அக்டோபர் 28, 2010

மயிர் உதிர்தல் ஏன் ?


மயிர் உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்
தலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனே உதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .
தலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .
எப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .
பொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்
அதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்
நோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .
பழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .
நோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .
இயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .
வாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்து விட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .
இப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா ? யாருக்கு வெளிச்சமோ
தலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்
சீயக்காய் - ஒருபங்கு
மணிப்புங்கன் - கால்பங்கு
கடலைபருப்பு - ஒருபங்கு
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம்
செம்பரத்தை - தேவையான அளவு
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு
சடமான்சில் - ஐம்பது கிராம்
என தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் .
தலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி
தலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்
கண்களையும் காக்கிறது
தலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .
வாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .
இரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .
உப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .
உப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .
வாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .
பொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை
பயன்படுத்தி நீக்கிக் கொள்க .

இலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்
முசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடுவழ்வோம் .
More than a Blog Aggregator

7 கருத்துகள்:

  1. நன்றி தயாநிதி... இந்த சீயக்காய் + மூலிகைகள், எங்க கிடைக்கும்?.

    I am in blore and I am not sure where to get it. Do you know any ready made powder, which I can use directly?

    பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள குறிப்புகள். மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...