மனித உடல் அமைப்பு என்பது கோடான கோடி உயிரிகளைக் (செல்களைக் ) கொண்டது என்பதை நாமறிவோம் அந்த உடலை உயிர் ஆற்றலை முழுமையாக காக்கிறார்களா என்றால் இல்லை இல்லவே இல்லை என மறுப்பச்சமின்றி கூறலாம் இன்றைய தனியுடமை வாழ்க்கைமுறை மனிதனை பாடாய் படுத்துகிறது என்பது எத்தனைபேர் உணர்ந்து கொண்டர்கள் என்பது ஆய்வுக்குரிய செய்தி .இந்த விரைவான வாழ்க்கைமுறையில் பொறுமை என்பது கொஞ்சமும் இருப்பதில்லை . இந்த பரபரப்பும் விரைவும் மனிதனை நோயாளி ஆக்குகிறது என்பது ஏன் புரியவில்லை ? காரணம் இன்றைய சமூக அமைப்பு அவனை நாய் கழுத்தில் கட்டிவிடப்பட்டு விரைந்து ஓட்டப் படுகிற நிலையில் கொஞ்சமும் வெட்கமின்றி ஓடுகிறான் . இதுதான் வாழ்க்கைமுறை என எண்ணுகிறான் . சரியானதை சரியானவர்கள் சொல்வதை ஏற்கும் நிலையில் அவனில்லை இதுதான் இன்றைய மூகாமையான சிக்கல் . புரிய வைத்து விட்டால் ....
இன்று நாம் தமிழர்களை வாழ்கை முறையை மாற்றி முழுமையாக வாழ பழக்குகிற வாய்ப்புகளைத் தேடி தருகிறோம் எங்கு தவறுகிறான் எங்கு தடுமாறுகிறான் என புரிய வைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் . இதற்காக விடியலை உடைப்போம் என்ற நமது ஒரு சிறிய அளவிலான புத்தகம் அச்சேறாமல் தமிழர்களுக்காக காத்து கிடைக்கிறது பொருளாதார காரணகளினால்.... . வரும் போது தமிழர்கள் விழிக்கும் முறைகளை சிந்திப்போம்.
கற்பம் தின்னலாமா ?
ஆமாம் சித்தர்கள் கூரிய படிக்கு கற்ப மருந்துகளை சித்த மருத்துவர்களின் கைவண்ணத்தில் கண்டறிந்த வற்றை தின்ன பார்க்காலாம் .... அனால் அதற்கும் ... சில கட்டுப் பாடுகளை வைத்துள்ளனரே சித்தர்கள் அது என்ன?
காணாது சித்தர்க்குக் காயம் வலுநிற்க
ஏணாகாத் தின்ன விரைந்தமுறை கேளு
ஈணாக வயது இருபதில் மண்டலம்
பூணா வறுபதில் போல்ரொட்டித் தின்னிடே .
சித்தர்களைத் தவிற மற்ற பேர்களுக்கு காயம் (தேகம் ) அதிக நாட்கள் திடமாக நிற்காது ஆகவே கற்ப்பம் உண்ணும் முறையைக் கேள் இருபது வயதில் கற்ப்பங்களை ஒரு மண்டலாம் வீதம் உட்கொள்ள வேண்டும் ஆனால் அறுபது வயதை கடந்தால் கற்பங்கள் இரண்டு மண்டலம் தின்ன வேண்டும் என்கிறார் திருமூலர் .
இன்றைய நிலையில் இந்த கற்ப மருந்துகளைத் தின்னும் நிலையில் இல்லை தின்றாலும் பலன் தரும் நிலையில் மனித உடல் இருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டும் இந்த இடுகையின் முதலில் குறிப்பிட்டதைப் போல மனித உடல் கோடானு கோடி செல்களின் கட்டமைப்பு என்பது நாமறிவோம் . ஆனாலும் முறையில்லாத வாழ்க்கைமுறை முறையில்லாத வாழ்க்கைமுறை போன்றவற்றினால் வழிதடுமறிப் போயிருக்கிறான் தமிழன் அவற்றில் இருந்து மீண்டு உடலில் தேங்கியுள்ள இதளியங்களையும் (இரசாயணம்) தேங்கியுள்ள நச்சுக் களையும் நீக்கிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் உடலை நாம் விரும்பியபடிக்கு மற்ற முடியும் என்றும் இளமையாக இருக்க முடியும் .
ஆமே இக்கற்ப்பம் அறிந்தவர் கொள்ளுவார்
காமே விகாரத்தில் கசப்பென்பார் காட்டதே
தாமே புளிப்பு தள்ளட்டால் பொய்யாகும்
காமேவி யுண்டது நாடோர்க்குஞ் சொன்னேன் .
திருமூலர் மனிதனை முறைப்படுத்துகிறார் நான் கூறும் கற்ப மருந்துகளை அறிந்தவர் உண்பார்கள் . ஆனால் உலா வாழ்க்கையில் சஞ்சரிப்பவர்கள் எதிர்ப்பார்கள் / தூற்றுவார்கள் .
அதனால் இதை அவர்களுக்கு காட்டதே புளிப்பை நீக்காமல் கற்பத்தை உட்கொண்டால் காய சித்தி பொய்யாகும் கற்ப முறைகளை காவி உடுத்தி காட்டை நோக்கி செல்பவர்களுக்காக சொன்னேன் என்று அறி. என தெளிவாக்குகிறார் .
முதலில் வள்ளுவத்தை உள்வாங்கிக் கொள்ளவேண்டும் அதாவது வாழ்க்கைமுறையை முறையாக கட்டமைத்துக் கொண்டால் நோய் விலகும் அல்லவா ? அதைத்தான்
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்கிறார் .
ஒன்றுகொன்று முரண்பட்ட உணவுகளை ஒதுக்கி அளவிற்கு மிகாமல் உண்டு முறைப்படி வாழ்கிறவர்க்கு நோய் இல்லை என்கிறார் . எவ்வளவு தெளிவான பார்வை ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்னதான தமிழர்களின் அறிவியல் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்
மேலும் அடித்த பதிவிலும் பகிர்ந்து கொள்வோம் அதுவரை ....
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்
தெளிவான பதிவு ... சிந்திக்க வேண்டும்...மக்கள்... பதிவுக்கு என் வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்கு