பிப்ரவரி 15, 2011

நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

Indli -  Tamil
நகர மயமாதலும் பெருகும் உளவியல் நோய்களும்

இன்றைய வாழ்க்கைமுறை பணத்தை மட்டுமே பெரிதென எண்ணுகிறது . வெறுமனே குறியீடாகி போன பணம் மனிதத்தை சிதைத்து சின்னாபின்னமாகி விடுகிறது . ஒரு மனிதனைப்பற்றிய கருத்தாக்கம் அவனின் மரபுவழிப்பட்ட அறிவைவிட அவன் சேர்த்து வைத்துள்ளபொருளின் அடிப்படையிலேயே இப்போது மதிப்பிடப்படுகிறது .இது மனிதன் நோயாளி ஆகி விட்டத்தின் காரணமாக எனலாம் . பணம் மட்டுமே எப்படி வாழ்க்கை ஆகிவிடமுடியும் ? பணம் மட்டுமே வாழ்க்கை என்பது அந்த கோட்டையின் நுழையும் முன்னம் மனித தன்மையை இழக்க செய்து மனிதத்தை பொறி (இயந்திரம் ) ஆக்கிவிடுகிறது . அதுமட்டும் அல்லாமல் மனிதநேயம் ,நேர்மை,இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தல் என்பன வெல்லாம்
கேள்விக்குறியதாகவும்,கேலிக்குரியதகவும் ஆக்கிவிடுகிறது

இன்றைய உற்பத்திமுறை

இன்றைய உற்பத்திமுறை தேவைக்கானதாக இல்லாமல் சந்தைக்கனதாக இருப்பதால் அது மனிதனை பேயாட்டம் ஆடவைக்கிறது .

முதலில் வருகின்றவர்களுக்கே கிடக்கும் வாய்ப்புகள் அடிமையாக இருத்தல் கேள்விகேட்காமை போன்ற காரணங்களினால் பணி வாய்ப்பு நிலைக்கும் என்பதால் இவற்றின் தாக்கங்களினால் மனிதம் பொறியாகி கடுமையான உள தாக்கங்களினால் பொறி சீக்களியாகிறது . அதனால் தான் செயலாற்றும் திறனை இழந்து நீரிழிவு (சக்கரைநோய் ), இதய கோளாறுகள் ,சிறுநீரக செயலிழப்புகள் ,மூச்சிறைப்பு (ஆஸ்துமா ) போன்ற அந்த இயந்திரத்தின் கட்டமைப்பையே கெடுத்து வனாள் முழுவதும் அந்த பொறியை பழுது பார்க்கவே தன் முழு
திறனையும் செலவிடவேண்டிய தேவையை உருவாக்கிவிடுகிறது . இது அடுத்தகட்ட
மனிதத்தை சிதைக்கும் காலம் எனலாம்.

கல்விமுறை


இன்றைய கல்விமுறை
வாழ்க்கைக்கான கல்விமுறையாக இல்லாமல் அடிமையை உருவாக்குகிற கல்விமுறையாக இருப்பதனால் மனிதம், மனிதநேயம், என்ற அடித்தளத்தை ஆட்டம் கொள்ள செய்து மனித உறவுகளையே கேள்விக்குறியாக்குகிறது .
இந்த கல்விமுறை இளமையில் எல்லா உறவுகளும் ஆறாவது விரலாக மாறிவிட்டது . இதனால் வழிகாட்டிய தாத்தா,பாட்டி உறவுகள் சிதைந்து உறவுகள் குறித்த சிக்கலை இன்றைய இளைய தலைமுறை சந்தித்து வருகிறது . நம் பண்பாடு , உலகே வியந்து பார்க்கும் கூட்டு குடும்ப உறவுகள் வினாக்குறியாகிவிட்டது . இது நகரமயமாதல் என்ற போலித்தன வாழ்க்கையினால் ஆனதன்றி வேறல்ல

சுற்று சூழல் கேடு .

நகர்புறத்திலேயே எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதால் ஊர்ப்புறங்களை விட்டு பேருரை நோக்கி படைஎடுக்கின்றனர் .
பேரூர் தொழிற்சாலைகளின் கழிவைமட்டுமே தாங்கி நிற்ப்பதால்
நோய்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போய்விடுகிறது . இடநெருக்கடி காரணமாகவும் தொழிற்சாலைகள் , ஆலைபுகை,வாகனங்கள் புகை என சுற்று சூழல் கேடு அடைந்து
வளி(காற்று ) மண்டலம் மாசு அடைந்து தூய்மையான காற்று ,நீர்
என்பது எல்லாம் எட்டாத இடத்தில் சென்றுவிட்டது
தூய்மை இல்லாத நீர் சிறுநீரகம் மற்றும் பல்வேறு குடல் சம்ந்தமான நோய் களுக்கு காரணமாகிறது . மாசு அடைந்த வளி மூச்சு மண்டலம் நுரையீரல் கேடு அடைகிறது . முறையில்லாத உணவுகள் கட்டுப்பாடு இல்லாத உணவுகள்பதற்றம் ,பரபரப்பு போன்ற வற்றினால்
மனிதனின் உன்னதமான உடல் உறுப்புகள் கெடுகிறது
.
ஒளி ஒலி மாசுஅடைதல்

வளி ,வளிமண்டலம் க்டுவதினால் பல்வேறு நோய்கள் தோற்றம் கொள்ளுவது போலவே ஒலி ,மற்றும் ஓளி மாசு செய்யும் சேட்டைகள் எண்ணிலடங்கா .செவி மண்டல கோளாறுகள் பதற்றம் , எரிச்சல் , சினம் , போன்றகண்ணுக்கு தெரியாத உளவியல் நோய்கள் தோன்றி மனிதத்தை சிதைக்கியது .

