ஜூலை 11, 2011

உள ( மன ) நோய்க்கு ஒரு மருந்து .




எதிலும் அவசரம் பரபரப்பு போன்றவை நிறைந்த இன்றைய நாளில் உள நோய் என்பது எளிமையாகி விட்டது .இந்த நோய் ஆளாளுக்கு வேறுபடுகிறது . இந்த நோயே இன்றைய எல்லா நோய்களுக்கும் காரணமாகிறது .

உளம் (மனம்) என்ற உறுப்பு

மனித உடலில் மனம் என்ற தனியான உறுப்பு ஒன்றுமில்லை . இந்த உளத்தை (மனம் ) மூளை மற்றும் நரம்பு மண்டலம் என நாம் கூறலாம். இதுதான் உளம் எனதமிழிலும் மனம் என வடமொழியிலும் வழங்கப்படுகிறது .


உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர்.

சினம் இறக்க கற்றலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் என் பராபரமே என்கிறார் தாயுமானவர் . அதனால்தான் அவர் தாயும் ஆனார்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்கிறார் திருமூலர் .

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்கிறார் வள்ளுவப் பேராசான் .

இவைகள் எல்லாமே உள்ளத்தை அடிப்படையாக கொண்டவைகளே .
வள்ளுவர் கூறும்போது ஒருவன் எந்த பொருளில் இருந்து பற்று அற்று விலகி நிற்கிறானோ அந்த பொருளினாலே துன்பம் இல்லை என்கிறார் . ஆக இன்றைய உள நோய்களுக்கு வீணான தேவையில்லாத ஏக்கங்களும் கனவுகளும் மூகமையான காரணமாகிறது .
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக் கேடும்நோய் என பதிவு செய்கிறார்
விருப்பு வெறுப்பு அறியாமை ஆகிய இந்த குற்றங்கள் இல்லாமல் விட்டொழித்து வாழ்ந்தால் நமக்கு வருவதுற்குரிய துன்பங்கள் இல்லை என்கிறார் வள்ளுவப் பேராசான் .


உள (மன ) நோய் என்பது .

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்கிறார் நம் பாட்டி ஔவை . தனி மனிதனின் மன நிலை அரக்கனின் தொழிற்சாலை என்கிறான் ஒருவன் . இந்த மன பிழற்ச்சி நோய்க்கு அடிப்படை காரணமே ஏதாவது ஒன்றின் மேல் எண்ணத்தை ஊன்றி தனக்கென ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு அதை நடைமுறை படுத்தும்போது அதில் தோல்வி அடைந்தால் அதை மன நோயாக பதிவு செய்கிறோம்.
நல்ல கணவன் இல்லை,நல்லமனைவி இல்லை ,தாய்தந்தை இல்லை ,என உறவுகளுக்காக ஏங்குவது ஒருவித மனநோய் இல்லாத ஒன்றை தானே கற்பிதம் செய்துகொண்டு நோயாளியாவது ஒருவகை
இந்த உலகில் என்னைபோல சிறந்த அறிவாளி இல்லை என சிலர் கற்பிதம் செய்து கொள்ளுகின்றனர் தான் சொல்லுவதை யாரும் கேட்பதில்லை என்பார்கள் கேட்கிறமாதிரி சொன்னீர்களா என கேட்டால் விழிப்பார்கள் . ஆக நோயும் நோய்க்கு மருந்தும் நீயே என வள்ளுவர் காமத்து பாலில் ஒரு இடத்தில் பதிவு செய்து இருப்பார் அக அதுமாதிரி இவர்கள் தன்னுடைய நோய்க்கு தானே காரணமகிறனர் .

அறிஞ்சர் பெருமக்கள்

எம் இனமான வாழும் ஒரே தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் குறிப்பிடுவார்கள் பாதையை தேடாதே உருவாக்கிகொள் . என்பார் அதுபோல நாம் பாதையை நாமே உருவாக்கி கொண்டால் சிக்கல் தீரும்தனே .

காரல் மார்கஸ் அவர்களை உங்களுக்கு பிடித்தனமது எது என கேட்டதற்கு அவர் உடனே சொன்னது போராட்டம்என எதனைபோருக்கு இந்த போராட்டம் பிடிக்கும் ஆக மனிதன் வாழ்வை எங்கோ தேடிக்கொண்டு இருக்கிறான் . ஆனால் வாழ்வு அவனுள்ளே இருக்கிறது .

