இன்றைய   இளைய  சமூகம்   இதை  எல்லாம்   சொல்லவும்  விடுவதில்லை   சொல்லுவதுமில்லை   மனிதனை  நோயாளியாக்கும்   சப்பைக்கட்டு  கட்டும்  பேர்வழிகளின்  கழிச்சல்  கூரமக்கி  அதில்  சுகமாக  குளிர்  காய்கின்றனர்  . முதலின்  உணவினை  பகுத்து  உன்னப்   பழக    வேண்டும் .எந்த  உணவு  நல்லது  நோயைதராமல்  முழுமையாக   உடலைவளர்க்கும்   என்பதை  முறையனவர்களிடம்  கேட்டுப்  பழக  வேண்டும் 
சாதாரண   தடுமன்   (சளி  ) குளிர்  காய்ச்சல்  என  எடுத்துக்   கொள்வோம்  இந்த  நேரத்தில்  குளிர்ந்த  சீத   வீரியம்  கொண்ட  உணவுகளை  தவிர்க்க வேண்டும்   காய்ச்சல்  உள்ள  நிலையில் உணவைத்தவிர்த்து  எளிமையான  உணவாக    அரிசி  கஞ்சி   எடுப்பது  மிகவும்  முறையான  சரியான  உணவுத்திட்டமாக  இருக்கும்   இதைவிட்டுவிட்டு  உடல்  பாழடைந்த  நிலயில்  மீண்டும்   மீண்டும்  உடலை  கடினமாக  வேலை  வாங்க  கூடாது   இப்படி   செய்வதால்   உடல்  கேடு  அடையும்  என்பதில்   எந்த  ஐயமும்  கொள்ளத்  தேவையில்லை  .

       குளிர்கால  நோய்கள்  என  எடுத்துக்  கொள்வோம்   இந்த  நோய்களுக்கு  சீத  வீரிய  உணவுகள்  பகையானது   முதலில்  நட்புணவு  பகை  உணவு  எது  என  துல்லியமாக  கணிக்கத்  தெரிந்து  கொள்ளவேண்டும்   தெரியவில்லை  என்றால்   முறையனவர்களிடன்  கேட்டு  தெரிந்து  கொள்ளவேண்டும்  . குளிர்கால  நோய்  என   கொள்வோம்  இந்த  இலையில்  சீத  வீரியம்  கொண்ட  உணவுகளை  கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்  அப்படி இல்லையெனின்  நோய்   தீவிரம்  அடையும்  அதேபோல  மூட்டுவலிகள்  எனின் மூட்டுவலியை மிகயாக்கும் கிழங்கு வகைகள் பருப்புவகைகள்  முறையில்லாத  அமிலத்தன்மை கொண்ட உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்

       இன்றைய உணவுகள் அளவிற்கதிகமான  கொழுப்பு சத்து கொண்டவையாக உள்ளன ஆனால் சரிவிகித உணவாக இருக்க  வில்லை . உணவு என்பது வயிறு  நிறைவதற்கு  என எண்ணிவிடுகின்றனர்   அப்படி எல்லாம் இல்லை உடல் உறுப்புகள் அனைத்திற்க்கு தனித்தனியான  சுவைகள் கொண்ட  தனியான  சத்துகள் கொண்ட உணவாக  இருக்க வேண்டும்  அப்படி இல்லாமல் ஒரேமாதிரியான உணவுகள் மனிதனை நோயாளியாக்கும்

எனவே முறையான உணவுகளைத்  தெரிவு செய்து உன்னப் பழகி  உண்ணத்  தெரிந்தவனுக்கு  நோயில்லை எனற  பழந்தமிழரின் கோட்பாட்டை  கடைபிடிப்போம்

குறிப்பு :      நமது  முந்தைய  பதிவை  படித்துவிட்டு  கோவி . கண்ணன்  என்பவர்  நமது இடுகையிலும்  அவரின்  இடுகையிலும்  தனியான முட்டாள்களுக்காக  எழுத வேண்டி  உள்ளது  என  பாவம் தனது இடுகையில்  எழுதி  என்னை முதல் ஆக்கி தன்னை  மிகவும் அறிவளியாக்கி  இருந்தார்  உண்மையில்  நீங்கள்  அறிவாளியாக  இருந்தால்  உண்மையான தவற்றை  சுட்டி காட்டி இருப்பீர்கள்  யார்  முட்டாள் யார் தவறான  வழிகாட்டுகிறார்கள்  என்பதை இந்த  சமூகம் தன்  முடிவு செய்ய வேண்டும்  இது போன்ற  இழிவான  விமர்சனங்களை  தவிர்க்க  விரும்புகிறோம் .
உங்களின் முட்டாள்  என்ற  எனக்கான  பட்டத்திற்கு  நன்றி  கோவி . கண்ணன்  நீங்க உண்மையில்  அறிவாளிதான் .

சித்தமருத்துவ்ங்  காப்போம்  நோய் வெல்வோம்

        
More than a Blog Aggregator

1 கருத்து:

  1. வாழ்வு முழுக்க வரும் நோய் வரும்வரை பலருக்கு தெரிவதில்லை... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...