இட நெருக்கடி

இட நெருக்கடி, இட பற்றாக்குறை போன்றவை பல்வேறு நோய்களை உண்டாக்கு கிறது .புதிய புதிய நோய்களை தோற்றம் கொள்ள செய்கிறது . பரிணாம வளர்சியடைய வைக்கிறது . குறிப்பாக மனிதம் இயற்கையாக வெளிப்படுத்த வேண்டிய ஈட்ருணவு(மலம் )சிறுநீர் ,குடல் காற்று , கண்ணீர் , போன்ற வற்றை வலிந்து அடக்குவதலும் , உடலில் தேங்குவதாலும் , அரச உறுப்புகள் எல்லாம் கெடுகிறது. பெண்கள் இவற்றான் அடையும் துன்பங்கள் எண்ணிலடகா
பலர் இதனால் விலை மதிப்பில்லாத வாழ்க்கையை மடித்து கொள்ளுகிறனர் . பூப்பு கால சிக்கல் அவர்களை படாத பாடு படுத்துகிறது .

புவி வெப்பம் அடைதல்

இது குறித்த எமது தனியான இடுகை உள்ளது காண்க .

புவி வெப்பம் அடைதல் முறையில்லாத உணவுகள் எப்போதும் கிளர்ச்சி யூட்டகூடிய சூழல் ,பாலியல் தொடர்பான சிந்தனை பாலியல் தொடர்பான காட்சிகளை பார்த்தல் போன்ற காரணங்களினால் பாலியல் தொடர்பான சிக்கல் களுக்கு ஆளாகின்றனர் .
இன்றைய புவி வெப்பம் அடைதல் காரணங்களினாலும் பாலியல் சிக்கல் தோன்றுகிறது .

பேருரை விரிவு படுத்த நீர் நிலைகள் கால்வாய்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டதாலும் மழை நீர் தேங்க வழி இன்மையாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும் கடல் நீர் நிலத்தினுள் புகுந்து நிலத்தையும் நீரையும் கெடுத்து விடுகிறது . மண்வளத்தை கேடு அடைய வைக்கிறது . ஆக மனித இனம் நகர மயமாக்கல் என்ற வறட்டு தனமான கொள்கையினால் இந்த புவிப்பந்தே வாழ இயலாத கோலமாகி வருகிறது .

அறிவுலகமே , ஆற்றல் மிகுந்தோரே, உலகினுக்கொல்லம் அறிவையும் ,வானியலையும் , அறிவியலையும் , மெய்மங்களையும் மருத்துவத்தையும் , மனித வாழ்வுக்கான இலக்கணத்தையும் கட்றுத் தந்த இனம் என்ற வகையில் மூத்த மொழிக்கு உரியவர்கள் என்பதாலும் இந்த குமுக மாற்றத்திற்கு திறவுகோலாக செய்க இயலவில்லை யாயின் செய்கிறவர்களை செய்ய விடுக்க . நல்லதை செய்ய வழிசமைப்போம் வருக .
பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம்
மனித இனத்தை நோயிலிருந்து காப்போம் .

இந்த இடுகை எம்மை இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்திய நண்பர் சுகுமாரன் கேட்டு கொண்டமைக்கிணங்க பதிவு செய்ய படுகிறது

More than a Blog Aggregator

12 கருத்துகள்:

 1. ஒவ்வொரு கருத்தும், சிந்திக்க வைக்கிறது..... இதற்கு ஆவன செய்யப்பட்டு, இப்பொழுதே கவனிக்கப்பட்டால் தான், எதிர் காலத்தில் பேரழிவுகளைத் தவிர்க்க முடியும்.

  பதிலளிநீக்கு
 2. பெரிய விசயத்தை கூறி இருக்கீங்க ...
  நிச்சயம் எல்லோரும் சிந்திக்க வேண்டும் ...

  பதிலளிநீக்கு
 3. அதே ஆற்றல் மிக்கவர்கள்தான் அழிவுக்கும் காரணம் தயா.நிச்சயம் சிந்தித்தால நல்லது சம்பந்தப்பட்டவர்கள் !

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. மிக நல்ல விடயங்களை அலசியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. Word verification
  இத எடுத்து விடுங்க.... உங்க அடையாளப்படம் மிக பொருத்தம்....

  பதிலளிநீக்கு
 7. விஞ்ஞானம் வளர வளர ஒரு பக்கம் பிரச்சனையும் வளருதுங்க...

  நன்றீங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  பதிலளிநீக்கு
 8. நண்பரே உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது வருகை தரவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/6-sunday-in-valaichcharam-rahim-gazali.html

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 10. தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு. அருமை. நன்றிகள்.

  பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...