மந்திரமல்ல வாழ்வு

மந்திரத்தால் மாங்காய் விழவேண்டும் அதுவும் தான் மடியில் விழவேண்டும் என நினைகிறார்கள் இது அறியமையான்றி வேறல்ல . நமது இலக்கு எதுவுமே முயன்று தேடாமல் கிடைத்துவிடுவதில்லை தேடவேண்டும் . தேடும்போது தான் கிடைக்கும் தேடாமல் எதுவும் கிடைபதில்லை . தேடலுக்கான முறையான காரணமும் இருக்கவேண்டும் .

மனிதன் களிமண் அல்ல

சிலரின் குண நலனும் ஒரு சிலரை பாதித்து மன நோயாளி யாகிவிடுகிறனர். மனிதனுக்கு மனிதன் தனியான குண நலன்கள் இருக்கிறது எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க இயலாது . இந்த வேறுபாட்டை நாம் உள்வாங்கி கொண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ இயலும் .

வீண் கவலைகள்

சிலர் தானே ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு எந்த முன்னேர்பாட்டையும் செய்து கொள்ளாமல் எனக்கு வெற்றி கிடைக்க வில்லை என கவலை கொள்ளுகிறனர் . உங்களுக்கான உண்மையான தேடலை முறையான வழிகாட்டலை உரியவரிடம் கேட்டு வெற்றிக்கான பாதையை உருவாக்கி கொள்ளவேண்டும்

எல்லா கவலைகளும் தீர்க்க கூடியதே

மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும் என பதிவு செய்கிறார் திருமூலர் அதாவது உள நோய்க்கு மருந்து உண்டு என்பது திருமூலரின் வாதம் .மன நோய்க்கான காரணங்களை பட்டியலிடுங்கள் பார்வையில் படும்போது எல்லாம் கூர்தீட்டுங்கள் பின்னர் அதன்மீது நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள் என்கிறார் ஒரு மன நல மருத்துவர் நாம் நினைத்து கொண்டிருப்பது போல எல்லா சிக்கல் களும் தீர்க்க முடியாதவைகள் அல்ல தீர்க்க கூடியதே .

சித்தர்கள் உலகில் அறிவில் சிறந்தவர்கள் மனிதனின் எல்லா நோய்களுக்கும் அதன் அறிவியல் அடிப்படையில் இருந்தே மருந்தை கண்டார்கள் . மன நோய்க்கு அடிப்படை காரணம் பித்தம் மிகையாதல் இந்த பித்தத்தின் சீற்றத்தினால்தான் . நோய் தோற்றம் கொள்ளுகிறது என அறிவிக்கிறனர் இந்த நோய்க்கு மருந்து களையும் சொல்லுகின்றனர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் தூய்மை அடையவும் துரிதமாக பணியாற்றவும் இந்த மருந்துகள் உதவிடகூடும்.
அதிமதுரம் , கோட்டம், மஞ்சிட்டி ஏலக்காய், நெல்லிமுள்ளி ,சிறுநாகப்பூ , சடமாஞ்சில்,சந்தனம்,கிராம்பு, தாளிசபத்திரி,சீரகம் . இவைகளை முறைப்படி உண்டு வர நல்ல உளவற்றால் கிடைத்து வாழ்க்கை இனிக்கும் .

இது குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்வோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

4 கருத்துகள்:

  1. படித்து மிகவும் பிரமித்து போனேன் ..
    தொடர்ந்து நல்ல பதிவுகள் தர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. நோயும் மருந்தும் நாங்களேதான்.
    எப்பவும்போல வாழ்வியல் சொல்கிறது பதிவு !

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு
    மனம் குறித்து தாங்கள் விளக்கிப்போகும்
    விளக்கங்கள் மிக மிக அருமை
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
    தூக்கம் குறைபாடு உள்ளவர்கள்
    அதிக கார உணவு வகைகளை உண்பவர்கள்
    இவர்கள்தான் அதிகம் மன உளைச்சளுக்கு ஆளாகிறார்கள்
    காரணம் உடலில் பித்தம் (சூடு) கூடுவதுதான்
    காரணமாய் இருக்கும் என நினைக்கிறேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...